இரண்டாம் உலகப் போர் முடிந்து, இருபத்தொன்பது ஆண்டுகள்   கடந்த பின்னரும், ஒரு ஜப்பானிய போர் வீரர் ஹீரூ ஒனோடா காடுகளுக்குள் தன்னை ஒளித்துக் கொண்டிருந்தார், தன்னுடைய நாடு சரணடைந்து விட்டது என்பதை நம்ப மறுத்தார். ஜப்பானிய இராணுவ தலைவர்கள், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகளை இரகசியமாக வேவு பார்க்க, அவனை ஒரு தனிமையான தீவுக்கு அனுப்பியிருந்தனர். சமாதான பேச்சு வார்த்தை கையெழுத்தான பின்பும், பகைமை ஓய்ந்த பின்பும் அவன் அந்த காடுகளிலேயே   இருந்தான். 1974 ஆம் ஆண்டு, அவனுடைய இராணுவ அதிகாரி    அந்த தீவுக்குச் சென்று, அவனைக் கண்டு பிடித்து, யுத்தம் முடிந்து விட்டது என்பதை நம்பும்படிச் செய்தார்.

30 ஆண்டுகளாக இந்த மனிதன், ஒரு தனிமையான தீவில்      வாழ்ந்தான், ஏனெனில், அவன் சரணடைய மறுத்தான், போர் முடிந்து விட்டது என்பதை நம்ப மறுத்தான். நாமும் இத்தகைய தவறுகளைச் செய்ய நேரலாம். “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ் நானம் பெற்றோம்” (ரோம.6:3) என்று அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு அதிர்ச்சியைத்தரும் உண்மையை தெரியப்படுத்துகின்றார். ஒரு வல்லமையான, வினோதமான வழியில், சாத்தானின் பொய்யையும், சாவின் பயங்கரத்தையும், பாவத்தின் வல்ல பிடியையும், இயேசு சிலுவையில் கொன்று விட்டார். எனவே நாம் “பாவத்திற்கு மரித்தவர்களாயும்”, “தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும்” (வ.11) இருக்கின்றோம். நாம் இன்னமும் அடிக்கடி, பிசாசு நம்மேல் ஆதிக்கத்தை வைத்திருப்பதாக எண்ணுகின்றோம். நாம் சோதனைகளுக்கு இடம் கொடுக்கின்றோம், பாவத்தின் மாயைக்கு அடிமையாகின்றோம், பொய்க்குச் செவி சாய்க்கின்றோம், இயேசுவை விசுவாசிக்க தவறுகின்றோம். ஆனால், நாம் இவற்றிற்கெல்லாம் செவிசாய்க்கத் தேவையில்லை. தவறாக கூறப்படும் கரியங்களின் படி நாம் நடக்கத் தேவையில்லை. தேவனுடைய கிருபையால், கிறிஸ்து வெற்றிச் சிறந்த உண்மை கதையை நாம் பற்றிக் கொள்வோம்.

நாம் இன்னும் பாவத்தோடு போராடிக் கொண்டிருந்தால், இயேசு யுத்தத்தில் வெற்றி பெற்று விட்டார் என்ற செய்தியைப் பற்றிக் கொள்வோம், நாம் விடுதலை பெறுவோம். தேவனுடைய வல்லமையால், அவருடைய உண்மையை வாழ்ந்து காட்டுவோம்.