உன் வாழ்வில் விளக்கு எரிந்து கொண்டேயிருக்கட்டும்
எங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வேலை என்னையும், என்னோடு பணிபுரியும் மற்றொருவரையும் 250 மைல்களுக்கப்பால் கொண்டு சென்றது. நாங்கள் வேலையை முடித்துவிட்டுத் திரும்பிய போது மாலை அதிக நேரமாகிவிட்டது. வயது சென்றதாலும், கூரியபார்வை குறைந்து விட்டதாலும் இரவில் வாகனத்தை ஓட்டுவதில் சற்று சிரமமிருந்தது. இருந்த போதிலும் நானே முதலாவதாகச் செல்ல விரும்பினேன். என்னுடைய கரங்கள் திசை மாற்றுச் சக்கரத்தை நன்கு பற்றியிருக்க, என்னுடைய கண்கள் கவனமாக அந்த மங்கலான ஒளியில் சாலையை கவனித்தன. நான் ஓட்டிச் செல்கையில், அந்த நெடுஞ்சாலையில் எனக்குப் பின்னால் வந்த வாகனங்களிலிருந்து வந்த ஒளிக்கற்றை நான் அந்தச் சாலையை நன்கு பார்க்க உதவியது. என்னுடைய நண்பன் தன்னுடைய காரை வேகமாக ஓட்டிக் கொண்டு எனக்கு முன்னே வந்த போது நான் சற்று நிம்மதி அடைந்தேன். அவன் என்னிடம் வந்து, நான் முன் விளக்குகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக பனிப்படல விளக்குகளை பயன்படுத்தி ஓட்டிக் கொண்டிருப்பதாகச் சுட்டிக் காட்டினான்.
நம்முடைய அனுதின வாழ்விற்குத் தேவையான வெளிச்சத்தைத் தருவது தேவனுடைய வார்த்தைகளே (வச. 105) என முற்றிலும் புரிந்து கொண்ட ஒருவருடைய மிகச்சிறந்த படைப்புதான் சங்கீதம் 119. நான் அந்த நெடுஞ்சாலையில், அந்த இரவில் சந்தித்த பிரச்சனையைப் போன்று, நம் வாழ்விலும் எத்தனை, அடிக்கடி அப்படிப்பட்ட சூழல்களைச் சந்திக்கின்றோம். நாம் தெளிவாகப் பார்க்கும்படிக்கு நம்மை வருத்திக் கொள்கின்றோம், சில வேளைகளில் நல்ல பாதையைவிட்டு விலகி விடுகின்றோம். ஏனெனில், நாம் தேவன் தரும் ஒளியாகிய தேவனுடைய வார்த்தையை மறந்து விடுகின்றோம். சங்கீதம் 119 நம்மை முன் விளக்கின் சுவிட்சை அவிழ்த்து விடும்படி நம்மைத் தூண்டுகிறது. நான் அந்த விளக்கைப் போடும் போது என்ன நடக்கின்றது? நாம் சுத்தப்படுத்தப்படும்படி ஞானத்தைக் கண்டடைகிறோம் (வச. 9-11). நாம் வீணாக அலைந்து திரிவதைத் தவிர்க்கும்படி புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கண்டு கொள்கின்றோம் (வச. 101-102). நாம் வேதத்தின் வசனமாகிய வெளிச்சத்தில் வாழும் போது சங்கீதக்காரனின் துதியும் நம்முடைய துதியாக மாறும். 'உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுவதும் அது என் தியானம்" என்போமாக.
என்னுடைய உண்மை நிலையை கண்டுகொள்ளல்
நான் யார்? என்று ஒரு மங்கிப்போன, பஞ்சடைக்கப்பட்ட மிருக பொம்மை தன்னைக் கேட்டுக் கொண்டது. மைக் இங்க் பென் எழுதிய 'ஒன்றுமில்லை" என்ற குழந்தைகளின் புத்தகத்தில் இதனைக் காணலாம். ஒரு பரணின் மூலையில் தூசிபடிந்து கிடந்த அந்த மிருகத்தை அங்கு வந்த பொருட்களை அடுக்குபவர்கள் 'ஒன்றுமில்லை" என அழைத்ததால் 'ஒன்றுமில்லை" என்பதே தன்னுடைய பெயரென அது நினைத்துக் கொண்டது.
அது மற்ற மிருகங்களைச் சந்தித்த போது தன்னைப் பற்றிய நினைவைத் திரும்பப் பெற்றது. இப்பொழுது 'ஒன்றுமில்லை" தனக்கு ஒரு வாலிருந்தது, மீசை முடிகளிருந்தன, தன் உடலில் கோடுகள் வரையப்பட்டிருந்தன என்பதை நினைவு கூர்ந்தது. டாபி என்ற பூனையைச் சந்தித்தப் பின்னர் தான், தன்னுடைய வீட்டிற்கான வழியையும் தான் யாரென்பதையும் ஒன்றுமில்லையால் நினைவுபடுத்த முடிந்தது. உண்மையில் அது டோபி என்றழைக்கப்படும் ஒரு பஞ்சு பூனை பொம்மை. அதனுடைய எஜமானன் அன்போடு அதனைச் சேர்த்துக் கொண்டு, அதன் மீது புதிய காதுகளைத் தைத்தார், வாலையும், மீசை முடிகளையும், உடலின் கோடிகளையும் கொடுத்தார்.
நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போதெல்லாம், நான் என்னுடைய அடையாளத்தைக் குறித்து சிந்தித்துக் கொள்வேன். நான் யார்? யோவான் விசுவாசிகளுக்கு எழுதும் போது, தேவன் நம்மை அவருடைய பிள்ளைகளென அழைப்பதைக் குறிப்பிடுகின்றார் (1 யோவா. 3:1). இந்த அடையாளத்தை நாம் முற்றிலுமாக புரிந்துகொள்வதில்லை. ஆனால், நாம் இயேசுவைப் பார்க்கும் போது நாம் அவரைப் போன்றிருப்போம் (வச. 2). டோபி என்ற அந்தப் பூனையைப் போல நாமும் நமக்கென்று நியமிக்கப்பட்டுள்ள அடையாளங்களைப் பெற்றுக் கொள்வோம். அந்த அடையாளம் இப்பொழுது பாவத்தால் மறைந்துவிட்டது. ஆனாலும், நாம் அந்த அடையாளத்தின் ஒரு பகுதியை நாம் தேவனுடைய சாயலாக இருப்பதை நாம் ஒவ்வொருவரும் கண்டுபிடிக்க முடியும். ஒரு நாள் நாம் இயேசுவைக் காணும் போது. தேவன் நமக்கென்று வைத்துள்ள அடையாளத்தை முற்றிலும் மீண்டும் பெற்றவர்களாகக் காணப்படுவோம். நாம் புதிதாக்கப்படவோம்.
அன்பும் சமாதானமும்
வல்லமையுள்ள சமாதானம், நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு தேவ சமாதானம் நம்முடைய ஆழ்ந்த துயரத்தின் போது நம்முடைய இருதயங்களை நிரப்புகிறது (பிலி. 4:7), என்பதை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது. நான் இதனை சமீபத்தில் என்னுடைய தந்தையின் நினைவு ஆராதனையில் உணர்ந்தேன். ஒரு நீண்ட வரிசையில், அனுதாபத்தைத் தெரிவிக்கும்படி மக்கள் கடந்து வந்து தங்களுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டபோது, நான் என் பள்ளித் தோழனைச் சந்தித்த போது வெகுவாக சமாதானம் பெற்றேன். ஒரு வார்த்தையும் பேசாமல், அவன் என்னை அணைத்துக் கொண்டான். அவனுடைய அமைதியான புரிந்து கொள்ளல், அந்தக் கவலையும் கஷ்டமும் நிறைந்த நாளில் என்னைச் சமாதானத்தால் நிரப்பிற்று. நான் நினைத்துக் கொண்டபடி தனிமையிலில்லை என்ற வலிமையான நினைவைத் தந்தது.
சங்கீதம் 16ல் தாவீது விளக்குவது போல, நம்முடைய வாழ்வின் கடினமான சூழல்களில் தேவன் தருகின்ற சமாதானமும், மகிழ்ச்சியும் நம்முடைய சொந்த பெலத்தினால் நாம் பெற்றுக் கொண்டதல்ல. ஆனால், அது நாம் தேவனிடத்தில் பாதுகாப்பைத் தேடும் போது நாம் அநுபவிக்கும்படி அவர் நமக்குத் தருகின்ற மிகப் பெரிய ஈ.வு. (வச. 1-2).
மரணம் கொண்டு வருகின்ற வேதனைகள் சில வேளைகளில் நம்மை வழிதவறச் செய்து, ஒருவேளை அந்நிய தேவர்களிடம் கொண்டு சென்றால், அங்கு இந்த வேதனைகளைத் தள்ளிவிடலாம் என்று எண்ணுவோமாயின் அது தவறு. அது இன்னும் அதிக வேதனையையே கொண்டு வரும் (வச. 4).
நாம் இதனைப் புரிந்து கொள்ளமுடியாவிடினும், நம்பிக்கையோடு தேவனிடம் திரும்புவோம். தேவன் நமக்குத் தந்த இந்த வாழ்வு வேதனை நிறைந்ததாயிருந்தாலும் அது இன்னமும் அழகாகவும், நல்லதாகவுமேயுள்ளது (வச. 6-8). நம்முடைய வேதனையின் வழியே நம்மை அன்போடு சுமந்து சென்று, மரணம் கூட எடுத்து விட முடியாத நித்திய சமாதானம், மகிழ்ச்சிக்குள் நம்மை அழைத்துச் செல்பவரின் அன்பு கரங்களில் நம்மை அர்ப்பணிப்போம் (வச. 11).
ஆயத்தம் செய்யப்பட்டுள்ள நற்கிரியைகள்
வெளிநாட்டில், ஒரு தெரு வழியே நானும் என் மனைவியும் சென்று கொண்டிருந்த போது, கம்பீரமான ஒரு மனிதன் எங்களை நோக்கி வந்த போது நாங்கள் பயத்தால் பின்வாங்கினோம். எங்களுடைய விடுமுறை நாட்கள் மோசமாகப் போய் கொண்டிருந்தது. சிலர் எங்களிடம் கத்தினர், எங்களை ஏமாற்றினர், அநேக முறை அச்சுறுத்தலையும் சந்தித்தோம். ஒரு வேளை மீண்டும் எங்களை கீழே தள்ளப் போகின்றாரா? என்ன ஆச்சரியம்! அந்த மனிதன் அவருடைய பட்டணத்தின் சிறந்த காட்சியை எங்கிருந்து பார்த்தால் தெளிவாகக் காண முடியும் எனச் சுட்டிக்காட்டினார். பின்னர், அவர் எங்களுக்கு ஒரு சாக்லேட் கட்டியைக் கொடுத்து விட்டு சிரித்து எங்களை விட்டுப் பிரிந்து சென்றார். அந்த சிறிய செயல் அந்த நாளையும் எங்களுடைய முழுபயணத்தையும் மகிழ்ச்சியாக்கியது. எங்களை மகிழச் செய்த அந்த மனிதனையும், தேவனையும் நன்றியோடு நினைக்கச் செய்தது.
அந்த மனிதன் இரு அந்நியர்களுக்கு உதவும்படி அவரைத் தூண்டியது யார்? அவர் அந்த நாள் முழுவதும் சாக்லேட் கட்டிகளோடு, யாரிடமாகிலும் கொடுத்து ஆசிர்வதிக்கும்படி திரிந்து கொண்டிருந்தாரா?
ஒரு சிறிய நற்கிரியை, பெரிய மகிழ்ச்சியைத் தந்து, ஒருவரை தேவனுக்கு நேராக வழிநடத்த முடிகிறது என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டேன். வேதாகமம் நற்கிரியைகள் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது (யாக். 2:17,24). அது ஒருவேளை சவால் மிக்கதாகத் தோன்றினாலும் தேவன் நம்மை இத்தகைய காரியங்களைச் செய்யும்படி அவர் நமக்கு பெலனளிக்கிறார், நமக்கு உறுதியளிக்கின்றார். ''அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கின்றார்" (எபே. 2:10).
இன்று யாரோ ஒருவருக்கு ஊக்கமளிக்கும் சில வார்த்தைகள் தேவையென்பதையறிந்து தேவன் நம்மை அவர்களோடு தொடர்பு கொள்ளச் செய்கின்றார். பிறருக்கு உதவும்படி நமக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கின்றார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவருக்குக் கீழ்படிந்து செயல்படுதலே.