அழிக்கமுடியாத அன்பு
முதலில் எங்கள் வீட்டிற்குப் பின் அமைந்துள்ள ஆற்றினைக் காணும்பொழுது, கோடையின் வெப்பத்தில் சிறிதளவு தண்ணீர் மட்டுமே அதன் பாறைகளில் வழிந்தோடியது. அதை நாங்கள் எளிதாகக் கடந்து செல்ல உறுதியான மரப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. பல மாதங்கள் கழித்து, மிகவும் அதிகமான மழை எங்கள் பிராந்தியத்தில் தொடர்ச்சியாகப் பெய்து கொண்டிருந்தபடியால், எங்களது சிறிய ஆறானது அதிகமான வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது. அது 4 அடி ஆழமாகவும் 10 அடி அகலமாகவும் ஓடியது. அந்தத் தண்ணீரின் வேகமானது, மரப்பாலத்தை உடைத்து வேகமாக வீசி எறிந்தது.
வேகமாக ஓடும் தண்ணீர், தன் வழியிலுள்ள எல்லாவற்றையும் தாண்டி அவைகளின் மேல் செல்லக் கூடியதாகவுள்ளது. ஆனால், கடினமான வெள்ளத்தினாலோ, அல்லது அழிவினை உண்டாக்குகிற எந்த சக்தியாலும், அழிக்கமுடியாத ஒன்று உள்ளது. அதுதான் அன்பு. 'திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டது" (உன்னத. 8:7). அன்பின் விடாப்பிடியான பெலமும், உறுதியும், உலகப்பிரகாரமான அன்பினால் வெளிப்படுத்தப்படும். ஆனால், இந்த அன்பின் முழுப் பரிமாணமும், மனிதர்கள் மேல், தேவன் தன் குமாரனின் மூலம் வெளிப்படுத்தும் அன்பாக அமைகிறது.
நாம் எவைகளையெல்லாம் நமக்கு சார்ந்திருக்கப் பயன்படுத்துகிறோமோ அவைகளெல்லாம் ஒரு நாளில் அழிக்கப்பட்டுப் போய்விடும். நம்முடைய ஏமாற்றம் தேவனுடைய அன்பை நாம் புரிந்து கொள்ள உதவும் கதவினை திறக்கக் கூடியதாக அமையும். அவருடைய பிரியமானது உயரமான, ஆழமான, பெலமான மற்றும் நிலைத்திருக்கக் கூடியதாகும்.
நாம் எவைகளையெல்லாம் சந்திக்கிறோமோ, அவைகளெல்லாம் அவரோடு கூட நமக்கு அருகிலும், நம்மைத் தாங்குகிறதாகவும், நமக்கு உதவி செய்கிறதாகவும், நாம் நேசிக்கப்படுகிறோம் என்பதை நமக்கு நினைவூட்டக் கூடியதாகவும் அமைகிறது.
விசுவாசம் எனும் சாசனம்
பில்லி கிரஹாம், தன் 16ஆம் வயதில், கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே, தன் பெற்றோருக்கு இயேசுவின் மேல் உள்ள தாகம் அவருக்கு வெளிப்படையாகத் தெரிந்தது. இருவருமே, கிறிஸ்தவ குடும்பத்திற்குள் இருக்கும்போதே விசுவாசத்திற்குள் வந்துவிட்டார்கள். அவர்களின் திருமணத்திற்குப் பிறகு, பில்லியின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அந்த உறுதியான விசுவாசத்தினை அன்போடுகூட தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். திருச்சபைக்கு ஒழுங்காகச் செல்லுதல், வேதவாசிப்பு, ஜெபம் போன்றவற்றில் அவர்களைப் பழக்கினார்கள். பில்லி கிரஹாமின் பெற்றோர்கள் அமைத்த உறுதியான அஸ்திபாரத்தினடிப்படையில், தேவன் அவரை விசுவாசத்திற்குள் கொண்டுவந்து, இறுதியில் அவரை ஒரு தைரியமான சுவிசேஷகராக உருவாக்கினார்.
அப்போஸ்தலனாகிய பவுலின் இளம் சீஷனான தீமோத்தேயுவும், உறுதியான ஆவிக்குரிய அஸ்திபாரத்தினால் பயனடைந்தார். பவுல், 'உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும், உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது. அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறது" (2 தீமோ. 1:5). இந்த உறுதியான சாசனமானது, தீமோத்தேயுவின் இருதயத்தை கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்திற்கு நேராக திருப்ப உதவினது.
இப்பொழுது பவுல், தீமோத்தேயுவின் பாரம்பரிய விசுவாசத்தில் தொடரும்படியாக அவரை துரிதப்படுத்துகிறார். 'உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்" (2 தீமோ. 1:6). 'நீ வெட்கப்படாமல் தேவவல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கனுபவி" (2 தீமோ. 1:8) என்று கூறுகிறார். ஒரு உறுதியான சாசனமுள்ள ஆவிக்குரிய பின்னணி மட்டுமே நம்மை விசுவாசத்திற்குள் கொண்டுவரமுடியாது. ஆனால், மற்றவர்களின் சாட்சிகள் மற்றும் உருவாக்குதலின் மூலமே அதற்கான வழியை ஆயத்தப்படுத்த முடியும். நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்ட பிறகே, ஆவியானவர் நம்மை நம்முடைய ஊழியத்தில் நடத்தவும், அவருக்காக வாழவும், மட்டுமல்லாது, பிறரை விசுவாச வாழ்க்கையில் வளர்ப்பதற்குமான சிலாக்கியத்தை தந்தருளுவார்.
போர்க்களத்திற்குச் செல்லாமல்
ஒரு சிறு பிள்ளையாக, தன் பெற்றோரிடம் மிகவும் கடினமான வார்த்தைகளை அவள் பேசினாள். அதுவே அவள் பெற்றோரிடம் கடைசியாக பேசின வார்த்தைகள் என்பதை அவள் சிறிதளவும் உணரவில்லை. இப்பொழுது, பல வருடங்கள் ஆலோசனை கொடுத்த போதும், அவளால் தன்னை மன்னிக்கவே முடியவில்லை. குற்ற உணர்வும், ஆழமான துக்கமும் அவளை முடக்கி வைத்தது.
நாம் எல்லாரும் ஆழமான துக்கத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில துக்கங்கள் மகா பயங்கரமானவைகள். ஆனால், வேதாகமம் இந்த மாபெரும் துக்கத்தில் இருந்து கடந்து செல்ல வழியினைக் காட்டுகின்றது. ஒரு உதாரணத்தை நாம் காணலாம்.
தாவீது ராஜா செய்ததற்கு ஒரு இனிப்பு மூலாம் பூச முடியாது. அது 'இராஜாக்கள் போருக்குப் போகின்ற காலம்." ஆனால் தாவீது 'எருசலேமிலேயே தங்கிவிட்டார்" (2 சாமு. 11:1). போர்க்களத்திலிருந்து
தூரத்தில் இருந்தபடியால், அடுத்தவனுடைய மனைவியை கொள்ளையிட்டதுமன்றி, அதை ஒரு கொலையின் மூலமாக மூடி மறைக்கிறான் (வச. 2-5, 14-15). தேவன் தாவீதின் கீழ்நோக்கி மூழ்குதலைத் தடுத்து நிறுத்தினார். ஆனால், இராஜா மீதமுள்ள தன் வாழ்நாளில், தன் பாவத்தை அறிந்தவனாக வாழவேண்டும்.
தாவீது சாம்பலில் இருந்து எழுந்தவுடனே, அவனுடைய தளபதி யோவாப், தாவீது முன்னிருந்து நடத்தவேண்டிய போரினை ஜெயித்து வந்தான். யோவாப் தாவீதிற்கு சவால் கொடுக்கிறார், 'நீர் மற்ற ஜனங்களைக் கூட்டிக்கொண்டு வந்து பட்டணத்தை முற்றிகைபோட்டு பிடிக்க வேண்டும்". இறுதியாக தாவீது கர்த்தர் விரும்பின இடத்திற்கு ஒரு தேசத்தின் தலைவனாகவும், இராணுவத்தின் தலைவனாகவும் வந்து சேர்ந்தார் (வச. 29).
நாம் நம்முடைய கடந்தகால நிகழ்வுகள் நம்மை அழுத்த அனுமதிக்கும் போது, நாம் கர்த்தருடைய கிருபை போதுமானதாக இல்லை என்றே கூறுவதாக அமைகிறது. அது நாம் என்ன பாவத்தை செய்திருக்கிறோம் என்பதைப் பொறுத்ததாக இல்லாமல் இருக்கிறது. நம்முடைய தகப்பன் நமக்கு முழுமையான மன்னிப்பினை அருளுகிறார். தாவீது தன் போர்க்களத்திற்குத் திரும்பச் சென்றதுபோல நாமும் அவருடைய கிருபையைப் பெற்று வாழலாம்.
நீங்கள் திரும்ப வருவீர்களா?
ரான் மற்றும் நான்சியின் திருமணமானது, நாளுக்கு நாள் வேகமாக முறிந்து கொண்டே வந்தது. அவளுக்கு ஒரு தவறான தொடர்பு இருந்தது. ஆனால் சில காலத்திற்கு பிறகு இந்தப் பாவத்தை தேவனுக்கு முன்பாக ஒத்துக் கொண்டாள். தேவன் அவளை என்ன செய்யச் சொல்கிறார் என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள். ஆனால் அது அவளுக்குக் கடினமாக இருந்தது. உண்மையை அவள் ரானிடம் பகிர்ந்து கொண்டாள். விவாகரத்தினை செய்வதற்கு பதிலாக, ரான் அவளுக்குத் தன்னோடு உண்மையாக மனந்திரும்பி வாழ தன் மனமாற்றத்தை நிரூபிக்க அவளுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்தார். அற்புதமான முறையிலே தேவன் அவர்களின் திருமணத்தை சரிசெய்தார்.
ரானின் நடவடிக்கையானது பாவிகளான நம்மைப் போன்றவர்களின் மேல் தேவன் வைத்த அன்பிற்கும், மன்னிப்பிற்கும் அடையாளமாக இருக்கிறது. தீர்க்கதரிசியான ஓசியா இதை நன்கு அறிந்திருந்தார். அவர் தவறான வாழ்க்கை வாழ்ந்த உண்மையில்லாத ஒரு பெண்ணை மணந்துகொள்ளும்படி தேவனால் கட்டளையிடப்படுகிறார். அதன் விளைவாக இஸ்ரவேலர்கள் தனக்கு விரோதமாக எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தினார் (ஓசியா 1) அதைவிட மிகக் கடினமான காரியம், ஓசியாவின் மனைவி அவனைவிட்டு பிரிந்து போனபின்பு, தேவன் மறுபடியும் அவளை ஓசியாவிடம் திரும்பி வரும்படி சொன்னதுதான். அவர், விபச்சாரியான ஒரு ஸ்திரீயை சேர்த்துக்கொள் (ஓசியா 3:1) என்று கூறுகிறார். அவர்களுடைய எல்லா கீழ்படியாமைக்கு மத்தியிலும் தேவன் இஸ்ரவேல் ஜனங்களோடு ஒரு நெருக்கமான உறவினை வைத்துக் கொள்ள விரும்புகிறார். எவ்வாறு ஓசியா தன் உண்மையில்லாத மனைவியை நேசித்தாரோ, தேடிச்சென்றாரோ, தியாகம் செய்தாரோ அதைப்போல தேவன் தம் ஜனத்தை நேசித்தார். அவருடைய நீதியான கோபாக்கினையும், அவருடைய வைராக்கியமும் அவருடைய மிகப்பெரிய அன்பினால் ஆட்கொள்ளப்பட்டது.
இதே தேவன் நம்மை அவருக்கு அருகில் வரும்படி விரும்புகிறார். விசுவாசத்தோடு நாம் அவருக்கு அருகில் வருவோமானால், அவருக்குள் நாம் முழுமையடைகிறோம் என்பதை நாம் விசுவாசிக்க முடியும்.
அப்பங்களும், மீன்களும்
ஒரு சிறு பையன் ஆலயத்திலிருந்து மிகவும் உற்சாகத்தோடும், ஆரவாரத்தோடும் அன்றைய நாள் முழுதும் பிடித்தப் பாடமான அப்பங்களும் மீன்களும் ஒரு சிறுவனைக் குறித்த மகிழ்ச்சியோடு வீட்டிற்கு வந்து சொன்னான். அவன், அந்தச் சிறுவன் எவ்வாறு தன் அப்பங்களையும், மீன்களையும் இயேசுவிடம் கொடுத்தான் என்பதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தான்.
இயேசுவானவர் அன்று நாள் முழுவதும் மக்கள் கூட்டத்திற்கு போதித்துக் கொண்டிருந்தார். அவருடைய சீஷர்கள், அவர்கள், ஊருக்குள் போய் அப்பங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிட வேண்டும் என்று கூறினார்கள். இயேசு அவர்களுக்கு, 'நீங்களே அவர்களுக்குப் போஜனம் கொடுங்கள்", என்று கூறினார். (மத். 14:16) ஐயாயிரம் பேருக்கும் அதிகமானோர் அங்கு இருந்தபடியால் சீடர்கள் கலக்கமடைந்தார்கள். மீதமுள்ள கதை உங்களுக்குத்தெரியும். அந்தச் சிறுவன் தன்னுடைய மதிய உணவைக் கொடுத்தான் - ஐந்து சிறிய அப்பங்கள் மற்றும் இரண்டு மீன்கள் - இதைக் கொண்டுதான் இயேசுவானவர் மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை போஷித்தார் (வச. 13-21). ஒரு கற்பனை கதை என்னவெனில், இந்த சிறுவனின் தாராள மனப்பான்மையைக் கண்டு, மற்றவர்களும் தங்கள், மதிய உணவைக் கொடுத்தார்கள் என்பதாகும். ஆனால், மத்தேயு தெளிவாக இது ஒரு அற்புதம் என நாம் புரிந்து கொள்வதற்காக விளக்கம் அளிக்கிறார். இந்த சம்பவமானது, நான்கு சுவிசேஷங்களிலும் இடம் பெற்றிருக்கிறது.
நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்? குடும்பம், அயலகத்தார், நண்பர்கள், உடன் ஊழியர்கள், மற்றும் பலர் பல்வேறு விதமான தேவைகளோடு நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். நம்மை விட அதிகம் வசதிபடைத்தவர்களிடத்திற்கு நாம் அவர்களை அனுப்பலாமா? உண்மையாகவே சிலருடைய தேவைகள் நம்முடைய சக்திக்கும் மீறினதாகவே இருக்கும். ஆனால் எல்லா நேரத்திலும் அல்ல. உங்களிடத்தில் என்ன உள்ளதோ, ஒரு கட்டிபிடித்தல், ஒரு அன்பான வார்த்தை, கவனிக்கும் காதுகள், ஒரு சுருக்கமான ஜெபம், நீங்கள் பெற்ற ஞானத்தினையும் இயேசுவண்டைக் கொடுத்து அதைக் கொண்டு அவர் என்ன செய்கிறார் எனப் பாருங்கள்.