மழலையர் பள்ளிக்கு சார்லெட் சென்ற முதல் நாளன்று, தன்னை ஒரு படமாக வரையும்படி கேட்டுக் கொள்ளப்பட்டாள். அவள் வரைந்த படத்தில் உடலுக்கு ஒரு வட்டம், தலைக்கும் ஒரு நீண்ட வட்டம், கண்களுக்கும் இரு சிறிய வட்டங்கள்தான் காணப்பட்டன. மழலையர் பள்ளி முடிந்த இறுதி நாளன்று மறுபடியும் தன்னை படமாக வரையும்படி கேட்டுக் கொள்ளப்பட்டாள். அப்படத்தில் மிக அழகிய உடை அணிந்த சுருள், சுருளான செந்நிற மயிர்க்கற்றைகளுடன் சிரித்த முகத்துடன் கூடிய ஓர் அழகிய சிறுபிள்ளை காணப்பட்டது. குழந்தைகளின் வளர்ச்சியில் காலம் ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தை மிக எளிய ஒரு செயல்பாட்டினால் அந்தப் பள்ளி விளக்கியுள்ளது.

குழந்தைகள் முதிர்ச்சியடைவதற்கு காலதாமதம் ஏற்படும் என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளுகிறோம். ஆனால், நம்முடைய வாழ்க்கையிலோ உடன் விசுவாசகளின் வாழ்க்கைகளிலோ மெதுவான ஆவிக்கேற்ற வளர்ச்சி ஏற்படும் பொழுது நாம் பொறுமையை இழந்து விடுகிறோம். கலாத்தியர் 5:22-23ல் கூறப்பட்டுள்ள ஆவியின் கனிகள் காணப்படும் பொழுது மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், பாவ காரியங்களை தேர்ந்தெடுக்கும்பொழுது ஏமாற்றமடைகிறோம். எபிரேய நிருபத்தை ஆக்கியோன், காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்க வேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களில் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்க வேண்டியதாயிருக்கிறது; எபிரெயர் 5:12 என்று சபைக்கு எழுதியிள்ளார்.

இயேசுகிறிஸ்துவோடு நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொள்ள தொடர் முயற்சி எடுக்கும் நாம் ஒருவரையொருவர் ஜெபத்தில் தாங்கிக் கொள்ள வேண்டும். மேலும் தேவனை நேசிக்கிறோம் என்று கூறுகிற சிலர் ஆவிக்கேற்ற வளர்ச்சியடைவதற்கு போராடி வரும் பொழுது பொறுமையுடன் அவர்களோடு இணைந்து நாம் செயல்படவேண்டும். அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். எபேசியர் 4:15 என்ற வசனத்தின்படி ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திக் கொண்டு ஆவிக்கேற்ற வாழ்க்கையில் இணைந்து வளருவோம்.