பாடுவதற்கு ஒரு காரணம்
ஒரு சட்டத்திட்டத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதனின் நிலையானது, உண்மையைச்சொல்லப் போனால், மிகவும் பரிதாபமான நிலையாகும். நான் என்ன செய்ய முடியும்? நான் தூங்கித்தான் போனேன். ஆனால், என்னுடைய பிள்ளைகள் சாயங்காலத்தில் வெளியே சென்றபோது, திடீரென ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அவர்கள் மிகவும் நல்ல பிள்ளைகள். ஆனால், அவர்கள் தங்கள் கைகளை வைத்து எங்கள் வீட்டின் முன் கதவினைத் திறக்கும் வரையில், நான் காத்திருப்பது என் வழக்கம். அவர்கள் வீட்டிற்கு பத்திரமாக வந்து சேர்ந்து விட்டதை அறிந்தபிறகே, நிம்மதியாக தூங்குவேன். நான் இப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நான் அதைத் தெரிந்துகொண்டேன். ஆனால் அன்று இரவு நான் திடீரென விழித்தபோது என்னுடைய மகள் புன்முறுவலோடு , 'அப்பா நான் பத்திரமாக இருக்கிறேன். நீங்கள் தூங்குங்கள்", எனக்கூறினாள். உயரிய நோக்கங்களையுடைய தகப்பன்மார்கூட சில சமயங்களில் தூங்கிவிடுவதுண்டு. அது தான் மனுஷீகம்.
ஆனால் இது ஆண்டவரிடத்தில் நடக்காது. தம்முடைய பிள்ளைகளுக்குரிய காப்பாளராக, பாதுகாப்பாளராக அவரைக் காட்டுவதில் (சங். 121) மறுஉறுதி அளிக்கிறது. சங்கீதக்காரன் நம்மைக் காக்கிற தேவன், 'உறங்குவதுமில்லை" என எழுதுகிறார். (வச. 3) அதை மீண்டும் வலியுறுத்த வசனம் 4ல் குறிப்பிடுகிறார். அவர் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை என திரும்பவும் பாடுகிறார்.
உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவர் வேலையில் தேவன் தூங்குகிறதுமில்லை, அவர் எப்பொழுதும் நம்மை விழிப்புடன் காக்கிறவராயிருக்கிறார். மகன்கள், மகள்கள், அத்தைகள், மாமாக்கள், தாய்மார்கள் ஏன் தகப்பன்மார்கள் எல்லாரையும் அவர் கண்விழித்து பாதுகாக்கிறார். இதை அவர் செய்யவேண்டியதில்லை. ஆனால், அவருடைய அதிகப்படியான அன்பினால், அவர் அந்த வாக்குத்தத்தைத் தெரிந்து கொண்டு இருக்கிறபடியால், அது பாடப்படவேண்டிய வாக்குத்தத்தமாக இருக்கிறது.
மற்றொரு வாய்ப்பு
பழைய இருசக்கர வாகனங்களின் கடையானது எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கிறது. அதில் சில தன்னார்வலர்கள், பழைய சைக்கிள்களைப் புதுப்பித்து அவைகளைத் தேவையுள்ளவர்களுக்கு வழங்குவார்கள். இந்த கடையின் உரிமையாளரான எர்னி கிளார்க் அவர்களும் பழைய இருசக்கர வாகனங்களை பழுது நீக்கி பல பெரியவர்களுக்கு இலவசமாக வழங்குவார். அதில் தங்கள் வாழ்க்கையை நடத்த கஷ்டப்படும் வீடற்றோர், ஊனமுற்றோர், இராணுவ ஓய்வுபெற்ற வீரர்களும் அடங்குவர். இருசக்கர வாகனங்கள் மட்டுமல்ல, பல சமயங்களில் அவைகளைப் பயன்படுத்துகிறவர்களும் இரண்டாவது வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள். ஒரு சமயம் ஒரு வீரன் தன்னுடைய நேர்முகத்தேர்விற்கு செல்ல அத்தகைய ஒரு வாகனத்தை பயன்படுத்தினார்.
இரண்டாவது வாய்ப்புகள் அதுவும் தேவனிடத்திலிருந்து வரும்பொழுது ஒரு மனிதனை முற்றிலும் மாற்றக்கூடிய வலிமையுடையது. இஸ்ரவேல் தேசமானது, லஞ்சம் மோசடி மற்றும் பல வகையான பெரும் பாவங்களில் நிறைந்திருக்கும்பொழுது, தேவன் கொடுத்த கிருபையினை மீகா கண்டு கொள்ளுகிறார். மீகா, 'தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை", எனப் புலம்புகிறார் (மீகா 7:2).
தேவன் தீமையை சரியான வகையில் நியாயம் தீர்ப்பார். என்பது மீகாவிற்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவருடைய அன்பின் நிமித்தமாக, மனந்திரும்புகிற எல்லாருக்கும் அவர் மறு வாய்ப்பினை அளிக்கிறார். அந்த அன்பினாலே ஆட்கொள்ளப்பட்டவராய், மீகா, 'தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பானவர் யார்?"(வச. 18).
நாம் அவரிடத்தில் மன்னிப்பு கேட்டால், நம்முடைய பாவங்களினிமித்தம் நாம் ஒதுக்கப்படாதபடி, தேவனுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிக்கக்கூடும். மீகா கூறின விதமாக, 'அவர் திரும்ப நம்மேல் இரங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிட்டார்" (வச. 19). அவரைத் தேடுகிற யாவருக்கும் தேவனுடைய அன்பானது இரண்டாவது வாய்ப்பினை அருளுகிறது.
ஞானத்தினால் ஆச்சரியம்
'நான் அதிகமாக முதிர்வடையும்போது மிகவும் ஞானமுள்ளவளாகிறேன். சில சமயங்களில் நான் என் மகனிடத்தில் பேசும்பொழுது, உம்முடைய வார்த்தைகளே என் வாயிலிருந்து வருகிறது", என என் மகள் கூறினாள்.
என் மகளின் கள்ளங்கபடமற்ற இந்த பேச்சு என்னை சிரிக்க வைத்தது. இதேபோல என் பிள்ளைகளை வளர்க்கும்போதும், என் பெற்றோர்கள் என்னிடத்தில் உபயோகித்த வார்த்தைகளையே நானும் உபயோகித்தேன். நான் ஒரு தகப்பனாக மாறினபொழுது, என் பெற்றோர்களின் ஞானத்தைக்குறித்த எனது கருத்துக்கள் மாறியது. ஒரு சமயத்தில் 'முட்டாள்தனமானது", என்று நான் ஒதுக்கித் தள்ளினவைகள் எல்லாம் நான் நினைப்பதற்கும் மேலான ஞானமுள்ளது என்பதை இப்பொழுது அறிந்து கொண்டேன். இவைகளை நான் முதலில் அறிந்து கொள்ள முடியவில்லை.
வேதாகமம், 'தேவனுடைய பைத்தியமானது உலகில் மிகப்பெரிய ஞானமாயிருக்கிறது", என போதிக்கிறது (1 கொரி. 1:25)." தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று (வச. 21).
நம்மை ஆச்சரியப்பட வைக்கும் வழிகளை தேவன் நமக்காக எப்பொழுதும் வைத்திருக்கிறார். ஒரு வெற்றியுள்ள ராஜா இந்த உலகத்திற்கு வருவதற்கு பதிலாக, தேவனுடைய குமாரன் ஒரு பாடுகளுள்ள வேலையாளாக வந்து, தன்னை மிகவும் தாழ்மையான சிலுவைமரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். அவர் மகிமைக்குள் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன் இவை நடந்தன.
தேவனுடைய ஞானத்தில், தாழ்மையானது பெருமைக்கும் மேல் மதிப்பிடப்படுகிறது. அன்பானது தகுதியில்லாத இரக்கம் மற்றும் கனிவிற்க்கு மேலாக மதிப்பிடப்படுகிறது. சிலுவையின் மூலமாக, நம்முடைய ஜெயிக்க முடியாத மேசியா, நம்மை மீட்கும்படி பிரதானமான பலியாக மாறினார் (எபி. 7:25).
இதனால், இரட்சிக்கப்படுகிறவர்கள் அவருக்குள்ளாக தங்கள் விசுவாசத்தை வைக்கக்கூடும்.
நீங்கள் ஓய்வெடுக்கவேண்டும்!
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளியிடம் மருத்துவர், 'நீங்கள் கண்டிப்பாக ஓய்வு எடுக்கவேண்டும்", என அறிவுறுத்துகிறார். 'ஓய்வு?" நான் ஓய்வாகத்தான் இருக்கிறேன் என்று குழப்பத்தோடு பதிலளித்தார் வில்மர். அதே குழப்பத்தோடு, அவர் மிகவும் ஏளனமாக, 'நான் இதைவிட ஓய்வாக இருக்க வேண்டுமெனில், அது என்னுடைய மரணத்தின்போது தான்", என்று கூறினார்.
இதை இணைத்துப் பார்க்க முடியுமா? டாக்டரின் பலவிதமான ஆலோசனைகள் வில்பருக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும், வில்பரின் பதில்கள் நியாயமானதாகத் தோன்றுகிறது. ஆனால், இந்தக் காட்சியானது நகைப்பிற்குரியதாகிறது. ஏனெனில், நாம் குழப்பமடையும்போது எவ்வாறு உணர்கிறோம்- நாம் சந்திக்கக்கூடிய சூழ்நிலைகள் நம்முடைய வாழ்க்கையையே பயமுறுத்தக்கூடியதாக அமைகிறது.
நாம் பயங்கரமான சூழ்நிலையில் இருக்கும்போது, நமக்கு ஓய்வு தேவை என்ற ஆலோசனை நமக்கு ஏளனமாகப்படுகிறது. என் வாழ்வின் பயமுறுத்தும் பல சூழ்நிலைகள் என்னை இறுக்கும்போது, மரணக்கட்டுகள் (சங். 116:3) என்னைச் சுற்றிக் கடினமாக பிடித்து இழுக்கும்போது, என்னுடைய ஒவ்வொரு சித்தமும் அதற்கு எதிராகப் போராடவேண்டும் என்று நினைக்குமேயொழிய ஓய்வாக இருக்கவேண்டும் என்று நினைக்காது.
'அப்பொழுது நான் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன்." (சங். 116:4). அப்பொழுது ஆச்சரியமாக ஏதோ ஒன்று எனக்கு நேரிடுகிறது. எனக்குள்ளாக இறுக்கப்பட்டிருக்கிற அந்த முடிச்சு இளகுகிறது (வச. 7). என்னால் புரிந்துகொள்ள முடியாத ஒரு சமாதானம் எனக்குள்ளாக விரைவாக ஊடுருவி வருகிறது. என்னைச் சுற்றியுள்ள ஆவியானவரின் பிரசன்னமானது என்னை ஆறுதல் படுத்தும்போது, நான் சுவிசேஷத்தின் இதயமான சத்தியத்தை நான் ஓரளவு புரிந்து கொள்கிறேன். அதாவது, நம்முடைய ஆண்டவரின் பலத்த புயத்திற்குள் நம்மை அர்ப்பணிக்கும் போது, நாம் சிறந்த முறையில் போராடமுடியும் என்ற சத்தியத்தைப் புரிந்து கொள்ளுகிறோம் (1 பேது. 5:6,7).
வேலையாளியின் இருதயம்
சமையல் வேலை, நிகழ்வுகளைத் திட்டமிடுதல், உணவு ஆலோசகர் மற்றும் செவிலி போன்ற பொறுப்புகளை நிறைவேற்றுகிறவள் தான் நவீனத் தாயார். 2016ல் ஏற்பட்ட கணக்கெடுப்பின்படி ஒரு சராசரித் தாயாரானவள் ஒரு வாரத்தில் 59-96 மணிநேரங்கள் குழந்தைக்கான வேலைகளில் ஈடுபடுகின்றாள் என்று கூறப்படுகின்றது. தாய்மார்கள் அதிகக்களைப்படைவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரு தாய் என்கின்ற போது, அவள் குழந்தைக்காக அதிகநேரம் செலவழிக்கின்றாள் என்பதேயாகும். ஏனெனில், இவ்வுலகினை அறிந்து கொள்ள குழந்தைக்கு அதிக உதவி தேவைப்படுகின்றது.
என்னுடைய நாட்கள் நீண்டதாக நான் உணரும் போது மற்றவர்கள் மீதான அக்கறையே நான் நாட வேண்டிய முக்கியமான ஒன்று என்பதை நான் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். பணியாளர்களை இயேசுவானவர் உயர்த்திக்காட்டும் பொழுது அதைக்குறித்த நம்பிக்கை எனக்குள் ஆழமாக உண்டாகிறது.
மாற்கு சுவிசேஷத்தில் சீடர்களுக்கு மத்தியில் பரலோக இராஜ்ஜியத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று ஒரு வாக்குவாதம் உண்டாகிறது. இயேசுவானவர் அமைதியாக உட்கார்ந்து அவர்களுக்கு, 'எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன்" (மாற். 9:35) என்று கூறுகிறார். பிறகு ஒரு சிறு பிள்ளையைக் கையில் எடுத்து, மற்றவர்களுக்கு, குறிப்பாக நம்மில் மிகவும் உதவியற்றவர்களுக்கு சேவை செய்வதைக்குறித்த உதாரணத்தைக் கற்பித்தார். (வச. 36,37).
கிறிஸ்துவின் பதிலானது, பரலோக இராஜ்ஜியத்தில் எது பெரியது என்பதை நமக்குத் தெளிவாக விளக்கிக்காட்டுகிறது.மற்றவர்களுக்கு மனமார்ந்த உதவிகளைச் செய்வதே அவருடைய தரமாக இருக்கிறது. ஊழியம் செய்வதைத் தெரிந்து கொண்டவர்கள்மேல், அவருடைய வல்லமையளிக்கும் பிரசன்னம் எப்பொழுதும் இருக்கும் (வச. 37). உங்கள் குடும்பத்திலோ அல்லது சமுதாயத்திலோ நீங்கள் ஊழியம் செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதிக உற்சாகத்தோடு அதைச் செய்யுங்கள். ஏனெனில், நீங்கள் ஊழியம் செய்யும் நேரத்தையும், முயற்சிகளையும் இயேசுவானவர் அதிகமாக கனப்படுத்த விரும்புகிறார்.