கிராடட் என்ற மீனினத்தின் அவலநிலை
என்னுடைய உறவினன் என்னை கிராடட் என்றழைக்கப்படும் கிரே மீன்களைப் ஒருவகை தண்ணீர் லாப்ஸ்டர்) பிடிக்க வரும்படி என்னை அழைத்தான். நான் மிகவும் ஆர்வத்தோடு சென்றேன். அவன் என்னிடம் ஒரு பிளாஸ்டிக் வாளியைக் கொடுத்தான். “மூடியில்லையா?" எனக் கேட்டேன்.
“அதற்குத் தேவையில்லை" என்றான். மீன் தூண்டில்களையும், ஒரு சிறிய பையில் தூண்டில் கொக்கியில் வைக்கத் தேவையான கோழி இறைச்சித்துண்டுகளையும் எடுத்துக் கொண்டோம்.
பின்னர், நான் அந்த சிறிய மீனினங்களைக் கவனித்த போது, அவை ஒன்றன் மீது ஒன்று மோதி ஏறி தப்பிக்க நிறைவேறாத முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அந்த வாளியில் நிரம்ப இருந்தும் அவைகளால் வெளியேற முடியவில்லை. அப்பொழுதுதான் ஏன் அதற்கு மூடி தேவையில்லையென்பதைப் புரிந்து கொண்டேன். எப்பொழுது ஒரு கிராடட் விளிம்பை எட்டுகிறதோ, உடனே மற்றவை அதனைக் கீழே இழுத்துவிடுகின்றன.
இந்த கிராடட்டின் அவலநிலை, என்னை சிந்திக்க வைத்தது. நம்முடைய சொந்த லாபத்தை மட்டும் நோக்கிக் கொண்டு, நம்முடைய சமுதாயத்தின் நலனை கருதவில்லையெனின் அது எத்தனை அழிவுக்குள்ளானது என யோசித்தேன். தெசலோனிக்கேயர் சபை விசுவாசிகளுக்குப் பவுல் எழுதும் போது, ஒருவரையொருவர் தூக்கிவிடுவதன் தேவையையும், ஒருவரையொருவர் சார்ந்து வாழுவதின் அவசியத்தையும் புரிந்து கொள்ளும்படிச் செய்கின்றார். “ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்தி சொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்" எனப் போதிக்கிறார் (1 தெச. 5:14).
ஒருவர் மீது மற்றவர் அக்கறையோடிருக்கும், அவர்களுடைய நற்குணத்தைப் பாராட்டி (வச. 11), அவர்கள் இன்னும் அதிக அன்புடனும், சமாதான உறவிலும் வாழும்படி ஊக்குவிக்கின்றார் (வச. 13-15). அவர்களுக்குள் மன்னிப்பு, நீடிய சாந்தம், இரக்கம் போன்ற பண்புகளை உருவாக்கும்படியும், தேவனுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவிலும் பலப்படும்படியும் முயற்சிக்கின்றார் (வச. 18,23).
இத்தகைய அன்பின் ஒருமைப்பாடு இருக்கும்போது தான், சபை வளர்ச்சியடையும், கிறிஸ்துவுக்கு சாட்சிகளாயிருக்கவும் முடியும். விசுவாசிகள் தேவனை கனப்படுத்தி, பிறரைத் தூக்கிவிடும்படி தம்மை அர்ப்பணித்து, அவர்களைச் சோர்வடையச் செய்யும் வார்த்தைகளையும், செயலையும் தவிர்த்தோமாயின் நாமும் நம்முடைய சமுதாயமும் வளர்ச்சியடைய முடியும்.
இயேசு உன் பின்னாலேயே இருக்கிறார்
என்னுடைய மகள் வழக்கத்தைவிட சற்றுமுன்னதாகவே பள்ளிக்குச் செல்ல தயாராகிவிட்டாள். எனவே அவள், “நாம் போகிற வழியிலுள்ள காப்பி கடையில் நிற்கலாமா?" எனக் கேட்டாள். நான் சம்மதித்தேன். நாங்கள் வாகனம் செல்லக் கூடிய அந்த குறுக்குத் தெருவையடைந்த போது, “இன்று காலை ஏதோ ஒரு மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் போலுள்ளதா?" எனக் கேட்டேன். “ஆம், உறுதியாக" என்றாள்.
நாங்கள் எங்களுடைய தேவையைத் தெரிவித்த பின்னர் ஒரு ஜன்னல் அருகில் சென்று அமர்ந்தோம். அங்கு வந்த பணியாளர் நாங்கள் கொடுக்க வேண்டியத் தொகையைத் தெரிவித்தார்". நான், “எங்களுக்குப் பின்புறம் அமர்ந்திருக்கும் அந்த இளம் பெண்ணின் தொகையும் சேர்த்து கொடுக்;க விரும்புகிறேன்” என்றேன். என்னுடைய மகளின் முகத்தில் ஒரு பெரிய புன்னகை தெரிந்தது.
நம்முடைய அநேக சிறப்பான பொருட்களுக்கிடையே ஒரு கோப்பை காப்பி ஒரு பெரிய விஷயமல்ல. இல்லையா? இயேசு நம்மிடம் இருக்க விரும்புகின்றபடி, “மிகவும் சிறியவர்களாகிய இவர்களில்..." (மத். 25:40). எனக் குறிப்பிடுவதை செயல்படுத்த இதுவும் ஒரு வழியாக இருக்க முடியமா என நான் வியந்தேன். இங்கு ஒரு யோசனை: நாம் ஒரு வரிசையில் நிற்கும் போது நமக்கு அடுத்ததாகவோ அல்லது பின்னாகவோ நிற்கும் ஒருவரைத் தகுதியுடையவராக நாம் கருதலாமே? எனவே “எதை வேண்டுமானாலும்" செய்யலாம். அது ஒரு கோப்பை காப்பியாகவும் இருக்கலாம். அதையும்விட மேலாகவும் இருக்கலாம். அதையும்விட குறைவாகவும் இருக்கலாம். இயேசு குறிப்பிட்டுள்ளபடி, “எதைச் செய்தீர்களோ?" (வச. 40) என்பது பிறருக்கு நாம் பணி செய்வதன் மூலம் இயேசுவுக்கு நாம் பணி செய்ய பெற்றுள்ள மிகப் பெரிய சுதந்தரத்தைப் பெற்றுள்ளோம்.
நாங்கள் வெளியேறியபோது, எங்களுக்குப் பின்புறமிருந்த அந்த இளம் பெண்ணின் முகத்தையும், அந்தப் பணியாளரின் முகத்தையும், அவர் காப்பியைக் கொடுத்தபோது கவனித்தோம். அவர்கள் காதோடு காதாக, சிரித்துக் கொண்டனர்.
முடிவில்லா பரிமாணங்கள்
நான் அந்த வினைல் பொதிந்த விரிப்பில் அசையாமல் படுத்துக்கொண்டு, என் மூச்சை அடக்கி கொண்டேன். அந்த இயந்திரம் சுழன்று முடித்து 'கிளிக்" என்ற ஒலியுடன் நின்றது. எம்.ஆர்.ஐ எடுத்துக் கொண்ட அநேகரை எனக்குத் தெரியும். தனியறையில் அடைக்கப்படும் போது, என்னைப் போன்று பயப்படுபவர்களுக்கு, நம்மை விடப் பெரிய ஒரு பொருளின் மீது அல்லது ஒரு நபரின் மீது தனிக்கவனம் செலுத்த அனுபவம் தேவை.
அப்பொழுது வேதாகமத்திலுள்ள ஒரு வாசகம் என் மனதில் வந்தது. “கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து..." (எபே. 3:18) என்ற வார்த்தைகளை எண்ணியவாறே அந்த இயந்திரம் எழுப்பியதாளத்தோடு அசைந்தேன். எபேசு சபையினருக்காக பவுல் ஜெபிக்கும் போது, தேவனுடைய அன்பினையும், பிரசன்னத்தையும் விளக்க நான்கு பரிமாணங்களைப் பயன்படுத்துகின்றார். தேவனுடைய அன்பின் முடிவில்லாத அளவுகளை வலியுறுத்தும்படி அவ்வாறு விளக்குகின்றார்.
நான் அந்த எம்.ஆர்.ஐக்காக படுத்திருந்த போது என்னுடைய நிலை எனக்கு ஒரு புதிய புரிந்து கொள்ளலைத் தந்தது. அகலம்: அந்தக் குழாயினுள்ளே உடலோடு இறுக பிணைக்கப்பட்ட புயங்களிலிருந்து ஒவ்வொரு புறமும் ஆறு அங்குலம்; நீளம்: அந்த உருளையின் இரு திறப்புகளுக்கிடையேயுள்ள தொலைவு - என் தலையிலிருந்து பாதங்கள் வரை, உயரம்: என் மூக்கிலிருந்து அந்தக் குழாயின் உட்புறம் வரை 6 அங்குலம், ஆழம்: தரையிலிருந்து அந்தக் குழாயின் தாங்கிகளின் உயரம் - எனக்குக் கீழே என்னைத் தாங்கியுள்ளது வரை. தேவனுடைய பிரசன்னம் நான்கு பரிமாணங்களிலும் என்னைச் சூழ்ந்திருந்து அந்த எம்.ஆர்.ஐ குழாயினுள் என்னைத் தாங்கிக் கொண்டது. அத்தோடு மட்டுமல்ல, என் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் என்னைத் தாங்கிவருகிறது.
தேவனுடைய அன்பு எல்லாவிடமும் நம்மைச் சூழ்ந்துள்ளது. அகலம்: அவர்தம் புயங்களை விரித்து எவ்விடத்திலுமுள்ள அனைவரையும் அணைத்துக் கொள்கின்றார். நீளம்: அவருடைய அன்பிற்கு முடிவேயில்லை. உயரம்: அவர் நம்மை உயர்த்துகின்றார். ஆழம்: அவர் நம்மைத் தம் கரங்களில் தாங்கியவாரே எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை மூழ்கச் செய்கின்றார். அவரிடமிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது (ரோம. 8:38-39).
நம்மை வரவேற்கும் தேவன்
எங்களுடைய சபை, அருகிலுள்ள ஒரு பழைய மாணவியரை ஒருங்கிணைத்து கல்வி கற்பிக்க வேண்டும் என்று 1958 ஆம் அண்டு வெளியிடப்பட்ட அமெரிக்க நிதிமன்ற ஆணைக்கு கீழ்ப்படிவதைக் காட்டிலும், பள்ளியை மூடிவிடலாம் என்று தீர்மானித்து அந்த ஆண்டு மூடப்பட்ட பள்ளி அது. முன்பு வெள்ளையர் மட்டுமே இப்பள்ளியில் பயின்று வந்தனர். வெள்ளையர் உலகில் திணிக்கப்பட்ட கருப்பர்களில் எல்வா என்ற மாணவியும் உண்டு. அடுத்த ஆண்டு இப்பள்ளியைத் திறந்த போது எல்வா இப்பள்ளியில் சேர்ந்தாள். எல்வா தற்சமயம் எங்கள் சபையின் அங்கத்தினராக இருக்கின்றார். “நான் எனது பாதுகாப்பான சமுதாயத்தையும், எங்கள் வாழ்க்கையோடு இணைந்த ஆசிரியர்களையும் விட்டு விட்டு, பயப்படக் கூடிய ஒரு சூழலிலுள்ள ஒரு வகுப்பறையில் கருப்பின மாணவியாக நான் ஒருத்தி மட்டுமே சேர்ந்தேன்." என எல்வா நினைவுகூர்ந்தாள். எல்வா மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு காணப்பட்டதால் அதிக துயரங்களை அனுபவித்தாள். ஆனால், அவள் தைரியமும், விசுவாசமும், மன்னிக்கும் சிந்தையுமுள்ள ஒரு பெண்மணியாக உருவானாள்.
ஒவ்வொரு மனிதனும் அவனுடைய பாரம்பரியம், இனம் ஆகியவற்றைக் கடந்து தேவனால் நேசிக்கப்படுகிறான் என்ற உண்மையை மறுத்த அந்தச் சமுதாய நபர்கள் சிலரால் ஏற்பட்ட அநேகக் கொடுமைகளை எல்வா சகித்தாள். எனவே அவளுடைய சாட்சி மிகவும் ஆழமானதாயிருந்தது. ஆரம்பக் கால சபையின் அங்கத்தினர் சிலரும் இந்த உண்மையோடே போராடினர். தேவன் சிலரை அவர்கள் பிறப்பிலிருந்தே நேசிக்கிறார் எனவும், மற்றும் சிலரை தேவன் தள்ளிவிடுகிறார் எனவும் அவர்கள் நம்பினர். ஓர் உன்னத தரிசனத்தைப் பெற்ற பின்னர், பேதுரு கொடுத்த மிகவும் ஆச்சரியமான வெளிப்பாட்டைக் கேட்ட யாவரையும் அவர் அதிர்ச்சியடையச் செய்தார். “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்" (அப். 10:34-35) என பேதுரு கூறுகின்றார்.
தேவன் தம் கரங்களை விரித்து அனைவருக்கும் தமது அன்பைக் கொடுக்கின்றார். அவருடைய வல்லமையாலே நாமும் அப்படிச் செய்வோம்.