அக்டோபர் 1915ல் எகிப்திலுள்ள கெய்ரோ நகரின் அருகாமைலிருந்த பயிற்சி முகாமிற்கு ஆஸ்வால்ட் சேம்பர்ஸ், பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு YMCA போதகராகப் பணிபுரிய வந்து சேர்ந்தார். அவர் YMCA குடிசையில் ஒரு இரவு நேர ஆராதனை நடக்குமென்றும், தாம் அதில் “ஜெபத்தினால் எற்படும் நன்மைகள் என்ன?” என்ற  பொருளில் செய்தி அளிக்கப் போவதாகவும் அறிவித்தார். 400 வீரர்கள் அந்தப் பெரிய இடத்தில் கூடினார்கள். பின்பு உலகப்போரின் நடுவிலும், தேவனை அறிய விரும்பியவர்களோடு தனித்தனியாகப் பேசினார். ஆஸ்வால்ட் அடிக்கடி “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக்கொடுக்க அறிந்திருக்கும் போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நித்தயமல்லவா” என்ற வசனத்தைப் போதித்தார்.

தமது குமாரனாகிய இயேசு மூலமாய் பிதாவானவர் நமக்கு இலவசமாய்த் தந்தருளின ஈவுகள் – மன்னிப்பு, நம்பிக்கை,  பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம் பண்ணுவதால் கிடைக்கும் தேவ பிரசன்னம் ஆகியவை. “ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்” லூக். 11:10

நவம்பர் 15, 1917ல் குடல் வால் பிரச்சனையால் (அப்பென்ட்டிக்ஸ்) திடீரென ஆஸ்வால்ட் மரித்துப்போனார். அவரால் விசுவாசத்திற்குள் நடத்தப்பட்ட ஒரு போர்வீரன், அவரைக் கனம்பண்ணும்படி ஒரு நினைவுச் சின்னத்தை அவர் கல்லறையினருகில் வைத்தான். அது ஒரு பளிங்குகல்லால் செதுக்கப்பட்ட திறந்த வேதாகமம். அதன் திறந்த பக்கத்தில் லூக்க 11:13ன் செய்தி “பரம பிதாவானவர் நம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயமல்லவா!” என்ற வசனம் பதிக்கப்பட்டிருந்தது..

இந்த ஆச்சரியமான பரிசு நம் ஒவ்வொருவருக்கும் இன்றே கிடைக்கும்