எழுதியவர் மெடலின் டுவ10னிää ஜெர்மனி

 

தேவனைத் தொழுதுகொள்வதையும்ää அவரோடு நேரம் செலவிடுவதையும் நான் மிகவும் விரும்புகிறேன்.
தினமும் காலையில்ää ஜெபம்ää இசைää வேதப்படிப்புää மற்றும் குறிப்பு எடுத்தல் என்வவற்றினூடாகத் தேவனை ஆராதிக்க நேரத்தை ஒதுக்குவதற்கு நான் இயன்றளவு முயற்சிசெய்வேன். அர்ப்பணிக்கப்பட்ட இந்த நேரத்தில்ää நான் தேவனுக்கு நன்றி செலுத்திää அவருடைய வார்த்தையைத் தியானிப்பேன். இதற்குப் பதிலாகää தேவனுடைய பிரசன்னம் – ஜெபங்களுக்கு அவருடைய பதில்ää அவர் என்னில் காட்டுகின்ற இரக்கம்ää ஆறுதல் – அவருடைய பெலத்தோடு என்னை நிரப்பும்@ எனக்குச் சமாதானத்தைத் தரும்ää தேவன் எப்பொழுதும் என்னைப் பராமரிக்கிறார் என்பதையும் எனக்கு நினைவ10ட்டும். தேவனோடு நேரம் செலவழித்துவிட்டு வெளியே வரும்போதுää அவருடைய அன்பின் உறுதிப்பாட்டினால் நான் பெலனடைகிறேன்.

இப்படிச் சொன்னதற்கென்னää தேவனை ஆராதிப்பதற்கும்ää என்னை அவரிடம் அர்ப்பணிப்பதற்கும் நேரம் ஒதுக்குவது இலகுவானதாயிருக்கவில்லை. தேவனிடமிருந்து என் கண்களை எடுத்துப்போடும்படி என்னைச் சோதிப்பதற்கு இந்த உலகம் பல கவனச் சிதறல்களையும்ää வேலைப்பழுக்களையும் கொண்டுவருகிறது. இதனால்ää தேவனை ஆராதிப்பதற்குக் கொடுக்கின்ற நேரத்திற்கும்ää உலகம் கொண்டுவரும் காரியங்களுக்கும் இடையில் ஒரு தெரிவைச் செய்வதற்கு நான் தொடர்ந்து சவாலிடப்படுகிறேன்.

காலப்போக்கில் தேவனைவிட்டு என்னைத் திசைதிருப்புகின்ற காரணிகளை அடையாளம் கண்டுகொண்டேன். இதுää மீண்டும் தேவனை நோக்கி என் கவனத்தைத் திருப்புவதற்கு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.
தெரிவுகள் நிறைந்த ஒரு உலகில்ää இதோää இந்த மூன்று காரியங்கள்தான் என்னை அதிகமாகச் சவாலுக்குள் அழுத்திவிட்டன. அநேகமாக நீங்களும்கூட உங்களை இவற்றுடன் தொடர்புபடுத்திப் பார்க்கமுடியும்..

1. இரண்டு எஜமான்களுக்கிடையில் அகப்பட்ட நிலை : தொழில்நுட்பம் அல்லது தேவன்

90களின் பின்பகுதியில் என் முதலாவது கையடக்கத் தொலைபேசியை நான் பெற்றுக்கொண்டது என் நினைவில் இருக்கிறது. அதற்கு முன்னர்ää நான் எங்காவது போகும்போதுää யாருடனாவது பேசவேண்டும் என்றால் பணம் கொடுத்துத்தான் அழைப்பை ஏற்படுத்தியிருக்கிறேன். அதேபோலää இணையத்தின் அறிமுகத்தைக் குறித்தும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். யூடியூபில் வெளியாகும் கற்கைநெறிகளின்மூலம் அழகுசாதன பாவனைமுறைகளைக் கற்றுக்கொண்டுää ஒரு சிறந்த அழகுசாதனயாளராகää விசேஷ நுணுக்கங்களைக்கொண்ட கலை அமைப்புகளை எல்லா இடங்களிலும் செய்துவருகிறேன்.

எனினும்ää ஒரு கட்டத்தில்ää எனது வாழ்க்கைää எனது நவீன சாதனங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் வழங்குகின்ற காரியங்கள் என்பவற்றைச் சுற்றிச்சுழல ஆரம்பித்தது. நான் அதிகமதிகமாக இணையத்தளம் தருகின்ற செய்திகளையும்ää அதிலுள்ள கேளிக்கைகளுக்குரிய முடிவற்ற காரியங்களையும் சார்ந்திருக்க ஆரம்பித்தேன்.

இந்த டிஜிட்டல் உலகம் நம்மை ஆளுகை செய்வதற்கு நாங்கள் இலகுவாக இடமளிக்கிறோம் என்பது எத்தனை பயங்கரமான விடயம். நாங்கள் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்யமுடியாது என்று ஆண்டவர் சொல்லியுள்ளார் (மத்தேயு 6:24). சமூகவலைத்தளத்;தினுள் சுழன்;றுதிரிவதை நிறுத்தமுடியாதிருக்கும்போதுää நமது கையடக்கத் தொலைபேசியில் ஊயனெல ஊசரளா என்ற விளையாட்டை இன்னுமொருமுறை விளையாடும்போதுää நாங்கள் தொழில்நுட்பத்திற்கு அடிமையாகிவிட்டோம் என்பது தெளிவாகிறது. வானத்தையும் ப10மியையும் படைத்தவரும்ää தம்மைத் தேடுகிறவர்கள் தம்மைக் கண்டடைவார்கள் (மத்தேயு 7:7) என்று சொன்னவருமாகிய தேவனிடம் நமது பிரச்சினைகளுக்கான பதிலைகளைத் தேடிவருவதற்குப் பதிலாகää நமக்கான பதில்களை Google  இற்குள் தேடுகின்றோம்.

ஒரு கட்டத்தில்ää சபை ஆராதனை நேரத்தில்கூட றூயவளயுpp தகவல்களைப் பார்ப்பதற்கு நான் சோதிக்கப்பட்டபோதுää தேவனுடைய பிரசன்னத்தில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிலும்ää தொழிநுட்பமானது எவ்வளவு அதிகம் கவர்ச்சிமிக்கது என்பதைத் தெரிந்துகொண்டேன். டிஜிட்டல் தொப்புள்கொடியை அறுப்பதற்கான நேரம் அதுதான் என்பதை உணர்ந்தேன்.

இந்த நாட்களில்ää காலையில் எழுந்தவுடன் தொலைப்பேசியைப் பார்ப்பதற்குப் பதிலாகää தேவன் உண்டாக்கிய நாளுக்காக அவருக்கு நன்றி சொன்னேன் (சங்கீதம் 118:24). தேவனை ஆராதிக்கும் நேரங்களில்ää அனைத்து கருவிகளையும் நிறுத்திவைத்தேன். அந்த நேரத்தில் யாரேனும் என்னைத் தொடர்புகொள்ள நேரிட்டால்ää அவர்கள் தகவலை அனுப்பிவைக்கலாம். சபை ஆராதனை ஆரம்பிக்கும் முன்னரே தொலைபேசியை நிறுத்திவைப்பேன். சிந்தனைச் சிதறலைத் தவிர்த்துää தேவனை ஆராதிப்பதில் என் முழுக் கவனத்தையும் செலுத்துவதற்குää சபை ஆராதனைவேளையில் என்னுடைய கையடக்கத் தொலைபேசி அதிர்வலைகளை ஏற்படுத்தாதுää வெளிச்சத்தைத் தோற்றுவிக்காது என்று அறிந்திருப்பது எனக்கு உதவியாய் இருக்கிறது.

2. தவறவிட்டுவிடுவோமோ என்ற பயம்

தினமும் காலையில் எழுந்தவுடன்ää தேவனோடு நேரத்தைச் செலவிடவேண்டும் என்பதிலேயே என் கவனம் இருக்கிறது.

என்றாலும்ää அடிக்கடி இல்லாவிட்டாலும்ää என் ப10னைக்குக் காலை உணவு கொடுத்துவிட்டுää அந்த நாளின் முதல் கோப்பியை கொஞ்சம் கொஞ்சமாகப் பருக ஆரம்பிக்கின்ற அதேசமயம்ää உடற்பயிற்சி செய்வதுää நண்பர்களைச் சந்திப்பது போன்ற அந்த நாளில் நான் செய்யவேண்டிய காரியங்களை என் மனது பட்டியலிட ஆரம்பிக்கும். எனது ஏனைய முயற்சிகளைத் தொடருவதற்குää தேவனை ஆராதிக்க அர்ப்பணித்த அந்த என் நேரத்தையே மாற்றீடு செய்ய சோதிக்கப்படுகின்றதான இந்த எந்தக் காரியங்களையும் செய்யக்கூடாது என்ற என் எண்ணத்தினிமித்தம் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன்.

தெரிவுகளினால் அதிகமதிகமாக நிரம்பியிருப்பதன் விளைவுதான் இன்றைய அதிவேக சமுதாயமாகும். யாதொரு அனுபவத்தையாவது தவறவிட்டுவிடுவோமோ என்ற அங்கலாய்ப்புத்தான் நம்மை இடத்துக்கிடம் தாவச்செய்கிறது. தவறவிட்டுவிடுவோமோ என்ற பயத்தினால் நாம் வேதனைப்படுகிறோம்.

அதிகளவான தெரிவுகளினிமித்தமும்ää அவற்றைத் தெரிவுசெய்ய சிறிதளவு நேரமே உண்டு என்பதைக் குறித்தும் நான் அங்கலாய்ப்பதை அவதானித்தபோதுää எனது வழிநடத்துதலுக்காக நான் தேவதாகமத்திற்குத் திரும்பவேண்டும் என்பதை எனக்கு நானே நினைவுபடுத்தினேன்.

அதிகளவான தெரிவுகளினிமித்தமும்ää அவற்றைத் தெரிவு செய்ய சிறிதளவு நேரமே உண்டு என்பதைக் குறித்தும் நான் அங்கலாய்ப்பதையும் நான் அவதானித்தபோதுää எனது வழிநடத்துதலுக்காக நான் தேவதாகமத்திற்குத் திரும்பவேண்டும் என்பதை எனக்கு நானே நினைவுபடுத்தினேன். எல்லாவற்றிற்கும் மேலாக தேவனுடைய இராஜ்யத்தையே முதலில் தேடும்படி மத்தேயு 6:33 நம்மை உற்சாகப்படுத்துகிறது. அதன்பின்னர்ää நமக்குத் தேவையான யாவற்றையும் தேவன் நமக்குத் தந்தருளுவார். உலக காரியங்களைத் தொடருவதைப் பார்க்கிலும்ää தேவனோடு எனக்குள்ள அனுதின சந்திப்பைத் தவறவிடக்கூடாதே என்று பயமடைவதையே நான் கற்றுக்கொண்டேன்.

3. இவ் உலக காரியங்களின் வசீகரத்தன்மை

எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று உடற்பயிற்சிக்குச் (பலஅ) செல்லுவது. ஆரோக்கியமானதொரு வாழ்கைமுறையை வாழுவதற்கு நான் முயற்சிசெய்தாலும்ää சஞ்சிகைகளின் பக்கங்களில் வெளியாவதும்ää ஐளெவயபசயஅ இல் வெளியாகும் வர்ணனைகளிலும் என் “சரீரத்துக்கான இலக்குககளைத்” தேடுவதில் என் ஒரு பகுதி மிகவும் விழிப்பாகவே இருக்கிறது. சிலசமயங்களில்ää நான் பாரம் தூக்கும்போதுää தேவன் எனக்குக் கொடுத்த சரீரத்தைக் குறித்துத் திருப்தியாக இல்லாமல்ää என் சரீர இலக்குகளுக்காக இவ்வளவு பாடுபடுகிறேனே என்பதைக் குறித்து வியப்படைகிறேன்.

நாம் அனைவருமே பலவிதமான இலக்குகளின் பின்னே அவற்றைத் துரத்திக்கொண்டே இருக்கிறோம் – ஒரு சரியான சரீர கட்டமைப்புää நவீன தொலைபேசிää கவர்ச்சிகரமான விடுமுறைகள் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அநேகமாகää இத்தகைய “இலக்குகள்” இலகுவில் நம்முடைய ஆராதனைக்குரிய விக்கிரகமாக மாறிää நம்முடைய கவனத்தைத் தேவனைவிட்டுத் திசைதிருப்பிவிடும்.

இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல்ää உங்களுடைய மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் என்று ரோமர் 12:2 நம்மை உற்சாகப்படுத்துகிறது. தேவனுடைய வார்த்தையைக் கொண்டு தேவனோடு நேரம் செலவிடுவதற்குப் பதிலாகää நிலையற்ற மேற்ப10ச்சான உலக காரியங்களில் ஈடுபடுவதை நான் தெரிந்துகொள்கிறேன் என்பதை நான் கண்டுகொண்டபோதுää அவற்றை நிறுத்திவிட்டுää தேவனுடைய பிரசன்னத்தைத் தேடுவது ஒன்றே உண்மையும் சிறந்ததுமான காரியம் என்பதை நானே எனக்கு நினைப்ப10ட்டுகிறேன். பிரம்மைகளால் தூண்டப்பட்டுள்ள இந்தச் சமுதாயத்தில்ää தேவனுடைய வாரத்தையைத் தியானிப்பது என்பதுää அவருடைய மாறாத இயல்புநிலையில் என் கண்களை நிலைநிறுத்துகிறது. தேவனுடைய கருத்தேயன்றிää இந்த உலகினுடைய கருத்து என் வாழ்வுக்கு அவசியமில்லை என்பதை இது எனக்கு நினைப்பூட்டுகின்றது.

பிரம்மைகளால் தூண்டப்பட்டுள்ள இந்தச் சமுதாயத்தில்ää தேவனுடைய வாரத்தையைத் தியானிப்பது என்பதுää அவருடைய மாறாத இயல்புநிலையில் என் கண்களை நிலைநிறுத்துகிறது.

இந்த இலக்குகளினால் நான் இலகுவாகச் சோதிக்கப்படுகிறதை அறிந்துää தேவனுடனான உறவுக்கு முன்னுரிமை கொடுக்கக் கற்றுக்கொண்டேன். அனுதினமும் ஒழுங்காகத் தேவனை ஆராதிக்க நேரம் கொடுக்கும்போதுää தேவனுடனான என் நேரம் பாழாக்கப்பட்டுவிடும் என்கிற பயம் இல்லாமல்ää ஆரோக்கியமான ஒருவராக நான் இருப்பதற்கான காரியங்களைப் பயமின்றிச் செய்யலாம்.

நாம் இவ்வுலகில் தற்காலிக குடிமக்களே@ ஆனால்ää தேவனுடனான நம்முடைய உறவு நித்திய வாழ்விலும் தொடரும். இயேசு கிறிஸ்து நம்முடைய விடுதலையைக் கிரயம் கொடுத்து வாங்குவதற்காகச் சிலுவையில் தமது ஜீவனையே கொடுப்பதை இறுதித் தெரிவாகத் தெரிவுசெய்தார் என்பதை நாம் கருத்திற்கொள்ளும்போதுää தேவனை ஆராதிப்பதற்கும் அவரைத் துதிப்பதற்கும் நேரம் செலவிடுவதற்குத் தீர்மானிப்பது என்பது நமக்கு மிகவும் இலகுவானதாக மாறிவிடும்;@ பின்னர் இந்த உலகத்துக்கான தெரிவுகள் இதனோடு ஒப்பிடும்போது படிப்படியாக வெளுத்துவிடும்.

இந்த உலகின் தெரிவுகளினாலும்ää எதிர்பார்ப்புகளினாலும் தேவனை ஆராதிப்பது என்பது உங்களைச் சவாலுக்குட்படுத்தி இருப்பதாக நீங்கள் அறிந்துகொண்டால்ää அதைக் குறித்து எனக்கு விளங்கும். இன்னமும் அனுதினமும் நான் செய்வதைப்போலää இந்த உலகத்தின் காரியங்களைத் தொடருவதற்கு முன்பாக தேவனைத் தொழுதுகொள்வதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

நமது ஒட்டுமொத்த வாழ்க்கைமுறையுமே மாறவேண்டும் என்பது இதன் அர்த்தம் அல்லää ஆனால்ää ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு அடியாக முன்னெடுத்துவைக்க ஆரம்பிக்கவேண்டும். அதாவதுää அதிகாலையில் எழுந்து அந்த நேரத்தைத் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கலாம்ää அல்லது 15 நிமிடங்களை வேதவாசிப்பிற்காக ஒதுக்கலாம். நாம் எடுத்துவைக்கும் இத்தகைய சிறிய படிமுறைகள்ää நாம் அனுதினமும் தேவனைக் கிட்டிச்சேர நம்மை இழுத்துக்கொள்ளும். நாம் அவரைத் தேடும்போதுää அவரைத் தேடுகின்ற வாஞ்சையையும்ää அவரை ஆராதிக்கின்ற விருப்பத்தையும் அவரே நமக்கு அருளுவார்.