ஆரோன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பதினைந்து வயதாயிருக்கும் போது சாத்தானிடம் ஜெபிக்க ஆரம்பி;த்தான். “நானும் அவனும் பங்காளிகளென நான் உணர்கிறேன்” என ஆரம்பித்த ஆரோன், பொய் கூறவும், திருடவும் ஆரம்பித்தான். தன் குடும்பத்தையும் நண்பர்களையும் திறமையாகக் கையாண்டான். அவனுக்கு பயங்கர கனவுகள் தோன்றின. “ஒரு நாள் காலை நான் எழுந்திருந்தபோது என் படுக்கையின் ஓரத்தில் சாத்தானிருக்கக் கண்டேன். ஆவன் என்னிடம் நீ இந்த தேர்வில் வெற்றிபெறுவாய் அதன் பின்னர் மரித்துவிடுவாய்” எனறான். தேர்வுகள் முடிந்த பின்னரும் அவன் உயிரோடிருந்தான். அதனைக் குறித்து ஆரோன் சிந்திக்க ஆரம்பித்தான். “எனக்கு இப்போது தெளிவாகிவிட்டது அவன் ஒரு பொய்யன்” என்று கூறினான்.

பெண்களைச் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்டு, ஆரோன் ஒரு கிறிஸ்தவ கொண்டாட்டத்தில் கலந்துகொண்டான். அங்கு ஒரு மனிதன் ஆரோனுக்காக ஜெபித்தான். “அவர் ஜெபித்தபோது எனக்குள் ஒரு சமாதானம் அலையைப் போல என் உடலினுள் வந்ததையுணர்ந்தேன்.” என்றான். ஏதோவொன்று “அதிக வல்லமையுள்ளதாகவும், விடுவிக்கிறதாயும்” தனக்குள் வந்ததை உணர்ந்தான். அது சாத்தானிடமிருந்து அவன் பெற்றுக் கொண்டதைக் காட்டிலும் மேலானதாக இருந்தது. அவனுக்காக  ஜெபித்த அந்த மனிதன், ஆரோனிடம், தேவன் உனக்கொரு திட்டத்தை வைத்திருக்கிறார், சாத்தான் ஒரு பொய்யன் என்று கூறினார். இயேசு தன்னை எதிர்த்த மனிதர்களிடம் சாத்தானைப் பற்றி கூறிய பதிலையே இந்த மனிதனும் கூறினார். “அவன் பொய்யனும், பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான்? (யோவா. 8:44) என்றார்.

சாத்தானின் பிடியிலிருந்து விடுபட்டு, ஆரோன் தேவனிடம் திரும்பினான். இப்பொழுது அவன் “இயேசுவுக்குச் சொந்தம்” (வச. 47). இப்பொழுது அவன் நகர்புறத்திலுள்ள ஒரு சமுதாயத்தினருக்கு ஊழியம் செய்கின்றான். இயேசுவைப் பின்பற்றுவதால் வரும் மாற்றங்களைக் குறித்துப் பகிர்ந்துகொளகின்றான். இயேசுவின் விடுவிக்கும் வல்லமைக்கு அவன் ஓர் உயிருள்ள சாடசியாக இருக்கின்றான். “இயேசு என் வாழ்வைக் காப்பாற்றினாரென என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்கின்றான்.

எல்லா நன்மைகளுக்கும், பரிசுத்தத்திற்கும் உண்மைக்கும் மூலக்காரணர் நம் தேவன். நாம் அவரிடம் திரும்பினால் உண்மையைத் தெரிந்துகொள்வோம்.