“இந்தக் குழந்தை அருமையானது” (This Child is Beloved) என்ற தலைப்பில் வரும் கவிதையில், ஒரு அமெரிக்க போதகர், அவரை அவருடைய பெற்றோர், கருவிலேயே அழித்து விட எண்ணியும் அவர் பிறந்து விட்ட கதையை எழுதுகின்றார். அநேக எதிர்பாராத நிகழ்வுகள், அவரைக் கருவில் அழித்துவிடாதபடி தடுத்தது. கடைசியாக பெற்றோர், அக்குழந்தையை வரவேற்கத் திட்டமிட்டனர். தேவன் அவருடைய உயிரைப் பாதுகாக்க எண்ணினார் என்பதையறிந்த அவர், வருமானம் ஈட்டக் கூடிய தன்னுடைய எதிர்காலத்தை தள்ளிவிட்டு, முழு நேர ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தார். இன்றைக்கு அவர், லண்டனிலுள்ள ஓர் ஆலயத்தில் உண்மையுள்ள போதகராகப் பணியாற்றுகின்றார்.

இஸ்ரவேலர்களின் சரித்திரத்தைப் பார்க்கும் போது, இந்த போதகரைப் போன்று, இவர்களின் கைவிடப்பட்ட நிலையின்போதும், தேவன் தலையிட்டுச் செயல் படுவதைக் காண்கின்றோம். அவர்கள், வனாந்திரத்தில் பிரயாணம் பண்ணி, மோவாப் எல்லையினருகில் வந்த போது, மோவாப்பின் ராஜா பாலாக் பார்க்கின்றான். அவர்களின் எண்ணிக்கையும், அவர்கள் பிற நாடுகளைக் கைப்பற்றியதையும் கண்ட போது, மிகவும் பயந்து, பிலேயாம் என்ற குறிசொல்கிறவனைத் தங்களுக்கு அமர்த்தி, இந்த எதிர்பராத கூட்டத்தினைச் சபிக்குமாறு கூறுகின்றான் (எண். 22:2-6).

ஆனால், வியத்தகு காரியம் அங்கு நடைபெற்றது. பிலேயாம், அவர்களைச் சபிக்கும் படி வாயைத் திறந்த போதெல்லாம், அவர்களை ஆசீர்வதித்தான், “ இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைப் பெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது,” என்றான். மேலும், “அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதுமில்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்;………தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினார்” (எண்.23:20-22). அவர்களுக்கு  எதிராக ஒரு யுத்தம் எழும்பிக் கொண்டிருப்பதைக்கூட அறியாத இஸ்ரவேலரை, தேவன் பாதுகாக்கின்றார்! 

நாம் பார்க்கின்றோமோ இல்லையோ,  இன்றைக்கும், தேவன் அவருடைய பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டேயிருக்கின்றார். நம்மை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றழைக்கும் நம்முடைய ஆச்சரியமான தேவனை, நாம் நன்றியோடு ஆராதிப்போம்.