எங்களுடைய சபை, அருகிலுள்ள ஒரு பழைய மாணவியரை ஒருங்கிணைத்து கல்வி கற்பிக்க வேண்டும் என்று 1958 ஆம் அண்டு வெளியிடப்பட்ட அமெரிக்க நிதிமன்ற ஆணைக்கு கீழ்ப்படிவதைக் காட்டிலும், பள்ளியை மூடிவிடலாம் என்று தீர்மானித்து அந்த ஆண்டு மூடப்பட்ட பள்ளி அது. முன்பு வெள்ளையர் மட்டுமே இப்பள்ளியில் பயின்று வந்தனர். வெள்ளையர் உலகில் திணிக்கப்பட்ட கருப்பர்களில் எல்வா என்ற மாணவியும் உண்டு. அடுத்த ஆண்டு இப்பள்ளியைத் திறந்த போது எல்வா இப்பள்ளியில் சேர்ந்தாள். எல்வா தற்சமயம் எங்கள் சபையின் அங்கத்தினராக இருக்கின்றார். “நான் எனது பாதுகாப்பான சமுதாயத்தையும், எங்கள் வாழ்க்கையோடு இணைந்த ஆசிரியர்களையும் விட்டு விட்டு, பயப்படக் கூடிய ஒரு சூழலிலுள்ள ஒரு வகுப்பறையில் கருப்பின மாணவியாக நான் ஒருத்தி மட்டுமே சேர்ந்தேன்.” என எல்வா நினைவுகூர்ந்தாள். எல்வா மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு காணப்பட்டதால் அதிக துயரங்களை அனுபவித்தாள். ஆனால், அவள் தைரியமும், விசுவாசமும், மன்னிக்கும் சிந்தையுமுள்ள ஒரு பெண்மணியாக உருவானாள்.

ஒவ்வொரு மனிதனும் அவனுடைய பாரம்பரியம், இனம் ஆகியவற்றைக் கடந்து தேவனால் நேசிக்கப்படுகிறான் என்ற உண்மையை மறுத்த அந்தச் சமுதாய நபர்கள் சிலரால் ஏற்பட்ட அநேகக் கொடுமைகளை எல்வா சகித்தாள். எனவே அவளுடைய சாட்சி மிகவும் ஆழமானதாயிருந்தது. ஆரம்பக் கால சபையின் அங்கத்தினர் சிலரும் இந்த உண்மையோடே போராடினர். தேவன் சிலரை அவர்கள் பிறப்பிலிருந்தே நேசிக்கிறார் எனவும், மற்றும் சிலரை தேவன் தள்ளிவிடுகிறார் எனவும் அவர்கள் நம்பினர். ஓர் உன்னத தரிசனத்தைப் பெற்ற பின்னர், பேதுரு கொடுத்த மிகவும் ஆச்சரியமான வெளிப்பாட்டைக் கேட்ட யாவரையும் அவர் அதிர்ச்சியடையச் செய்தார். “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்” (அப். 10:34-35) என பேதுரு கூறுகின்றார்.

தேவன் தம் கரங்களை விரித்து அனைவருக்கும் தமது அன்பைக் கொடுக்கின்றார். அவருடைய வல்லமையாலே நாமும் அப்படிச் செய்வோம்.