இயேசுவின் பேரில் விசுவாசத்திற்குள் வருவதற்கு முன்பு, நான் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டதைக் கேட்டிருக்கின்றேன். ஆனால் அவர் யாரென்று அறிய போராடினேன்  தேவன் ஒருவரே பாவத்தை மன்னிக்கிறவர் என்று வேதாகமம் கூறுகின்றது. அப்படியிருக்க, எப்படி இயேசுவால் என்னுடைய பாவங்களை மன்னிக்க முடியும்? என்று நம்பத் தடுமாறினேன். ஜெ.ஐ.பாக்கர் எழுதிய “தேவனை அறிந்து கொள்ளல்” (Knowing God) என்ற புத்தகத்தைப் படித்த பின்பு தான், என்னுடைய போராட்டங்களில் நான் மட்டும் தனிமையாக இல்லை என்பதை நான் கண்டுபிடித்தேன். “நசரேயனாகிய இயேசு, மனிதனாகப் பிறந்த தேவன்………..அது உண்மை, ஆனால் அவர் மனிதனாக வாழ்ந்த போது, முழுவதும் தேவத்தன்மையில் தான் இருந்தார் என கூறும் தடுமாற்றமுள்ள கிறிஸ்தவர்களுக்கும்”, அவிசுவாசிகளுக்கும் அவர் எழுதுவது, இதுதான் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள தேவையான உண்மை.

அப்போஸ்தலனாகிய பவுல் இயேசு கிறிஸ்துவை “அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம்” என்று குறிப்பிடும் போது, அவர் இயேசுவை முற்றிலுமாக, பரிபூரணமான தேவன், படைப்பின் காரணர், பூமியிலும் வானத்திலுமுள்ள சகலத்தையும் தாங்குபவர், ஆனால் பூரண மனிதன் என்கின்றார்  கொலோ.1:15-17).  இந்த உண்மைதான், இயேசு கிறிஸ்துவின் சாவு மற்றும் உயிர்ப்பின் மூலம், அவர் நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்ததோடு, மனுக்குலம் முழுமையையும்  மீட்டார் என்பதைக் காட்டுகின்றது. அனைவரும், அனைத்து படைப்புகளும் மீண்டும் தேவனோடு ஒப்புரவாகும் படிச் செய்தார் என்ற நம்பிக்கையை நமக்குத் தருகின்றது (வ.20-22).

இந்த வியத்தகு அன்பின் செயல் வெளிப்பட்ட நாளில் இருந்து, தேவனாகிய பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலும், குமாரனாகிய இயேசுவின் வாழ்வின் மூலமாகவும்  எழுதப்பட்ட வேதவார்த்தையின் மூலம், பிதாவாகிய தேவன் தம்மை வெளிப்படுத்தினார். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள், ஏனெனில் அவர் இம்மானுவேல்- 

தேவன் நம்மோடிருக்கிறார். அல்லேலூயா!