என்னுடைய தந்தை சுகவீனமானபோது, மாந்திரீகத்தினாலேயே தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டினார். அவருக்கு எட்ஸ் வியாதி. அவர் மரித்தபோது, அவருடைய பத்து வயது மகள் மெர்ஸி, தன்னுடைய தாயாரை மிகவும் அண்டிக்கொண்டாள். அவளுடைய தாயாரும் சுகவீனமானார், மூன்று ஆண்டுகள் கழித்து அவளும் மரித்துப் போனாள். அதிலிருந்து மெர்ஸியின் சகோதரிதான் தன்னுடைய ஐந்து உடன்பிறப்புகளையும் வளர்த்தாள். அப்பொழுதுதான் மெர்ஸி தன்னுடைய ஆழ்ந்த வேதனைகளைக் குறித்து எழுத ஆரம்பித்தாள்.

எரேமியா தீர்க்கதரிசியும் தன்னுடைய வேதனைகளைக் குறித்து எழுதிவைத்தார். இந்த வேதனையான புலம்பல் புத்தகத்தில், யூத ஜனங்களுக்கு, பாபிலோனிய போர் வீரர்களால்  இழைக்கப்பட்ட வெறுக்கத்தக்கச் செயல்களைக்குறித்து எழுதுகின்றார். இதில் பாதிக்கப்பட்ட சிறுபிள்ளைகளுக்காக எரேமியாவின் உள்ளம் வேதனையடைகிறது. “என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது” என்று கதறுகின்றார், “என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம்… குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள்” (2:11) என்கின்றார். யூதா ஜனங்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்தார்கள், ஆனால் அவர்களுடைய குழந்தைகள் அதற்கான கிரயத்தைச் செலுத்துகின்றார்கள். “அவர்கள் தங்கள் பிராணனை தங்கள் தாய்களின் மடியிலே விடுகிறார்கள்” என்று எழுதுகின்றார் (வச. 12).

இத்தனை துயரங்களையும் கண்ட எரேமியா தேவனை விட்டு விலகி விடுவார் என நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் அவரோ எஞ்சியிருக்கிற ஜனங்களை நோக்கி, “ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப் போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப் போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு” (வச. 19) என்கின்றார்.

மெர்ஸியும் எரேமியாவும் செய்தது போல நம்முடைய இருதயத்தை தேவனிடம் ஊற்றிவிடுவது நல்லது. மனித வாழ்வில் புலம்புவது என்பது ஒரு கடினமான பகுதி. அத்தகைய வேதனையை தேவன் அனுமதித்தாலும், அவரும் நம்மோடு சேர்ந்து வருத்தப்படுகின்றார். அவருடைய சாயலில் நாம் உருவாக்கப்பட்டுள்ளோம், அவரும் நம்மோடு புலம்புகின்றார்!