1963 ஆம் ஆண்டு கோடையில் ஓர் இரவு முழுவதும் பேருந்தில் பிரயாணம் செய்தபின், மனித உரிமைக்காகப் போராடும் ஃபான்னி லூ ஹேமரும், அவரோடு பிரயாணம் செய்த ஆறு ஆப்பிரிக்க பிரயாணிகளும் சாப்பிடுவதற்காக மிஸிஸிப்பியிலுள்ள வினோனா என்ற இடத்தில் சேர்ந்தனர். சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் ஓர் அலுவலர் அவர்களை அந்த இடத்தைவிட்டுச் செல்லுமாறு கட்டாயப்படுத்தி கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர். இவர்கள் சட்ட விரோதமாக சிறையிலடைக்கப்பட்ட அவமானத்தோடு நின்று விடாமல், அவர்களனைவரும் கொடூரமாக அடிக்கப்பட்டனர். அதிலும் ஃபான்னி மிகவும் மோசமாக. மிருகத்தனமான தாக்குதலுக்குள்ளாகி, சாகும் நிலையில் இருந்த போதும் அவள் பாட ஆரம்பித்தாள், அவர் மட்டும் தனியாகப் பாடவில்லை மற்ற இடங்களில் இருந்த கைதிகளும் சரீரம் கட்டப்பட்டிருந்தாலும் ஆன்மாவில் ஒருமனத்தோடு பவுலும் சீலாவும் கட்டப்பட்டிருந்தனர். என் மக்களைப் போகவிடு” என்று பாடித் துதித்தனர்.

அப்போஸ்தலர் 16ல் கூறியுள்ளபடி பவுலும், சீலாவும் ஒரு கடினமான இடத்திலிருந்தனர். அவர்கள் சிறையிலிருந்தபடியால் இயேசுவைப் பற்றி அங்கு கூற முடியாது. ஆனால், எந்த கடினமான சூழலும் அவர்களுடைய நம்பிக்கையை தணித்து விடவில்லை. “நடுராத்திரியிலே பவுலும், சீலாவும் ஜெபம் பண்ணி தேவனைத் துதித்துப் பாடினார்கள்” (வச. 25). அவர்களுடைய தைரியமான ஸ்தோத்திரப் பாடல் இயேசுவைப் பற்றி தொடர்ந்து கூறும்படி ஒரு வாய்ப்பளித்தது. பின்னர், “சிறைச்சாலைக்காரனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்” (வச. 32).

பவுலும் சீலாவும் அல்லது ஃபான்னியும் அநுபவித்ததைப் போன்ற கொடுமையான சந்தர்ப்பங்களை நம்மில் அநேகர் சந்தித்திருக்க முடியாது. ஆனால், நாம் ஒவ்வொருவரும் ஏதோவொரு மோசமான சூழலைச் சந்தித்திருப்போம். அப்படிப்பட்ட சுழ்நிலைகளில் நமக்குத் தேவையான பெலன் நம்முடைய உண்மையுள்ள தேவனிடமிருந்தே வரும். நாம் தேவனைப் போற்றும்படியான ஒரு பாடல் நம்முள்ளத்திலிருந்து எழும்மட்டும் பிரச்சனைகளின் மத்தியிலும் நாம் அவருக்காகத் தைரியமாகப் பேசும்படி தேவன் நம்மை பெலப்படுத்துவார்.