ஒரு அரண்மனையை கற்பனை செய்து கொள். ஒரு பெரிய அரசன் அறியணையில் வீற்றிருக்கிறார். அவரைச் சுற்றிலும் எல்லா வகை ஊழியக்காரரும், அவரவருடைய சிறந்த ஒழுங்கு முறைப் படி நிற்கின்றனர். அந்த அரசனின் பாதத்தருகே ஒரு பெட்டி வைக்கப் பட்டுள்ளது. அந்த அரசன் அவ்வப்போது பெட்டியில் உள்ளவற்றை தடவிப் பார்க்கின்றார். அப்படி, அந்த பெட்டியினுள் என்ன இருக்கிறது? நகைகள், தங்கம், அரசன் விரும்பும் விலையேறப்பெற்ற கற்கள்? இந்த பெட்டியில், அரசனுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை தரும் அருமையான பொக்கிஷங்கள் சேகரிக்கப்பட்டு, வைக்கப் பட்டுள்ளன அது என்னவென்று உன் கற்பனையில் தெரிந்து விட்டதா?

இந்த பொக்கிஷத்தை எபிரெய மொழியிலே “செகுலா” என்பர். இதன் அர்த்தம் “சொந்த சம்பத்து” என்பது. இந்த வார்த்தையை, பழைய ஏற்பாட்டில், யாத்திராகமம் 19:5, உபாகமம் 7:6, சங்கீதம் 135:4 ஆகியவற்றில் காணலாம். இது இஸ்ரவேல் தேசத்தைக் குறிக்கின்றது. அப்போஸ்தலனாகிய பேதுரு புதிய ஏற்பாட்டில் எழுதும் போது “தேவனுடைய இரக்கத்தைப் பெற்ற ஜனங்கள் ,“ “தேவனுடைய ஜனங்கள்” (வ.10) என்று எழுதுகின்றார். இவர்கள், இஸ்ரவேலர் அல்லாத ஒரு கூட்டத்தார். அதாவது, இயேசுவை விசுவாசிப்பவர்களைப் பற்றி இவர் எழுதுகின்றார். இதில் இஸ்ரவேலரும், புறஜாதியினரும் அடங்குவர் .“நீங்களோ….. தேவனுக்குச் சொந்த ஜனமாயும் இருக்கிறீர்கள்” (வ.9). 

பரலோகத்தின் சர்வ வல்ல ராஜா, அவருடைய அருமையான பொக்கிஷங்களில் ஒன்றாக, உன்னை கருதுகின்றார் எனின் அதனை கற்பனை செய்ய முடிகிறதா! அவர், பாவம் மற்றும் சாவின் பிடியிலிருந்து உன்னை மீட்டு எடுத்துள்ளார். அவர் உன்னை தன்னுடைய சொந்த பிள்ளையாகக் கருதுகின்றார். ராஜாவின் குரல் சொல்கின்றது, ”இந்த பிள்ளையை நான் நேசிக்கிறேன், இது என்னுடைய பிள்ளை”