என்னுடைய மகள் வழக்கத்தைவிட சற்றுமுன்னதாகவே பள்ளிக்குச் செல்ல தயாராகிவிட்டாள். எனவே அவள், “நாம் போகிற வழியிலுள்ள காப்பி கடையில் நிற்கலாமா?” எனக் கேட்டாள். நான் சம்மதித்தேன். நாங்கள் வாகனம் செல்லக் கூடிய அந்த குறுக்குத் தெருவையடைந்த போது, “இன்று காலை ஏதோ ஒரு மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் போலுள்ளதா?” எனக் கேட்டேன். “ஆம், உறுதியாக” என்றாள்.

நாங்கள் எங்களுடைய தேவையைத் தெரிவித்த பின்னர் ஒரு ஜன்னல் அருகில் சென்று அமர்ந்தோம். அங்கு வந்த பணியாளர் நாங்கள் கொடுக்க வேண்டியத் தொகையைத் தெரிவித்தார்”. நான், “எங்களுக்குப் பின்புறம் அமர்ந்திருக்கும் அந்த இளம் பெண்ணின் தொகையும் சேர்த்து கொடுக்;க விரும்புகிறேன்” என்றேன். என்னுடைய மகளின் முகத்தில் ஒரு பெரிய புன்னகை தெரிந்தது.

நம்முடைய அநேக சிறப்பான பொருட்களுக்கிடையே ஒரு கோப்பை காப்பி ஒரு பெரிய விஷயமல்ல. இல்லையா? இயேசு நம்மிடம் இருக்க விரும்புகின்றபடி, “மிகவும் சிறியவர்களாகிய இவர்களில்…” (மத். 25:40). எனக் குறிப்பிடுவதை செயல்படுத்த இதுவும் ஒரு வழியாக இருக்க முடியமா என நான் வியந்தேன். இங்கு ஒரு யோசனை: நாம் ஒரு வரிசையில் நிற்கும் போது நமக்கு அடுத்ததாகவோ அல்லது பின்னாகவோ நிற்கும் ஒருவரைத் தகுதியுடையவராக நாம் கருதலாமே? எனவே “எதை வேண்டுமானாலும்” செய்யலாம். அது ஒரு கோப்பை காப்பியாகவும் இருக்கலாம். அதையும்விட மேலாகவும் இருக்கலாம். அதையும்விட குறைவாகவும் இருக்கலாம். இயேசு குறிப்பிட்டுள்ளபடி, “எதைச் செய்தீர்களோ?” (வச. 40) என்பது பிறருக்கு நாம் பணி செய்வதன் மூலம் இயேசுவுக்கு நாம் பணி செய்ய பெற்றுள்ள மிகப் பெரிய சுதந்தரத்தைப் பெற்றுள்ளோம்.

நாங்கள் வெளியேறியபோது, எங்களுக்குப் பின்புறமிருந்த அந்த இளம் பெண்ணின் முகத்தையும், அந்தப் பணியாளரின் முகத்தையும், அவர் காப்பியைக் கொடுத்தபோது கவனித்தோம். அவர்கள் காதோடு காதாக, சிரித்துக் கொண்டனர்.