என்னுடைய உறவினன் என்னை கிராடட் என்றழைக்கப்படும் கிரே மீன்களைப் ஒருவகை தண்ணீர் லாப்ஸ்டர்) பிடிக்க வரும்படி என்னை அழைத்தான். நான் மிகவும் ஆர்வத்தோடு சென்றேன். அவன் என்னிடம் ஒரு பிளாஸ்டிக் வாளியைக் கொடுத்தான். “மூடியில்லையா?” எனக் கேட்டேன்.

“அதற்குத் தேவையில்லை” என்றான். மீன் தூண்டில்களையும், ஒரு சிறிய பையில் தூண்டில் கொக்கியில் வைக்கத் தேவையான கோழி இறைச்சித்துண்டுகளையும் எடுத்துக் கொண்டோம்.

பின்னர், நான் அந்த சிறிய மீனினங்களைக் கவனித்த போது, அவை ஒன்றன் மீது ஒன்று மோதி ஏறி தப்பிக்க நிறைவேறாத முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அந்த வாளியில் நிரம்ப இருந்தும் அவைகளால் வெளியேற முடியவில்லை. அப்பொழுதுதான் ஏன் அதற்கு மூடி தேவையில்லையென்பதைப் புரிந்து கொண்டேன். எப்பொழுது ஒரு கிராடட் விளிம்பை எட்டுகிறதோ, உடனே மற்றவை அதனைக் கீழே இழுத்துவிடுகின்றன.

இந்த கிராடட்டின் அவலநிலை, என்னை சிந்திக்க வைத்தது. நம்முடைய சொந்த லாபத்தை மட்டும் நோக்கிக் கொண்டு, நம்முடைய சமுதாயத்தின் நலனை கருதவில்லையெனின் அது எத்தனை அழிவுக்குள்ளானது என யோசித்தேன். தெசலோனிக்கேயர் சபை விசுவாசிகளுக்குப் பவுல் எழுதும் போது, ஒருவரையொருவர் தூக்கிவிடுவதன் தேவையையும், ஒருவரையொருவர் சார்ந்து வாழுவதின் அவசியத்தையும் புரிந்து கொள்ளும்படிச் செய்கின்றார். “ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்தி சொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்” எனப் போதிக்கிறார் (1 தெச. 5:14).

ஒருவர் மீது மற்றவர் அக்கறையோடிருக்கும், அவர்களுடைய நற்குணத்தைப் பாராட்டி (வச. 11), அவர்கள் இன்னும் அதிக அன்புடனும், சமாதான உறவிலும் வாழும்படி ஊக்குவிக்கின்றார் (வச. 13-15). அவர்களுக்குள் மன்னிப்பு, நீடிய சாந்தம், இரக்கம் போன்ற பண்புகளை உருவாக்கும்படியும், தேவனுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவிலும் பலப்படும்படியும் முயற்சிக்கின்றார் (வச. 18,23).

இத்தகைய அன்பின் ஒருமைப்பாடு இருக்கும்போது தான், சபை வளர்ச்சியடையும், கிறிஸ்துவுக்கு சாட்சிகளாயிருக்கவும் முடியும். விசுவாசிகள் தேவனை கனப்படுத்தி, பிறரைத் தூக்கிவிடும்படி தம்மை அர்ப்பணித்து, அவர்களைச் சோர்வடையச் செய்யும் வார்த்தைகளையும், செயலையும் தவிர்த்தோமாயின் நாமும் நம்முடைய சமுதாயமும் வளர்ச்சியடைய முடியும்.