காவலர் ஒருவர், கதவு ஒன்றில், அது அடித்து மூடிவிடாமல் இருக்கும்படி, அதில் ஒட்டப்பட்டிருந்த நாடாவைக் கண்டு அதை அகற்றினார். பின்னர், மீண்டும் அக்கதவை சரிபார்த்த போது, அதில் திரும்பவும் நாடா ஒட்டப்பட்டிருந்ததைக் கண்டார், உடனே அவர் காவல் துறையினருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார், அவர்கள் வந்து 5 கள்ளர்களைப் பிடித்தனர்.

அமெரிக்காவில் பிரசித்திப் பெற்ற அரசியல் கட்சியின் தலைமையகமாகச் செயல்படும், வாஷிங்டன் டி சி யிலுள்ள வாட்டர் கேட் கட்டடத்தில் பணிபுரிந்த போது, இந்த இளம்காவலர்,  பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த மிகப் பெரிய ஊழலை வெளிக்கொண்டுவர காரணமாயிருந்தார், அவர் தன் வேலையை மிகக் கவனமாகச் செய்ததாலேயே அதனைக் கண்டுபிடிக்க முடிந்தது.                                                       எருசலேம் அலங்கத்தை திரும்பக் கட்டும் வேலையில் நெகேமியா ஈடுபட்டிருந்தார். அந்த வேலைக்கு அவர் அதிக முக்கித்துவம் கொடுத்தார். அந்த திட்டம் முடியும் தருவாயில் இருந்த போது, அருகிலிருந்த எதிரிகள், அவரை அருகிலுள்ள ஒரு கிராமத்துக்கு    வந்து, அவர்களைச் சந்திக்கும்படி கேட்டுக் கொண்டனர். நண்பர்களைப் போல நடித்து, மாய வலையை விரித்தனர். இந்த நயவஞ்சகர்களுக்கு ( நெகே. 6:1-2). நெகேமியா கொடுத்த பதில் அவருடைய மனத்தெளிவை நமக்கு காட்டுகின்றது. “நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக் கூடாது; நான் அந்த வேலையை விட்டு, உங்களிடத்திற்கு வருகிறதினால், அது மினக் கட்டுபோவானேன்?” என்கின்றார் (வ.3).

அவருக்குச் சில அதிகாரங்கள் உறுதியாக இருந்த போதும், அவர் தன்னை மிக உயர்ந்த ஹீரோவாக நினைக்கவில்லை. அவர் ஒரு யுத்த வீரரும் அல்ல, கவிஞரும் அல்ல, தீர்க்கதரிசியும் அல்ல, அரசனும் அல்ல, துறவியும் அல்ல. அவர் ராஜாவுக்கு ரசம் பறிமாறும் தற்காலிக வேலையாள். ஆனாலும் அவர் முக்கியமான தேவப் பணியைச் செய்வதாக நம்பினார். நாமும், தேவன் நமக்கு கொடுத்துள்ள வேலையை மிக முக்கியமாகக் கருதுவோம். அவர் காட்டும் வழியில், அவருடைய வல்லமையால் அதனைச் சிறப்பாகச் செய்வோம்.