2003 ஆம் ஆண்டு வந்த மோர்மார் வெட்டுக் கிளிகளின் படையெடுப்பால் 25 மில்லியன் டாலர் பயிரிழப்பு ஏற்பட்டதாகக் கணக்கிடப்பட்டது. ஜனங்கள் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் 25 மில்லியன் டாலர் பயிரிழப்பு ஏற்பட்டதாகக் கணக்கிடப்பட்டது. ஜனங்கள் வெட்டுக்கிளிகளின் மேல் கால்வைக்காமல் ஓர் எட்டு கூட நடக்கக் கூடாதபடி அதன் எண்ணிக்கை மிகவும் பெரியதாயிருந்தது. 1848 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்த பச்சை வெட்டுக்கிளிகள் பவுஞ்சுகளாக வந்தபோது, ஒவ்வொரு வெட்டுக்கிளியும் தன் வாழ்நாளில் 38 பவுண்டு தாவரங்களை உண்கின்றன என கணக்கிடப்பட்டது. இவற்றின் படையெடுப்பின் விளைவாக ஒரு விவசாயியின் வாழ்விலும், ஒரு மாநிலம் மற்றும் ஒரு நாட்டின் பொருளாதாரத்திலும் பேரழிவு ஏற்பட்டது.

யூதா ஜனங்கள் அனைவரும் கீழ்படியாமற் போனபடியால், இத்தகைய ஒரு பெருங்கூட்டமான பூச்சிகள் யூதா தேசம் முழுவதிலும் இதுவரைக் கண்டிராத அளவு பெரிய நாசத்தை ஏற்படுத்தின என பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி யோவேல் விளக்குகின்றார். அவர் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பைக் குறித்து முன்னறிவித்தார் (வேத வல்லுனர்கள் இதனை ஓர் அந்நிய இராணுவப் படையினருக்குச் சமமானதாகக் குறிப்பிடுகின்றனர்) (யோவேல் 1:2). அந்த வெட்டுக்கிளிகள் தாங்கள் காண்கின்ற யாவற்றையும் நாசமாக்கி, ஜனங்களை பஞ்சத்திற்கும் வறுமைக்கும் உள்ளாக்கின. எனினும் ஜனங்கள் தங்களுடைய பாவ வழியை விட்டுத் திரும்பி தேவனிடம் மன்னிப்பு கேட்கும் போது ‘வெட்டுக்கிளிகளும்… பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்” என தேவன் கூறுவதாகத் தெரிவிக்கின்றார்.

யூதாவிடமிருந்து நாமும் ஒரு பாடத்தை கற்றுக் கொள்ளலாம். இந்தப் பூச்சிகளைப் போன்று நம்முடைய தவறுகள் தேவன் நமக்கு வைத்திருக்கின்ற நன்மைகளையும் தேவனுடைய வாசனை வீசும் வாழ்வையும் இழக்கச் செய்கின்றன. நம்முடைய பழைய வாழ்வை விட்டுவிட்டு நாம் தேவனிடம் திரும்பும் போது, தேவன் நம்முடைய வெட்கத்தை மாற்றி அவருக்குள் ஒரு நிறைவான வாழ்வை மீண்டும் தருகின்றார்.