Archives: பிப்ரவரி 2020

நாம் செய்கின்ற காரியங்கள் முக்கியமானவையா?

நான் என் தலையை கரங்களால் தாங்கியவளாய் பெருமூச்சோடு, “நான் எல்லாவற்றையும் எப்படி முடிக்கப்போகின்றேன் என்றே தெரியவில்லை” என்றேன். என்னுடைய சிநேகிதனின் குரல் தொலைபேசியில் கரகரத்தது, “நீ உன்னைப் பாராட்டிக்கொள்ள வேண்டும், நீ நிறைய காரியங்களைச் செய்கின்றாய்” என்றான். அத்தோடு நான் செய்கின்ற காரியங்களைச் சொல்ல ஆரம்பித்தான். ஒரு சுகமான வாழ்க்கையை நடத்துகின்றாய், வேலைக்கு செல்கின்றாய், பள்ளியிலும் சிறப்பாகச் செய்கின்றாய், எழுதுகின்றாய், வேதாகம வகுப்புக்கும் செல்கின்றாய் என்றான். நான் இவற்றையெல்லாம் கர்த்தருக்கென்றே செய்கிறேன், நான் செய்கின்றவற்றில் கவனம் செலுத்துகிறேன், ஆனால் எப்படி செய்கின்றேன் என்பதைக் கவனிப்பதில்லை. ஒரு வேளை நான் அதிகமான காரியங்களைச் செய்ய முயற்சிக்கலாம்.

தங்களுடைய வாழ்வின் மூலம் தேவனை மகிமைப்படுத்த வேண்டுமென கொலோசே சபை மக்களுக்கு பவுல் அறிவுறுத்துகின்றார். மொத்தத்தில், அனுதினமும் நாம் செய்கின்ற வேலைகளையும் விட அவற்றை எப்படிச் செய்கின்றோம் என்பதே முக்கியமாகும். அவர்கள் தங்களுடைய வேலைகளை, “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு” செய்யக்கடவர்கள் என்கின்றார். “ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் (வச. 13-14), இவை எல்லாவற்றின் மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள் (வச. 14), நீங்கள் எதைச் செய்தாலும், அதைஎல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள் (வச. 17). கிறிஸ்துவைப்போல வாழும் போது, நம் வேலையை அதனின்று பிரிக்கமுடியாது.

நாம் செய்கிற வேலை முக்கியமானது தான், ஆனாலும் அதை ஏன், எப்படி, யாருக்காகச் செய்கிறோம் என்பதே மிக முக்கியமானது. ஒவ்வொரு நாளும் நாம் மன அழுத்தத்தோடு வேலை செய்வதையா அல்லது தேவன் மகிமைப் படும்படி வேலைசெய்து, அதில் இயேசு அர்த்தத்தைக் கொடுக்கும்படியாக செய்வதையா எதைத் தேர்ந்து கொள்கின்றோம். இரண்டாவதை நாம் தேர்ந்து கொண்டால், மனதிருப்தியைப் பெற்றுக்கொள்வோம். 

இரக்கத்தின் புலம்பல்

என்னுடைய தந்தை சுகவீனமானபோது, மாந்திரீகத்தினாலேயே தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டினார். அவருக்கு எட்ஸ் வியாதி. அவர் மரித்தபோது, அவருடைய பத்து வயது மகள் மெர்ஸி, தன்னுடைய தாயாரை மிகவும் அண்டிக்கொண்டாள். அவளுடைய தாயாரும் சுகவீனமானார், மூன்று ஆண்டுகள் கழித்து அவளும் மரித்துப் போனாள். அதிலிருந்து மெர்ஸியின் சகோதரிதான் தன்னுடைய ஐந்து உடன்பிறப்புகளையும் வளர்த்தாள். அப்பொழுதுதான் மெர்ஸி தன்னுடைய ஆழ்ந்த வேதனைகளைக் குறித்து எழுத ஆரம்பித்தாள்.

எரேமியா தீர்க்கதரிசியும் தன்னுடைய வேதனைகளைக் குறித்து எழுதிவைத்தார். இந்த வேதனையான புலம்பல் புத்தகத்தில், யூத ஜனங்களுக்கு, பாபிலோனிய போர் வீரர்களால்  இழைக்கப்பட்ட வெறுக்கத்தக்கச் செயல்களைக்குறித்து எழுதுகின்றார். இதில் பாதிக்கப்பட்ட சிறுபிள்ளைகளுக்காக எரேமியாவின் உள்ளம் வேதனையடைகிறது. “என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது” என்று கதறுகின்றார், “என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம்… குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள்” (2:11) என்கின்றார். யூதா ஜனங்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்தார்கள், ஆனால் அவர்களுடைய குழந்தைகள் அதற்கான கிரயத்தைச் செலுத்துகின்றார்கள். “அவர்கள் தங்கள் பிராணனை தங்கள் தாய்களின் மடியிலே விடுகிறார்கள்” என்று எழுதுகின்றார் (வச. 12).

இத்தனை துயரங்களையும் கண்ட எரேமியா தேவனை விட்டு விலகி விடுவார் என நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் அவரோ எஞ்சியிருக்கிற ஜனங்களை நோக்கி, “ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப் போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப் போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு” (வச. 19) என்கின்றார்.

மெர்ஸியும் எரேமியாவும் செய்தது போல நம்முடைய இருதயத்தை தேவனிடம் ஊற்றிவிடுவது நல்லது. மனித வாழ்வில் புலம்புவது என்பது ஒரு கடினமான பகுதி. அத்தகைய வேதனையை தேவன் அனுமதித்தாலும், அவரும் நம்மோடு சேர்ந்து வருத்தப்படுகின்றார். அவருடைய சாயலில் நாம் உருவாக்கப்பட்டுள்ளோம், அவரும் நம்மோடு புலம்புகின்றார்!

தெரிவுகள் நிறைந்த ஒரு உலகில் தேவனை ஆராதிப்பதற்கு 3 சவால்கள்.

எழுதியவர் மெடலின் டுவ10னிää ஜெர்மனி

 

தேவனைத் தொழுதுகொள்வதையும்ää அவரோடு நேரம் செலவிடுவதையும் நான் மிகவும் விரும்புகிறேன்.
தினமும் காலையில்ää ஜெபம்ää இசைää வேதப்படிப்புää மற்றும் குறிப்பு எடுத்தல் என்வவற்றினூடாகத் தேவனை ஆராதிக்க நேரத்தை ஒதுக்குவதற்கு நான் இயன்றளவு முயற்சிசெய்வேன். அர்ப்பணிக்கப்பட்ட இந்த நேரத்தில்ää நான் தேவனுக்கு நன்றி செலுத்திää அவருடைய வார்த்தையைத் தியானிப்பேன். இதற்குப் பதிலாகää தேவனுடைய பிரசன்னம் - ஜெபங்களுக்கு அவருடைய பதில்ää அவர் என்னில் காட்டுகின்ற இரக்கம்ää ஆறுதல் - அவருடைய பெலத்தோடு என்னை நிரப்பும்@ எனக்குச் சமாதானத்தைத் தரும்ää தேவன்…

பாதையை விட்டு விலகாதிருப்பது எப்படி

அமெரிக்கா தேசத்தைச் சேர்ந்த, டேவிட் பிரவுண், ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில், கண்தெரியாதோரில், உலகிலேயே மிகச் சிறந்த ஓட்ட வீரர் என்ற பட்டத்தைப் பெற்றார். அவர் தனக்கு கிடைத்த இந்தப் பாராட்டுதலை தேவனுக்கும், தனக்கு ஆரம்ப நாட்களிலேயே ஆலோசனையளித்த தனது தாயாருக்கும் (“எங்கேயாகிலும் உட்கார்ந்தேயிருக்கக் கூடாது”), ஓட்டத்தில் ஆழ்ந்த அநுபவமுடைய தன்னுடைய பயிற்சியாளரான ஜெரோம் ஏவெரிக்கும் செலுத்தினார். பிரவுணின் விரல்களில் கட்டப்பட்ட கயிறுகளின் மூலம் ஏவெரி, அவனை ஓட்டப் பந்தயங்களில் வெற்றிப் பெறுவதற்கு வழிகாட்டினார், அவர் தனது வார்த்தைகளாலும், தொடுதலாலும் ஏவெரியை வழிநடத்தினார்.

“அவருடைய ஆலோசனைகளுக்கு செவிசாய்த்ததாலேயே” என்று பிரவுண் கூறினான். 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், பாதை வளைந்து செல்லும் போது, “அகன்ற வளைவை எடுக்க வேண்டும்” என்பார். “ஒவ்வொரு நாளும் பொழுதும், ஓட்டத்தைப் பற்றிய நுணுக்கங்களை ஆராய்வோம்”, மேலும், “நாங்கள் வார்த்தைகளால் மட்டுமல்ல, தொடுதல் மூலமாகவும் எங்களுக்குள்ளே கருத்துபரிமாற்றம் செய்துகொண்டோம்” என்றான்.

நம்முடைய வாழ்க்கையாகிய ஓட்டத்திலும், நமக்கொரு பரம வழிகாட்டி இருக்கின்றார்.  நம்முடைய உதவியாளராகிய பரிசுத்த ஆவியானவர், அவருடைய வழியில் நாம் நடக்கும் படி, நமக்கு வழிகாட்டியாக இருக்கின்றார். “உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்” என்று யோவான் சொல்கின்றார் (1 யோவா. 2:26). “நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையும் குறித்து உங்களுக்குப் போதிக்கிறது” (வச. 27) என்கிறார்.

பிதாவையும், அவருடைய குமாரனாகிய மேசியாவையும் மறுதலிக்கிற “அந்திக்கிறிஸ்து” வை (வச. 22), அவருடைய காலத்திலிருந்த விசுவாசிகள் சந்தித்ததாலேயே, யோவான் இந்த ஞானம் நிறைந்த வார்த்தைகளை அவர்களுக்கு எழுதுகின்றார். இவ்வாறு கிறிஸ்துவை மறுதலிப்பவர்களை நாம் இப்பொழுதும் சந்திக்கின்றோம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் நமக்கு வழிகாட்டியாக இருந்து, நாம் இயேசுவைப் பின்பற்றுவதற்கு உதவிபுரிகிறார். அவருடைய சத்தியத்தின் பாதையை விட்டு விலகாதபடி, நம்மை வழிநடத்தும் பரிசுத்த ஆவியானவரை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்வோம்.

தேவனளவு பெரிய அன்பு

டொமினிக்கன் குடியரசுக்கு உட்பட்ட சான்டோ டொமிங்கோ என்ற இடத்திலுள்ள ஒரு பின்தங்கிய வசிப்பிடத்தை நான் பார்வையிட்டேன். அங்குள்ள வீடுகள் எல்லாம் வளைவுகளோடு அமையப்பெற்ற இரும்பு தகடுகளால் அமைக்கப்பட்டிருந்தன, அதில் மின் இணைப்புகள் பாதுகாப்பற்ற முறையில் தொங்கிக் கொண்டிருந்தன. நான், அங்குள்ள குடும்பங்களைச் சந்தித்து, அவர்களோடு நேரடியாகப் பேசுவதற்கு ஒரு வாய்ப்பைப் பெற்றேன். அவர்களின் வேலையில்லா திண்டாட்டம், மது பழக்கம் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதிலிருந்து அவர்களை விடுவித்தல் ஆகியவற்றில், ஆலயங்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதைக் குறித்து கலந்துரையாடினேன்.

ஒரு குறுகிய சந்தில் அமைந்திருந்த, அபாயகரமான ஏணி வழியாக ஏறி, ஒரு தாயாரையும் அவளுடைய மகனையும் பேட்டி எடுத்தேன். ஒரு சில நிமிடங்களில் ஒருவர் வேகமாக வந்து, “நாம் இப்பொழுதே இவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும்”, கொடிய கைக் கோடாரிகளைப் பயன்படுத்தும் ஒரு கூட்டத்தின் தலைவர், நம்மைத் தாக்குவதற்கு கூட்டத்தைத் திரட்டிக்கொண்டிருக்கிறார், என்றார்.

நாங்கள் அடுத்த மக்கள் கூட்டத்தைச் சந்திக்கச் சென்றோம். அங்கு எந்த பிரச்சனையும் வரவில்லை. அதற்கான காரணத்தைப் பின்னர் நான் தெரிந்து கொண்டேன். அங்கு நான் ஒவ்வொரு வீடாகச் சந்தித்தபோது, ஒரு கூட்டத்தின் தலைவன் வெளியே எங்களுக்குப் பாதுகாவலாக நின்றான். அவருடைய மகளின் படிப்பு மற்றும் சாப்பாட்டுச் செலவுகளை அங்குள்ள சபையினர் பார்த்துக்கொள்கின்றனர், விசுவாசிகள் அவளுக்கு ஆதரவாக நின்றதால், அவன் எங்களுக்குக் காவலாக நின்றான்.

மலைப் பிரசங்கத்தின் போது, இயேசு ஒப்பிடமுடியாத ஒரு வகை அன்பினைக் குறித்து விளக்குகின்றார். இவ்வகை அன்பு தகுதியானவர்களை மட்டும் அணைத்துக்கொள்ளும் அன்பல்ல, தகுதியற்றவர்களிடம் காட்டப்படும் அன்பு (மத். 5:43-45), உறவினர்களையும் நண்பர்களையும் தாண்டி, பதிலுக்கு நம்மீது அன்பு செலுத்த முடியாத நபர்களிடம் காட்டப்படும் அன்பு (வச. 46-47). இதுவே மிகப்பெரிய தேவஅன்பு (வச. 48), அனைவரையும் ஆசிர்வதிக்கும் அன்பு.  

சான்டோ டோமிங்கோவிலுள்ள விசுவாசிகள் இந்த அன்பை செயலில் காட்டிய போது, அருகிலுள்ளவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது. கடினப்பட்ட இருதயங்கள், தங்களை ஏற்றுக்கொண்டவர்களின் மீது கரிசனைகாட்ட ஆரம்பித்தன. இந்த மிகப் பெரிய தேவஅன்பு பட்டணங்களுக்குள் வரும் போதும் இத்தகைய மாற்றத்தைக் காணலாம்.