பில்லி கிரஹாம், தன் 16ஆம் வயதில், கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே, தன் பெற்றோருக்கு இயேசுவின் மேல் உள்ள தாகம் அவருக்கு வெளிப்படையாகத் தெரிந்தது. இருவருமே, கிறிஸ்தவ குடும்பத்திற்குள் இருக்கும்போதே விசுவாசத்திற்குள் வந்துவிட்டார்கள். அவர்களின் திருமணத்திற்குப் பிறகு, பில்லியின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அந்த உறுதியான விசுவாசத்தினை அன்போடுகூட தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். திருச்சபைக்கு ஒழுங்காகச் செல்லுதல், வேதவாசிப்பு, ஜெபம் போன்றவற்றில் அவர்களைப் பழக்கினார்கள். பில்லி கிரஹாமின் பெற்றோர்கள் அமைத்த உறுதியான அஸ்திபாரத்தினடிப்படையில், தேவன் அவரை விசுவாசத்திற்குள் கொண்டுவந்து, இறுதியில் அவரை ஒரு தைரியமான சுவிசேஷகராக உருவாக்கினார்.

அப்போஸ்தலனாகிய பவுலின் இளம் சீஷனான தீமோத்தேயுவும், உறுதியான ஆவிக்குரிய அஸ்திபாரத்தினால் பயனடைந்தார். பவுல், ‘உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும், உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது. அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறது” (2 தீமோ. 1:5). இந்த உறுதியான சாசனமானது, தீமோத்தேயுவின் இருதயத்தை கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்திற்கு நேராக திருப்ப உதவினது.

இப்பொழுது பவுல், தீமோத்தேயுவின் பாரம்பரிய விசுவாசத்தில் தொடரும்படியாக அவரை துரிதப்படுத்துகிறார். ‘உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்” (2 தீமோ. 1:6). ‘நீ வெட்கப்படாமல் தேவவல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கனுபவி” (2 தீமோ. 1:8) என்று கூறுகிறார். ஒரு உறுதியான சாசனமுள்ள ஆவிக்குரிய பின்னணி மட்டுமே நம்மை விசுவாசத்திற்குள் கொண்டுவரமுடியாது. ஆனால், மற்றவர்களின் சாட்சிகள் மற்றும் உருவாக்குதலின் மூலமே அதற்கான வழியை ஆயத்தப்படுத்த முடியும். நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்ட பிறகே, ஆவியானவர் நம்மை நம்முடைய ஊழியத்தில் நடத்தவும், அவருக்காக வாழவும், மட்டுமல்லாது, பிறரை விசுவாச வாழ்க்கையில் வளர்ப்பதற்குமான சிலாக்கியத்தை தந்தருளுவார்.