Archives: ஆகஸ்ட் 2020

காலா காலங்களாகப் பயணிக்கும் கடிதங்கள்

ஒவ்வொரு ஆண்டும், 10 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள், அகில உலக கடிதம் எழுதும் போட்டியில் கலந்து கொள்கின்றனர். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் கருப்பொருள், “நீ உன்னை, காலா காலங்களாகப் பயணிக்கும் ஒரு கடிதமாக கற்பனை செய்து கொள். உன்னுடைய வாசகர்களுக்கு என்ன செய்தியைக் கொடுக்க விரும்புகின்றாய்?” என்பது.

வேதாகமத்தில் அநேக கடிதங்களை நாம் காண்கின்றோம். பரிசுத்த ஆவியானவரின் அகத்தூண்டுதலாலும், வழி நடத்தலாலும் எழுதப் பட்ட இக்கடிதங்கள், பல காலங்களின் வழியாக பயணம் செய்து நம்மை வந்தடைந்துள்ளன. கிறிஸ்தவ சபைகள் பெருகின போது, இயேசுவின் சீஷர்கள், ஐரோப்பாவிலும், ஆசியா மைனரிலும் உள்ள சபையின் மக்கள், கிறிஸ்துவில் பெற்றுக்கொண்ட புதிய வாழ்வை புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்படி, கடிதங்கள் எழுதினர். இந்த கடிதங்களின் தொகுப்புகளை இன்று நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம்.

இக்கடிதங்களை எழுதிய ஆசிரியர்கள், வாசகர்களுக்கு என்ன செய்தியைக் கொடுக்க விரும்பினார்கள்? யோவான் தன்னுடைய முதல் கடிதத்தில், “ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப் பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவ வார்த்தையைக் குறித்து” எழுதுகின்றார் (1 யோவா.1:1). அவர், தான் நேரடியாகச்     சந்தித்த, ஜீவனுள்ள கிறிஸ்துவைக் குறித்து எழுதுகின்றார். தன்னுடைய வாசகர்கள், “ஒருவரோடொருவர் ஐக்கியம் உள்ளவர்களாகவும்”, “பிதாவோடும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும்” ஐக்கியமுள்ளவர்களாக இருக்கும்படி இவற்றை எழுதுகின்றார் (வ.3). நாம் ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் உள்ளவர்களாக இருக்கும் போது நம்முடைய சந்தோஷம் நிறைவாய் இருக்கும் என்று எழுதுகின்றார் (வ.4). வேதாகமத்திலுள்ள இந்த கடிதங்கள், காலங்களை கடந்து வந்து நம்மை ஐக்கியத்திற்குள் இழுக்கின்றது, நித்திய தேவனோடு ஐக்கியமாக இருக்க அழைக்கின்றது.

கிறிஸ்துவின் மரணம் நமக்கு வாழ்வைக் கொடுக்கின்றது

தெற்கு அமெரிக்காவில் வாழ்ந்த ஜோனா என்ற பெண், சிறைச்சாலையில் வாழும் கைதிகளுக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கொடுப்பதன் மூலம், அவர்களுக்கு நம்பிக்கையை வழங்குவதில் கருத்தாயிருந்தார். ஜோனா அனுதினமும், மன்னிப்பையும், மனம் பொருந்துதலையும் பற்றிய ஒரு சிறிய சுவிசேஷ செய்தியுடன் சிறைக்கைதிகளைச் சந்தித்து வந்தாள். அவள் அந்த கைதிகளின் நம்பிக்கையைச் சம்பாதித்தாள், அவர்களும் தங்களின் குழந்தைப் பருவத்தில் தங்களுக்கு இழைக்கப் பட்ட    அநீதிகளைப் பகிர்ந்து கொண்டனர். அவளும், முரண்பாடுகளை எப்படி தீர்த்துக் கொள்வது என்பதைப் பற்றி அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தாள். அவள் அங்கு செல்வதற்கு முந்தின ஆண்டு, அந்த சிறைச் சாலையில், 279 வன்முறைச் செயல்கள், கைதிகளுக்கிடையேயும், காவலர் மீதும் நடத்தப்பட்டதாகவும், அடுத்த ஆண்டு, இரண்டு வன்முறைச் செயல்கள் மட்டுமே       நடந்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின” (2 கொரி.5:17) என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகின்றார். புதிதாக்கப்படுதலை ஃப்ளான்டர்- தாமஸ் கண்டது போல நாம் காணாவிட்டாலும், சுவிசேஷத்தின் வல்லமையே உலகிற்கு பெரும் நம்பிக்கையூட்டும் வல்லமை. புதிய படைப்புகள் என்பது எத்தனை ஆச்சரியமான      சிந்தனை! இயேசு கிறிஸ்துவின் மரணம், நம்மை அவரைப் போல மாற்றும் ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்கின்றது. நாம் அவரை முகமுகமாய் சந்திக்கும் போது, இந்த பயணம் முடிவடைகின்றது (1 யோவா. 3:1-3).

இயேசுவின் விசுவாசிகளாகிய நாம் புதிதாக்கப்பட்ட நம் வாழ்வைக் கொண்டாடுகின்றோம். ஆயினும் கிறிஸ்து அதற்காகச் செலுத்தின கிரயத்தை மறந்து விடக் கூடாது. அவருடைய மரணம் நமக்கு வாழ்வைக் கொடுக்கின்றது. “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” (2 கொரி .5:21).

விட்டு விடுதல்

“உன்னுடைய தந்தை மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றார்” என்று அவரை கவனித்துக் கொண்டிருந்த செவிலியர் கூறினார். “மரணத்தை நெருங்குதல்” என்பது ஒருவருடைய வாழ்வின் கடைசி நிமிடங்களைக் குறிக்கும், ஆனால் அது எனக்குப் புதியதாக      இருந்தது, ஒரு ஒற்றையடி பாதையில் தனிமையாக பயணம் செய்வதைப் போல் தோன்றியது. என்னுடைய தந்தையின் கடைசி நாளில், என்னுடைய சகோதரியும் நானும் அவருடைய படுக்கையின் அருகில் அமர்ந்திருந்தோம், நாங்கள் பேசுவதை அவரால் கேட்க முடியுமா என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. அவருடைய வழுக்கைத் தலையை முத்தமிட்டோம். தேவன் அவருக்குத் தந்துள்ள வாக்குத் தத்தங்களை மெதுவாக கூறினோம். நாங்கள் ஒரு பாடலைப் பாடி, சங்கீதம் 23 ஐ வாசித்தோம். நாங்கள் அவரை நேசிக்கின்றோம், அவர் எங்கள் தந்தையாக இருப்பதற்காக நன்றி கூறினோம். அவருடைய இருதயம் இயேசுவோடு இருக்க விரும்புவதை நாங்கள் அறிவோம், எனவே அவரிடம் இயேசுவிடம் போகலாம் என்று விடை கொடுத்தோம். இந்த வார்த்தைகளைச் சொல்வது தான், அவரை அனுப்பிவிடுவதில் சந்தித்த மிக வேதனை தரும் தருணம். சில நிமிடங்களில், நித்திய வீட்டில் அவரை மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

நமக்கு அன்பானவர்களை வழியனுப்புதல் என்பது வேதனை தருவதாக உள்ளது. இயேசுவின் நண்பனான லாசரு மரித்தபோது, இயேசுவின் கண்கள் கண்ணீர் விட்டன (யோவா. 11:35). ஆனால், தேவன் நமக்கு வாக்களித்துள்ளபடி, இவ்வுலக மரணத்திற்கு பின்பும் நமக்கொரு நம்பிக்கையுள்ளது. “கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது என்று சங்கீதம் 116:15 சொல்கின்றது. அவர்கள் மரித்தாலும் மீண்டும் வாழ்வார்கள்.

“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” என்று இயேசு கூறுகின்றார் (யோவா.11:25-26). நாம் எப்பொழுதும் தேவனுடைய பிரசன்னத்தில் இருப்போம் என்ற செய்தி எத்தனை ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

தந்தையின் வழியிலே

ஒரு பழங்கால கதையில், ஒரு பேராசையுள்ள பணக்கார பண்ணையார், ஒரு வீட்டையும் அதனோடு சேர்ந்த கிணற்றையும் ஓர் ஏழை விவசாயிக்கு விற்றார். மறுநாள், அந்த விவசாயி கிணற்றிலிருந்து தண்ணீரை தன்னுடைய வயலுக்குப் பாய்த்தான்.  அதைக் கண்ட அந்த பண்ணையார், அவனிடம் அந்தக் கிணற்றைத்தான் விற்றேன், அதிலுள்ள தண்ணீரையல்ல என்பதாக மறுப்பு தெரிவித்தார். கவலையுற்ற விவசாயி, அரசன் அக்பரின் அவைக்குச் சென்றான். இந்த வினோதமான வழக்கை கேட்ட அரசன், தன்னுடைய புத்திசாலி மந்திரி பீர்பாலிடம் ஆலோசனை கேட்டான். பீர்பால் பண்ணையாரிடம், “உண்மைதான், கிணற்றிலுள்ள தண்ணீர் விவசாயிக்குச் சொந்தமானதல்ல, அந்தக் கிணறு பண்ணையாருக்குச் சொந்தமல்ல. எனவே தண்ணீரை கிணற்றில் சேமித்து வைக்க விவசாயிக்கு வாடகை கொடுக்க வேண்டும் என்றார். தன்னுடைய தந்திரம் பலிக்காத்தால், பண்ணையார் அந்த  வீட்டையும் கிணற்றையும் குறித்த உரிமையை வாபஸ் பெற்றார்.

சாமுவேல் தன்னுடைய குமாரரை இஸ்ரவேலின் மேல் நியாயாதிபதிகளாக ஏற்படுத்தினான். அவர்கள் பேராசையால் இழுக்கப்பட்டனர். அவனுடைய குமாரர் “அவன் வழிகளில் நடவாமல்” (1 சாமு. 8:3) பொருளாசைக்குச் சாய்ந்தனர். சாமுவேலின் நேர்மைக்கு மாறாக, அவனுடைய குமாரர் “பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்”. தங்களின் பதவியை தங்களுடைய சொந்த நலனுக்குப் பயன்படுத்தினார்கள். இந்த நியாயமற்றச் செயல், இஸ்ரவேலின் மூப்பர்களையும், தேவனையும் மனம் வருந்தச் செய்தது. இதன் காரணமாக, அநேக இராஜாக்கள் இஸ்ரவேலை அரசாளும்படி வந்தனர் என்பதைப் பழைய ஏற்பாட்டின் பக்கங்களில் காண்கின்றோம் (வ.4-5).

தேவனுடைய வழியை விட்டு விலகும் போது, நற்பண்புகள் மாறி, அநியாயம் தலைதூக்குகின்றது. தேவனுடைய வழிகளில் நடக்கும் போது, நேர்மையையும், நியாயத்தையும் நம்முடைய வார்த்தைகளிலும் செயலிலும் காணமுடியும். இத்தகைய நற்குணங்கள் அவர்களோடு முடிந்து போவதில்லை, அதை பார்க்கும் மற்றவர்களும் பரலோகத்தின் தேவனை மகிமைப் படுத்துவார்கள்.