நாங்கள் எங்கள் வீட்டின் வெளியேயுள்ள பாதையில், பயணத்தைத் துவக்கிய போது, என்னுடைய மனைவி உற்சாகத்தோடு, எங்களின் மூன்று வயது பேரன் அஜயிடம், “நாம் ஒரு விடுமுறையைச் செலவிடச் செல்கின்றோம்” என்று கூறினாள்.  சிறுவன் அஜய், சிந்தனையோடு அவளைப் பார்த்து, “நான் விடுமுறைக்காகச் செல்லவில்லை, நான் ஒரு பணிக்காகச் செல்கின்றேன்” என்றான்.

“ஒரு பணிக்காக”ச் செல்கிறோம் என்ற கருத்தை, என்னுடைய பேரன் எங்கிருந்து கற்றுக் கொண்டான் என்பதை நாங்கள் அறியாவிட்டாலும், நான் விமான நிலையம் நோக்கி காரை ஓட்டிச் செல்லும் போது, அவன் கூறியது எனக்குள் ஒரு                   சிந்தனையைத் தந்தது. நான் இந்த விடுமுறையில், என்னுடைய வேலையிலிருந்து ஓர் இடைவெளியில், சில நாட்களைச் செலவழிக்கச் சென்றாலும், என்னுடைய மனதில், நான் இன்னும் “பணியில் இருக்கிறேன்; ஒவ்வொரு மணித்துளியையும் தேவனுக்காக, தேவனோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடிருக்கிறேனா? நான் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும், தேவனுக்குப் பணி செய்ய வேண்டும் என்பதை  நினைவில் வைத்திருக்கின்றேனா?” என கேட்டுக் கொண்டேன்.

ரோமப் பேரரசின் தலை நகரான ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளை உற்சாகப் படுத்துவதற்காக, அப்போஸ்தலனாகிய  பவுல், “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்” (ரோம. 12:11) என்கின்றார். இயேசுவுக்குள் நம் வாழ்வு, ஒரு நோக்கத்தோடும், உற்சாகத்தோடும் வாழும்படியே கொடுக்கப்பட்டுள்ளது என்கின்றார். நாம் உலகப் பிரகாரமான காரியங்களில் ஈடுபட்டிருக்கும் போதும், நாம் தேவனை எதிர்பார்ப்போடு நோக்கிப் பார்த்து அவருடைய  நோக்கத்திற்காக வாழும் போது, புதிய அர்த்தத்தைப் பெற்றுக் கொள்வோம்.

நாங்கள் இரயில் வண்டியில், எங்களின் இருக்கைகளில் அமர்ந்த போது, “தேவனே, நான் உம்முடையவன், இந்த பயணத்தில்  நான் என்ன செய்ய விரும்புகிறீர் என்பதை, தவறாமல் செய்ய எனக்கு உதவியருளும்” என்று ஜெபித்தேன்.

ஒவ்வொரு நாளும் நாம் தேவனோடு, அழியாத முக்கியத்துவம் வாய்ந்த பணியை நிறைவேற்றுகின்றோம்!