சில  ஆண்டுகளுக்குமுன் ஒரு புத்தக வெளியீட்டாளர் பெருந்தவறொன்றைச் செய்தார். சந்தையில் பல ஆண்டுகளாக விற்பனையாகிவந்த ஒரு புத்தகத்தை அதின் ஆசிரியர் புதுப்பித்து மறுபதிப்பு செய்ய விரும்பினார். அவர் அந்தப்புத்தகத்தை திருத்தியெழுதி வெளியிட்டாரிடம் கொடுத்தார். அவர் அழகான மேலுறையைத் தயரித்தார். மறுபதிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், ஒரு பெருந்தவறு நடந்துவிட்டது. புதிய உறைக்குள் பழைய புத்தகத்தையே வைத்துவிட்டார். வந்தது மறுபதிப்பல்ல.

புதிய வெளிப்புறம். ஆனால், பழைய உட்புறம் இந்த மறுபதிப்பு புதியதல்ல!

இதே மாதிரியான காரியம் சில மனிதர்களிடத்திலும் காணப்படுகிறது. வாழ்க்கையில் ஒரு மாற்றம் தேவை என்று நினைக்கிறார்கள். சில வெளிப்புற நடவடிக்கைகளில் மாற்றமுண்டு. ஆனால். இருதயத்தில் ஒரு மாற்றமுமில்லை. புதிய வெளிப்புறம், பழைய உட்புறம் தேவன் மட்டுமே உள்ளான மாற்றத்தைத்தர முடியுமென்பதை அவர்கள் அறியவில்லை.

இயேசு தேவனிடத்திலிருந்து வந்ததால்தான் (வச. 2) வித்தியாசமான போதனைகளைத் தருகிறார் என்பதை நிக்கொதேமு அறிந்துகொண்டதை, யோவான் 3ல் காண்கிறோம். இயேசு நிக்கொதேமுவிடம் சொன்னதிலிருந்து மறுபிறப்பையே கேட்கிறார் என்று அறிந்து கொண்டான் (வச. 4). புதிதாக வேண்டுமென்றால் அவன் (வச. 7) மறுபடியும் பிறந்தேயாக வேண்டும் என்றுணர்ந்தான்.

இந்த மாற்றம் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தினால் மட்டுமெ ஏற்படுகிறது. அப்பொழுதுதான் “ பழையவைகள் எல்லாம் ஒழிந்தன எல்லாம் புதிதாயின” (2 கொரி. 5:17) என்பது நடக்கும். உங்களுக்கு ஒரு மாற்றம் தேவையா? உங்கள் விசுவாசத்தை இயேசுவின்மேல் வையுங்கள். அவர்தான் உங்கள் இருதயத்தை மாற்றி எல்லாவற்றையும் புதிதாக்குகிறவர்.