இடத்தில் இருந்தது. அதில் காணப்பட்ட எந்த ஒரு காரியமும் சிறப்பானதாகக் காணப்படவில்லை. ஆனாலும் ஜோஸ் ஆல்பர்ட்டோ கட்டிரஸ் என்பவர் எழைப்பிள்ளைகளுக்குக் கொடுக்கும்படியாக சேகரிக்கப்பட்ட 25,000 புத்தகங்கள், கொலம்பியாவின் தலைநகரிலுள்ள அந்த பழைய புத்தக வியாபாரியின் வீட்டில் இருந்தது.

உள்ளூர் பிள்ளைகள் அங்கிருந்த அந்த நூலகத்திற்கு வார இறுதியில் சென்று வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு அறையாக தேடிச் சென்று, பல புத்தகங்களைக் கட்டி எடுத்துச் செல்வார்கள். பிள்ளைகள் அந்த எளிமையான வீட்டினை, ஜோஸ் என்ற பெரியவர் வீட்டை விட பெரிதாக நினைத்தார்கள்.  அது விலைமதிப்பு மிக்க ஒரு பொக்கிஷம். இது கிறிஸ்துவைப் பின்தொடரும் ஒவ்வொருவருக்கும் பொருத்தமானதாகும். நாம் சாதாரணமாக களிமண்ணினால் உண்டாக்கப்பட்டிருகிறோம்.  பல விதமான விரிசல்களோடு எளிதில் உடைந்துபோகக்கூடிய வகையில் இருக்கிறோம். ஆனால், நாம் உடைந்துபோன உலகத்திற்கு சுவிசேஷத்தைக் கொண்டு செல்ல நமக்கு உதவி செய்யும் பரிசுத்த ஆவியானவரை நம் வாழ்க்கையில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பினை தேவன் நம்மிடம் கொடுத்திருக்கிறார். இது சாதாரண மற்றும் பலனற்ற மக்களுக்கான மிகப் பெரிய வேலையாகும். ‘இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களில் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி இந்த பொக்கிஷங்களை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்”
(2 கொரி. 4:7) என்று அப்போஸ்தலனாகிய பவுல் பழைய பட்டணமான கொரிந்துவிலுள்ள தன்னுடைய சபையாருக்கு எழுதுகிறார். அவர்கள் அந்த பிராந்தியத்திலுள்ள பலதரப்பட்ட வர்க்கத்தை சேர்ந்தவர்களானபடியால், பவுல், ‘நாங்கள் எங்களையே பிரசங்கியாமல்” (2 கொரி. 4:5) என்று அவர்களுக்கு எழுதுகிறார்.

அதற்கு பதிலாக, நமக்குள்ளாக வசிக்கும் விலைமதிப்பில்லாத ஒருவரை பிரசங்கியுங்கள் எனக் கூறுகிறார். அது அவரும், அவருடைய எல்லா சக்திக்கும் மேலான வல்லமையும் நம்முடைய சாதாரண வாழ்வினை விலைமதிப்பில்லாத பொக்கிஷமாக மாற்றும் என்பதாகும்.