லெனோர் டன்லப், தனது தொண்ணூற்று நான்கு வயதிலும், இளமையோடு இருந்தார், அவள் கூர்மையான சிந்தனையும், பிரகாசமான சிரிப்பும் கொண்டிருந்தாள். அவள் இயேசுவின் மீது கொண்டிருந்த அன்பை அநேகர் உணர்ந்தனர். அவள், எங்களுடைய ஆலயத்தின் வாலிபர்களோடு கொண்டிருந்த தொடர்பை யாவரும் அறிவர். வாலிபர்களோடு, அவள் பங்கு பெற்று வந்தது, மிக்க மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் கொடுத்தது. லெனோரின் வாழ்க்கை யாவரையும் அசைக்கிறதாக இருந்ததால், அவளுடைய மறைவு, எங்களை மிகவும் பாதித்தது. ஒரு வலிமையான ஓட்டக்காரனைப் போன்று, அவள் தன்னுடைய வாழ்க்கை ஓட்டத்தை முடித்தாள். அவளுடைய மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு வரை, தன்னுடைய ஆற்றலும், ஆர்வமும் குறையாமல், பதினாறு வாரங்கள் இயேசுவைக் குறித்த செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்வதில் முனைந்திருந்தாள்.

தேவனை கனப்படுத்திய, கனி நிறைந்த அவளுடைய வாழ்வு, சங்கீதம் 92:12-15ல் கூறப்பட்டுள்ளது போன்று உள்ளது. தேவனோடுள்ள உறவில் ஆழ்ந்து வேர் விட்டு வளர்ந்தவர்களின் வாழ்க்கை மொட்டுக்களும், மலர்களும், கனிகளும் நிறைந்த வாழ்க்கையாக இருக்கும் என இந்த சங்கீதம் விளக்குகிறது (வச. 12-13) இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இரு மரங்களும், (பனை, கேதுரு) அதன் கனிக்கும், உறுதியான மரத்திற்கும் பேர் பெற்றவை. இவற்றின் மூலம் சங்கீதக்காரன் நீண்ட ஆயுளையும், செழிப்பையும், பயனையும் குறிப்பிடுகின்றார். நம்முடைய வாழ்வில் அன்பும், பகிர்தலும், உதவுதலும், மற்றவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தலும் காணப்படும் போது, நம் வாழ்வும் மொட்டுக்களையும், மலர்களையும், கனிகளையும் கொண்டுள்ளது என்பதை நினைத்து மகிழ்வோம்.

“மூத்தவர்கள்”, “பண்பட்டவர்கள்” என்று பெயர் பெற்றவர்களும் , வேர் விடவும், கனி கொடுக்கவும் முடியாதபடி, முதிர்வடைந்து விடவில்லை, லெனோரேயின் வாழ்க்கை இயேசுவின் மூலம், தேவனுக்குள் ஆழ்ந்து வேர் விட்டு, இதற்கும், தேவனுடைய நன்மைக்கும் சாட்சியாகவுள்ளது (வச. 15). நாமும் கூட இதேப் போன்று வளர முடியும்.