போதகர் வாட்சன் ஜோன்ஸ், தன்னுடைய இளம்வயதில், சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டதை நினைத்துப் பார்க்கின்றார். அவன் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, அவனுடைய தந்தை அவனுக்கு அருகிலேயே வந்து கொண்டிருந்தார். அப்படி ஒரு நாள் ஓட்டிக் கொண்டிருக்கும் போது, அவன் அருகிலிருந்த முற்றத்தில், சிறுமிகள் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவன் தன் தந்தையிடம்,” அப்பா, நான் இதனைக் கற்றுக் கொண்டேன்” என்றான். ஆனால் அவன் கற்றுக் கொள்ளவில்லை அவனுடைய சைக்கிளை,அவனுடைய தந்தை உறுதியாக பிடித்திருப்பதாலேயே அவனால் ஓட்ட முடிந்தது என்பதை அவன் பின்புதான் தெரிந்து கொண்டான் .அவன் நினைத்திருந்தபடி, அவன் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை.

நம்முடைய பரலோகத் தந்தையும், நாம் நன்கு முதிர்ச்சி பெற வேண்டுமென விரும்புகிறார்” மேலும், நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும், அறிவிலும், ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத் தக்க பூரண புருஷராகும்வரைக்கும் சிலரை நம்மை வழிநடத்தும் படி ஏற்படுத்துகின்றார் (எபே. 4:11-13). ஆவிக்குரிய முதிர்ச்சி என்பது, சரீர வளர்ச்சியிலிருந்து வேறுபட்டது .பெற்றோர், தங்களுடைய பிள்ளைகளை, பெற்றோரின் உதவியின்றி, தனித்து செயல்படக்கூடிய திறமை பெற்றவர்களாக இருக்க வேண்டுமென வளர்க்கின்றனர். ஆனால் நம்முடைய பரிசுத்த தந்தை, ஒவ்வொரு நாளும் நாம் அவரையே சார்ந்தவர்களாக வளர வேண்டுமென விரும்புகின்றார். 

 “ தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்கு கிருபையும், சமாதானமும் பெருகக்கடவது” என்று பேதுரு தன்னுடைய கடிதத்தை ஆரம்பிக்கிறார். ஆனால் கடிதத்தை முடிக்கும் போது, “ நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும், அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்” என்று வலியுறுத்திக் கூறுகின்றார் (2 பேது. 1:2; 3:18). முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்கள், இயேசுவைச் சார்ந்திருத்தலை, ஒருபோதும் விட்டு விடுபவர்களல்ல.

“ நம்மில் சிலர், நம்முடைய வாழ்க்கையாகிய வண்டியின் கைப்பிடியை உறுதியாகப் பற்றியிருக்கும் இயேசுவின் கரத்தை தட்டி விடுவதற்கு மிகவும் ஆவலாயிருக்கிறோம்” என்று வாட்சன் எச்சரிக்கின்றார். நாம் நிலை தடுமாறி, விழ ஏதுவாகும் போது, நம்மைத் தாங்கி, தூக்கி, அணைத்துக் கொள்ள தயாராக இருக்கும் அவருடைய வலிமையான கரங்களைத் தேவையில்லை என நாம் நினைக்கிறோம். நாம் கிறிஸ்துவை சார்ந்து கொள்ளாமல், நம்மால் வளர முடியாது. இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும், அவரை அறிகிற அறிவிலும் நம்முடைய வேர்கள் ஆழமாகச் சென்றால் தான், நாம் நன்கு வளர முடியும்.