மருத்துவர் ரிஷி மான்சன்டா தன்னிடம் வரும் நோயாளிகளிடம் நீ எங்கே வசிக்கிறாய்? என்று கேட்கும் போது அவர் அவர்களுடைய விலாசத்தையும் விட அதிகமான ஒன்றை எதிர்பார்க்கின்றார். ஒரு திட்டத்தை அவர் காண்கின்றார். அவரிடம் உதவிக்காக வரும் நோயாளிகளில் பெரும்பாலானோர் சுற்றுப்புற அழுத்தத்தில் வாழ்வதாகக் கண்டுபிடிக்கின்றார். இளக்கமான மணல் வகை, பூச்சிகள், மற்றும் பாக்டீரியாக்களால் உருவாகும் நச்சு ஆகியவை அவர்களை நோயாளிகளாக்குகிறது. எனவே இந்த மருத்துவர் ஒரு வழக்கறிஞராகவும் செயல்படுகின்றார். அவர் தன்னை எதிர் நீச்சல் போடும் மருத்துவர் என அழைக்கின்றார். இவ்வகை மருத்துவர்கள் சுகாதாரத்தைப் பேணும் பணியாளர்களாகவும் தேவைப்படும்போது மருத்துவ உதவியும் செய்பவர்களாகவும், செய்பவராகவும், நோயாளிகளோடும் அவர்கள் வாழும் சமுதாயத்தோடும் இணைந்து வேலை செய்து அதனை நல்ல சுகாதாரமான இடமாக மாற்ற முயற்சிக்கின்றனர்.

இயேசுவும் தன்னிடம் வந்தவர்களைச் சுகமாக்கினார் (மத். 4:23-24). இயேசு அவர்களின் சரீர சுகத்தையும் உலகத் தேவையையும் தாண்டி அவர்கள் கண்கள் மேலான ஒன்றை நோக்கச் செய்தார். அவருடைய மலைப் பிரசங்கத்தில் ஒரு மருத்துவ அற்புதத்தையும் விட மேலானவற்றைக் கொடுத்தார் (5:1-12). இயேசு ஏழு முறை, மனதும் இருதயமும் எப்படியிருந்தால் ஒரு புதிய கண்ணோட்டத்தோடும் ஆன்ம நலத்துடனும் கூடிய ஒரு நல்வாழ்வு அமையும் எனவும் (வச. 3-9) இரண்டு முறை கொடூரமான துன்பங்களை அனுபவிப்பவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் இயேசுவின் மேல் நம்பிக்கையையும் அவருடைய வீட்டையும் அடைவர் எனவும் கூறுகின்றார் (வச. 10-12).

இயேசுவின் வார்த்தைகள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. நான் எங்கே வாழ்கின்றேன்? என்னுடைய சுகவாழ்வு, உலகத் தேவைகளையும் விட மேலானது ஒன்றுள்ளது என்பதை எவ்வளவு தெரிந்து வைத்துள்ளேன்? நான் ஓர் அற்புதத்தைப் பெற ஏங்கிக் கொண்டிருக்கையில், ஓர் எளிமையான, உடைக்கப்பட்ட, பசியுள்ள, இரக்கமுள்ள, சமாதானம் பண்ணுகின்ற, இயேசு பாக்கியவான் என அழைக்கும் ஓர் இருதயத்தைத் தழுவிக் கொள்கிறேனா?