ஏறக்குறைய எல்லா கோடைக்கால காலை வேளைகளிலும் ஒரு அருமையான நாடகத்தைப்போன்ற ஒரு காட்சி எங்கள் வீட்டிற்குப் பின்புறமுள்ள ஒரு பூங்காவில் நடைபெறும். அது ஒரு நீரூற்றையும், ஒரு மிகப்பெரிய நாயையும் உள்ளடக்கிய ஒரு காட்சி. காலை சுமார் 6:30 மணியளவில் நீரூற்றுக்களிலுள்ள நீரானது மேலே வரும். அதற்கு சற்று நேரத்திற்கு அப்பால் ஃபிஃபி என்கிற பெரிய நாய் (அந்த நாய்க்கு நாங்கள் வைத்த பெயர்) வந்துவிடும்.

ஃபிஃபியின் எஜமானி அதை கட்டவிழ்த்து விடும்போது, அந்த நாய் மிகவும் வேகமாக ஓடி, தனக்கு அருகாமையிலுள்ள நீரூற்றினை அடையும். அந்த நீரூற்றிலிருந்து வரும் நீரைத் தாக்கும். ஆனால், அதன் தண்ணீரோ, அந்த நாயின் முகத்தை நனைத்து விடும். அது அந்த நீரூற்றையே கடித்து சாப்பிட்டாலும் சாப்பிட்டு விடும் போலத் தெரிந்தது. இது ஃபிஃபி அந்த நீரூற்றினால் தன்னை முழுவதும் நனைத்துக்கொள்ள விரும்பியும், முழுவதுமாக நனையாமல் போகும் ஒரு காட்சியைத்தான் நாங்கள் அங்கு காண்போம்.

வேதாகமத்தில் பெரிய நாய்களோ அல்லது நீரூற்றுகளோ இல்லை. ஆயினும் எபேசியர் 3ம் அதிகாரத்தில் பவுலின் ஜெபமானது, எனக்கு ஃபிஃபியை ஞாபகப்படுத்துகிறது. இங்கு பவுல், எபேசிய விசுவாசிகள் தேவனுடைய அன்பினாலே நிரப்பப்படவும், ‘சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து” (எபே. 3:18) என எழுதுகிறார்.

இன்று வரையிலும், நாம் நம் கற்பனைக்கு எட்டாத எல்லையற்ற அன்பினையுடைய தேவனோடு ஐக்கியம் கொள்ள அழைக்கப்படுகிறோம். அவருடைய நன்மையில் நாம் மூழ்கடிக்கப்படவும், நனையப்படவும், பூரண திருப்தியடையவும் வேண்டுமென விரும்புகிறார். நாம், தேவனுடைய, எதையும் எதிர்பாராத அன்பினாலே மூழ்கடிக்கப்பட்டு, நம்முடைய இருதயங்களை அன்பினாலே, அர்த்தமுள்ள மற்றும் நோக்கத்தோடு நிரப்பத் தகுதியான ஒருவரின் அன்போடு நாம் விடுதலையோடு பங்கு கொள்ளலாம்.