மேரிலின் பல வாரங்களாக சுகவீனமாயிருந்தாள். இந்தக்கடினமான நேரத்தில் அநேகர் அவளை உற்சாகப்படுத்தினர். இவர்களுடைய அன்பிற்கு தான் எப்படி பிரதிபலன் செய்யப்போகிறேனோ என்று கவலைப்பட்டாள். ஒருநாள் எழுதப்பட்ட ஜெபம் ஒன்றை அவள் வாசிக்க நேர்ந்தது. அந்த ஜெபத்தின் வார்த்தைகள், “பிறர் தாழ்மையைத் தரித்துக்கொண்டு ஊழியம் செய்ய மட்டுமல்லாது, ஊதியம் கொள்ளவும் ஜெபி” என்றிருந்தது. உடனே மேரி பணி செய்வதையும் கொள்வதையும் சமப்படுத்த அவசியமில்லை என்பதை உணர்ந்தாள். மற்றவர்களுக்கு ஊழியம் செய்யும் பொழுதுள்ள சந்தோஷத்தை அவர்கள் அனுபவிக்கட்டும் என்றும் தான் நன்றியோடிருப்பதே போதும் என்றறிந்து கொண்டாள்.

தன் கஷ்டத்தில் உதவியவர்களுக்குப் பவுல் நன்றி சொல்வதை பிலிப்பியர் 4ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம் (வச. 14). அவன் சுவிசேஷத்தைப் போதிக்கும்பொழுதும், பிரசிங்கிக்கும் பொழுதும் பிறருடைய ஆதரவை சார்ந்திருந்தான். அவனுடைய தேவைகளை சந்திப்பதற்கு ஏற்ற ஆதரவை அவன் பெற்றுள்ளது அவர்கள் தேவன் மீது கொண்டுள்ள அன்பினால்தான் என்றறிந்துகொண்டான். “உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்தவாசனையும் தேவனுக்குப் பிரியமான சுகந்த பலியுமாக… வரப்பற்றிக்கொண்டபடியால்” (வச. 18) என்று எழுதியிருக்கிறார்.

எப்பொழுதும் பிறருக்கு உதவுவதில் முன்நிற்பவர்களுக்கு பிறரிடம் உதவி பெறுவது கடினம்தான். ஆனால், தேவையில் இருக்கும்பொழுது, பிறர் மூலம் பலவிதங்களில் தேவன் அனுப்பும் உதவிகளைத் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வதே சிறந்தது.

“என் தேவன் உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். (வச. 19) என்று பவுல் எழுதினான். இது பவுல் தன் கஷ்டங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடம். தேவன் உண்மையுள்ளவர். அவருடைய ஐஸ்வரியம் எல்லையற்றது. அது நம் தேவைக்கும் போதுமானது.