ஒரு சிறு பிள்ளையாக, தன் பெற்றோரிடம் மிகவும் கடினமான வார்த்தைகளை அவள் பேசினாள். அதுவே அவள் பெற்றோரிடம் கடைசியாக பேசின வார்த்தைகள் என்பதை அவள் சிறிதளவும் உணரவில்லை. இப்பொழுது, பல வருடங்கள் ஆலோசனை கொடுத்த போதும், அவளால் தன்னை மன்னிக்கவே முடியவில்லை. குற்ற உணர்வும், ஆழமான துக்கமும் அவளை முடக்கி வைத்தது.

நாம் எல்லாரும் ஆழமான துக்கத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில துக்கங்கள் மகா பயங்கரமானவைகள். ஆனால், வேதாகமம் இந்த மாபெரும் துக்கத்தில் இருந்து கடந்து செல்ல வழியினைக் காட்டுகின்றது. ஒரு உதாரணத்தை நாம் காணலாம்.

தாவீது ராஜா செய்ததற்கு ஒரு இனிப்பு மூலாம் பூச முடியாது. அது ‘இராஜாக்கள் போருக்குப் போகின்ற காலம்.” ஆனால் தாவீது ‘எருசலேமிலேயே தங்கிவிட்டார்” (2 சாமு. 11:1). போர்க்களத்திலிருந்து

தூரத்தில் இருந்தபடியால், அடுத்தவனுடைய மனைவியை கொள்ளையிட்டதுமன்றி, அதை ஒரு கொலையின் மூலமாக மூடி மறைக்கிறான் (வச. 2-5, 14-15). தேவன் தாவீதின் கீழ்நோக்கி மூழ்குதலைத் தடுத்து நிறுத்தினார். ஆனால், இராஜா மீதமுள்ள தன் வாழ்நாளில், தன் பாவத்தை அறிந்தவனாக வாழவேண்டும்.

தாவீது சாம்பலில் இருந்து எழுந்தவுடனே, அவனுடைய தளபதி யோவாப், தாவீது முன்னிருந்து நடத்தவேண்டிய போரினை ஜெயித்து வந்தான். யோவாப் தாவீதிற்கு சவால் கொடுக்கிறார், ‘நீர் மற்ற ஜனங்களைக் கூட்டிக்கொண்டு வந்து பட்டணத்தை முற்றிகைபோட்டு பிடிக்க வேண்டும்”. இறுதியாக தாவீது கர்த்தர் விரும்பின இடத்திற்கு ஒரு தேசத்தின் தலைவனாகவும், இராணுவத்தின் தலைவனாகவும் வந்து சேர்ந்தார் (வச. 29).

நாம் நம்முடைய கடந்தகால நிகழ்வுகள் நம்மை அழுத்த அனுமதிக்கும் போது, நாம் கர்த்தருடைய கிருபை போதுமானதாக இல்லை என்றே கூறுவதாக அமைகிறது. அது நாம் என்ன பாவத்தை செய்திருக்கிறோம் என்பதைப் பொறுத்ததாக இல்லாமல் இருக்கிறது. நம்முடைய தகப்பன் நமக்கு முழுமையான மன்னிப்பினை அருளுகிறார். தாவீது தன் போர்க்களத்திற்குத் திரும்பச் சென்றதுபோல நாமும் அவருடைய கிருபையைப் பெற்று வாழலாம்.