பெற்றோர் தங்களுடைய குழ ந்தைகளுக்கு, தங்களுடைய மதத்தை உண்மையானது என்று  கற்றுக் கொடுப்பது அறநெறியாகாது எனவும், பெற்றோர் தங்களின் நம்பிக்கையை தங்களுடைய குழந்தைகளுக்கும் கொடுப்பது குழந்தைகளை தவறான வழியில் நடத்துவதற்குச் சமம் எனவும் வெளிப்படையாக பேசக்கூடிய நாத்திகன் ஒருவன் கூறினான். இவை தீவிரவாத கருத்துக்களாக இருந்தபடியால், நான் சில பெற்றோரை அணுகி, அவர்களிடம் கருத்து கேட்டேன். அவர்கள் தங்களின் நம்பிக்கையை தங்களின் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் நம்மில் அநேகர் நம்முடைய குழந்தைகளின் மீது, அரசியல், ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டு பற்றிய நம்முடைய கருத்துகளை திணிக்கின்றோம், ஏனெனில் நம்மில் சிலர், ஏதோ காரணங்களுக்காகத் தேவனைப் பற்றிய நம்பிக்கையை வேறு விதமாகத் திரிக்கின்றார்கள்.

இதற்கு மாறாக, பவுல் தீமோத்தேயுவைப்பற்றி எழுதும் போது, “கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே, உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவன்” (2 தீமோ.3:15). தீமோத்தேயு வளர்ந்து  வாலிபனான போது, தன்னுடைய சுய முயற்சியினால் கிறிஸ்தவ விசுவாசத்திற்குள் வரவில்லை. அதற்கான சான்றுகளும் இல்லை. ஆனால் அவனுடைய தாயார் அவனுடைய இருதயத்தை தேவனுக்கு நேராகத் திருப்பினார்கள், அவனும் தான் கற்றுக் கொண்டவற்றை, உறுதியாகத் தொடர்ந்தான் (வ.14) தேவனே நம்முடைய வாழ்வும், உண்மையான ஞானத்தின் உறைவிடமாகவும் இருப்பாராயின், நம்முடைய குடும்பங்களில் தேவனுடைய அன்பை மென்மையாக வளரச் செய்வது நமது முக்கிய கடமையாகும்.

நம்முடைய குழந்தைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அநேக நம்பிக்கைகள் நம்மைச் சூழ்ந்துள்ளன. டெலிவிஷன் காட்சிகள், திரைப்படங்கள், இசை, ஆசிரியர்கள், நண்பர்கள், ஊடகங்கள் ஆகிய இவைகள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ  நம்பிக்கையைக் குறித்த அநேக ஊகங்களைக் கொண்டு வந்து விடுகிறார்கள். அவை நம் குழந்தைகளின் மீது உண்மையாகவே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாம் அமைதியாக இருக்க முடியாது. நாம் அநுபவித்தை அழகிய கிருபை, நம்முடைய குழந்தைகளையும் அந்த தேவனிடம் வழி நடத்தும்படி நம்மைக் கட்டாயப் படுத்துகின்றது.