Archives: அக்டோபர் 2017

கண்களுக்கு புலப்படாத தாக்கம்

வாஷிங்டன் DCயில் உள்ள தேசீய கலைப் பொருட்களின் காட்சிக் கூடத்திற்கு நான் சென்றிருந்த பொழுது, “காற்று” என்ற தலைப்பின் கீழ் இருந்த உன்னதமான படைப்பு ஒன்றைப் பார்த்தேன். ஒரு காட்டுப் பகுதிக்குள் வீசும் புயலை அந்த ஒவியம் சித்தரித்தது. மெலிந்து வளர்ந்திருந்த மரங்கள் இடது பக்கமாக சாய்ந்திருந்தன. புதர்களும் அதே திசையில் மிக வேகமாக அசைந்திருப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தன.

அந்தப் புயலைவிட மிக வல்லமையுடன் பரிசுத்த ஆவியானவர், விசுவாசிகளை தேவனுடைய சத்தியத்திற்கும், அவருடைய உண்மைத் தன்மைக்கும் நேராக அசையச் செய்கிறார். ஆவியானவர் நடத்தும் வழியிலே நாம் சென்றால், நாம் தைரியமுள்ளவர்களாகவும், அன்புள்ளவர்களாகவும் மாறுவோம் என்று எதிர்பார்க்கலாம். நம்முடைய ஆசைகளைக் கட்டுப்படுத்துவதற்கான தெளிந்த புத்தியை நாம் பெற்றுக் கொள்ளுவோம் (2 தீமோ. 1:7).

சில சூழ்நிலைகளில் நமது ஆவிக்கேற்ற வளர்ச்சியடையவும் மாற்றமடையவும் ஆவியானவர் நம்மை நெருக்கி ஏவும் பொழுது, நாம் செயல்பட மறுத்து விடுகிறோம். தொடர்ந்து நமது மனதில் ஏற்படும் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காததை வேதாகமம் ஆவியை அவித்துப் போடல் (1தெச. 5:19) என்று கூறுகிறது. காலப்போக்கில் நாம், தவறு என்று எண்ணிய காரியங்கள், அவ்வளவு தவறாகத் தோண்றாது.

தேவனுக்கும் நமக்கும் இடையே உள்ள உறவு துண்டிக்கப்பட்டு, தூரமாகச் சென்று விடுவோம். ஆவியானவர் தொடர்ந்து, நம்மை நெருக்கி ஏவுகையில் அவருடைய செயலிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நாம் இருக்கும் பொழுது இந்த நிலை ஏற்படுகிறது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால், பிரச்சனைக்கான அடிப்படைக் காரணத்தை நம்மால் கண்டுகொள்ள இயலாது. நமது பாவத்தை நமக்குக் காண்பிக்கும்படி தேவனிடம் மன்றாடி ஜெபிக்கலாம். தேவன் நம்மை மன்னித்து, அவரது ஆவியின் வல்லமையையும், அவரது ஆவியினால் ஏற்படும் தாக்கத்தையும் நமக்குள்ளாக புதிப்பிப்பார்.

5020வது எண்ணுடைய அறை

ஜே பப்டன் மருத்துவமனையிலிருந்த அவனது அறையை ஒரு கலங்கரை விளக்காக மாற்றிவிட்டான்.

கணவனாக, தகப்பனாக, உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக, விளையாட்டு பயிற்சியாளராக இருந்த 52 வயதுடைய ஜே பப்டன் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருந்தான். ஆனால், 5020 என்ற எண்ணுடைய அவனது அறை, அவனது சினேகிதர்களுக்கு, குடும்ப அங்கத்தினர்களுக்கு, மருத்துவமனையில் பணி செய்பவர்களுக்கு வழிகாட்டும் ஒரு ஒளிவிளக்காக இருந்தது. ஜேவினுடைய ஆழமான விசுவாசம் அனைவரோடும் சந்தோஷமாக பழகும் தன்மை இவற்றினால் அவனது அறையில் பணிபுரிவதற்கு தாதிமார்கள் அதிகம் விரும்பினார்கள். சில தாதிமார் பணியிலில்லாத ஓய்வு நேரத்தில் கூட அவனைப் பார்க்க வந்தார்கள்.

ஒரு காலத்தில் விளையாட்டு வீரருக்கான அவனது திடகாத்திரமான உடல் வியாதியினால் மெலிந்து கொண்டிருந்த பொழுதும் அவனை பார்க்க வருபவர்கள் யாராக இருந்தாலும் ஊக்கத்தோடு கூடிய புன் சிரிப்போடு அவர்களை வாழ்த்துவான். “ஒவ்வொரு முறையும் நான் ஜேயை பார்க்கச் சென்ற பொழுது, அவன் மகிழ்ச்சியுடனும், நேர்மறை எண்ணங்களுடனும், நம்பிக்கையுடனும் இருந்தான். புற்று நோயால் ஏற்படுகிற மரணத்தை அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் அவன் விசுவாசத்துடன் வாழ்ந்து வந்தான்” என்று அவனுடைய சினேகிதர்களில் ஒருவன் கூறினான்.

ஜேயின் அடக்க ஆராதனையில் பேசிய ஒருவர், ஜே இருந்த அறை எண் 5020ற்கு ஒரு சிறப்பான அர்த்தம் உண்டு என்று குறிப்பிட்டார். அவர் பேசின பொழுது ஆதியாகமம் 50:20ல் யோசேப்பை அவனது சகோதரர்கள் அடிமையாக விற்ற பொழுது, தேவன் அதை மாற்றி அமைத்து “வெகு ஜனங்களை உயிரோடு காக்கும்படி” தீமையை நன்மையாக மாற்றிவிட்டார். ஜேவின் வாழ்க்கையில் புற்றுநோய் பாதித்தது ஆனால், தேவனுடைய கரம் அவனது வாழ்க்கையில் செயல்படுவதை உணர்ந்த ஜே தேவன் எல்லாவற்றையும் நன்மையாகவே நடத்துவார் என்று கூறுமளவிற்கு விசுவாச வாழ்க்கையை நடத்தினான். ஆதனால்தான் புற்று நோயினால் ஏற்பட்ட வியாதியின் கோரத்தை இயேசுவைப்பற்றி பிறருக்கு அறிவிக்கும் திறந்த வாசலாகமாற்றினான்.

மரணம் கதவைத் தட்டிக்கொண்டிருந்த பொழுதும் கூட நமது இரட்சகர் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவராக இருந்தான். நமது நம்பிக்கைக்கு பாத்திரமான தேவன் மீது அவன் கொண்டிருந்த நம்பிக்கை, அவன் விட்டுச் சென்ற நம்பிக்கைக்கு தலை சிறந்த உதாரணமாகும்.

சிருஷ்டிப்பில் கவனம்

ஓவிகி ஆற்றில் பெரிய பழுப்புநிற பெரிய ட்ரவுட் மீன்கள் முட்டைகளிடும் வழக்கத்தை செய்து கொண்டிருந்தன. வேறு சில ட்ரவுட் மீன்கள் கூடு கட்டும் செயலை செய்து கொண்டிருந்தன. அவைகள் கூழாங்கற்கள் நிறைந்த ஆழமற்ற பகுதிகளில் தோண்டி கூடுகளை அமைத்துக் கொண்டிந்தன.

மீன்களைப் பற்றி நன்கு அறிந்திருந்த மீனவர்கள், மீன்கள் முட்டை இட்டு குஞ்சி பொரிக்கும் சமயம் எது என்பதை நன்கு அறிந்திருந்ததினால், மீன்களை தொந்தரவு செய்யாமல் விட்டு விடுவார்கள். முட்டைகளை நசுக்கிவிடாமல் இருப்பதற்காக கற்களாலான திட்டுக்களில் நடப்பதையும், மீன்களின் கூடுகளை குப்பை கூளங்கள் மூடி விடாமல் இருப்பதற்காக கடல் நீரில் நடப்பதையும் தவிர்த்து விடுவார்கள். ட்ரவுட் மீன்கள் அவைகளின் கூடுகளின் அருகில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அவைகளைப் பிடிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தாலும் அவற்றைப் பிடிக்க மாட்டார்கள்.

இந்த முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் மீன் பிடித்தலுக்கான ஒழுக்க நெறிகளை கட்டுப்படுத்துகின்றன. ஆனால், இதைவிட ஆழமான மிகவும் அர்த்தமுள்ள ஒரு காரணம் உண்டு.

இந்த பூமியை ஆண்டுகொள்ளுமாறு மனிதனுக்கு தேவன் அதை அளித்துள்ளார் என்று வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது (ஆதி. 1:28-30). இந்தப் பூமியை பயன்படுத்த தேவன் இதை நமக்கு சொந்தமாக கொடுத்துள்ளார். ஆனால், நாம் அதை அதிகமாக நேசிப்பவர்களாக அதை பயன்படுத்த வேண்டும்.

தேவனுடைய கரத்தின் கிரியைகளைப் பற்றி என் மனதில் ஆழ்ந்து சிந்திக்கிறேன். பள்ளத்தாக்கின் மறுபக்கத்திலிருந்து ஒரு கவுதாரி கூப்பிடுகிறது. ஒரு ஆண் கலை மான் சண்டைக்கு ஆயத்தமாகி சத்தமிடுகிறது. தூரத்தில் ஒரு கூட்ட நிண்ட கால்களையுடைய மான்கள் காணப்படுகின்றன. நீரோடையில் பல நிற வண்ணப் புள்ளிகளுடைய ட்ரவுட் மீன்கள் நீந்திக் கொண்டிருக்கின்றன. ஒரு நீர் நாய் அதன் குட்டிகளோடு நிரோடையில் விளையாடிக் கொண்டிருக்கிறது இவை பரலோகப்பிதா தம்முடைய அளவற்ற அன்பினால் எனக்கு அளிக்கும் கொடைகளாகும். ஆகவே அவற்றை எல்லாம் நான் நேசிக்கிறேன்.

நான் எவற்றை நேசிக்கின்றேனோ அவற்றை பாதுகாக்கின்றேன்.

தேவனால் அரவணைக்கப்படல்

ஒரு நாள் மதியம் நான் என் சகோதரிவுடனும், அவளது குழந்தைகளுடனும் எனது மதிய உணவை உட்கொண்டு முடிக்கும் தருவாயில் என் சகோதரி அவளது மூன்று வயது மகள் அனிக்காவிடம், அவள் உறங்கி ஓய்வு எடுக்க நேரம் வந்துவிட்டது என்று கூறினாள். அனிக்காவின் முகம் பயத்தினால் நிறைந்தது. “மோனிகா அத்தை இன்னமும்; என்னை அணைக்கவில்லையே!” என்று கண்ணீர் மல்க கூறினாள், என்று சகோதரி சிரித்துக் கொண்டே “சரி, மோனிகா அத்தை உன்னை அரவணைப்பார்கள். எவ்வளவு நேரம் அரவனைக்க வேண்டும்?” என்று கேட்டாள். “ஐந்து நிமிடங்கள்” என்று அவள் பதிலளித்தாள்.

எனது சகோதரியின் மகளை நான் அணைத்துக் கொண்டிருந்த பொழுது, நேசிப்பதும், நேசிக்கப்படுவதும் எவ்வளவு சிறந்தது என்பதை அந்த குழந்தையின் செயல் எனக்கு தொடர்ந்து நினைவூட்டியது. நமது விசுவாசப் பயணத்தில் நாம் தேவனுடைய அன்பை நினைப்பதைவிட அதிகமாக உணர்ந்து கொள்ளுகிறோம் என்பதை நாம் நினைவு கூற மறந்துவிடுகிறோம் என்று எண்ணுகிறேன் (எபே. 3:18) நாம் அந்த நோக்கத்தை தவற விட்டுவிட்டால் இயேசு கூறிய கெட்டகுமாரன் உவமையில் வரும் மூத்த சகோதரனைப் போல தேவனால் நாம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக நாம் நமது சொந்த முயற்சிகளை எடுத்து தேவன் நமக்கு ஏற்கனவே அருளிய அனைத்து ஆசீர்வாதங்களையும் காணத் தவறிவிடுகிறோம் (லூக். 15:25-32).

வேதாகமத்தில் சங்கீதம் 131 “நம்மை சிறு பிள்ளைகளைப் போல மாற” (மாற். 18:3) உதவி செய்யும் ஒரு ஜெபமாக உள்ளது. அது நம்மால் புரிந்துகொள்ள இயலாத காரியங்களை புரிந்து கொள்ளும் மன போராட்டங்களிலிருந்து விடுபட உதவுகிறது. ஆதற்குப் பதிலாக தேவனோடு கூட சிறிது நேரம் செலவழிப்பதின் மூலம் அவருடைய அன்பில் நம்பிக்கையையும் சமாதானத்தையும் பெறலாம் (வச. 3). தனது தாயின் கைகளின் அரவணைப்பிலிருக்கும் குழந்தைகளைப் போல நாம் அமைதியுடன் அமர்ந்து காணப்படுவோம் (வச. 2)