Archives: செப்டம்பர் 2017

பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டோம்

எங்கள் கல்லூரி பத்திரிக்கைகள் சில தற்செயலாய் எனக்கு கிடைத்தது. அவற்றை மீண்டும் வாசிக்கும்படி உந்தப்பட்டேன், முழுவதையும் வாசித்து முடித்தபோது, நான், என்னைக் குறித்து அன்று நினைத்திருந்ததுப் போல நான் இன்று இல்லை என உணர்ந்தேன். என் தனிமையைக் குறித்த போராட்டங்கள், எனது நம்பிக்கையின்மை, யாவும் அப்பொழுது என்னை மேற்கொண்டிருந்தன. ஆனால், இன்று தேவன் என்னை ஒரு மேலான இடத்தில் நலமாகக் கொண்டு சேர்த்திருப்பதை உணர்ந்தேன். தேவன் என்னை சுகமாய் கொண்டு சேர்த்ததை நினைக்கும் போது, இன்றைய கஷ்டத்தின் பாதைகள், ஒரு நாள் அவருடைய சுகம் தரும் அன்பின் கதையின் ஒரு பகுதியாகும் என்பதை உணர்ந்தேன்.

சங்கீதம் 30, ஒரு ஆர்ப்பரிப்பின் சங்கீதம். நோயிலிருந்து சுகத்திற்கும், சாவின் எல்லையிலிருந்து ஜீவனுக்குள்ளும், அவருடைய நியாயத்தீர்ப்பிலிருந்து அவருடைய இரக்கத்திற்குள்ளும், கவலையிலிருந்து மகிழ்ச்சிக்குள்ளும் கொண்டு வந்ததையும், தேவனுடைய ஆச்சரியமான மீட்பினை நன்றியோடு நினைத்துப் பார்த்து பாடிய சங்கீதம் (வச. 3,11).

வேதத்திலுள்ள மிக துக்கம் நிறைந்த புலம்பல் தாவீதின் சங்கீதம். ஆனால், தாவீது நம்ப முடியாத மீட்பினை அனுபவித்தார். எனவே அவர் “சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும் (வச. 5) என வெளிப்படுத்துகிறார். தாவீது, தான் கடந்து வந்த வேதனைகளின் மத்தியில் அதனைவிட பெரிய தேவனுடைய வல்லமையான சுகம் தரும் கரத்தை கண்டு கொண்டார்

ஒருவேளை காயத்தோடு இருக்கிற உங்களுக்கு ஊக்கம் தேவையோ? உங்கள் கடந்த நாட்களில் தேவன் உங்களை நலமாய் சேர்த்த இடங்களை நினைத்துப் பாருங்கள். அவர் மீது நம்பிக்கையோடு ஜெபித்தால் அவர் மீண்டும் செயல்பட வல்லவராயிருக்கிறார்.

துக்கம் கொண்டாடும் ஊழியம்

2002 ஆம் ஆண்டு, என்னுடைய சகோதரி மார்த்தாவும் அவளுடைய கணவன் ஜிம்மும் ஒரு விபத்தில் மரித்து சில மாதங்கள் கடந்தபோது, எங்கள் ஆலயத்தில் நடைபெறும் ‘துக்கத்தின் வழியே வளருதல்’ என்ற கருத்துப் பட்டறைக்கு வருமாறு என்னை என் நண்பன் அழைத்தான். நான் தயக்கத்தோடு, தொடர்ந்து பங்கெடுக்க வேண்டும் என்ற எண்ணமற்றவனாய், ஒருமுறை மட்டும் கலந்து கொள்கிறேன் என்றேன். என்ன ஆச்சரியம் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட ஒரு பெரிய இழப்பை சமாளிக்க முயலும், தேவனுடைய உதவியையும் பிறரின் உதவியையும் தேடுகின்ற ஒரு கரிசனையுள்ள ஒரு மக்கள் குழுவை நான் அங்கு கண்டேன். என் துக்கங்களை பிறரோடு பகிர்ந்து கொள்ளல் மூலம் சமாதானத்தைப் பெற்றுக் கொண்டபோது, அது மீண்டும் வாரா வாரம் மனமுவந்து செல்ல என்னை இழுத்துக் கொண்டது.

நாம் மிகவும் நேசித்த நண்பரின் திடீர் இழப்பினைப் போல, இயேசுவுக்கு ஒரு தீவிரமான சாட்சியாகிய ஸ்தேவானுடைய மரணமும், ஒரு அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஆரம்ப சபையின் மக்களிடையே கொண்டு வந்தது (அப். 7:57-60). துன்புறுத்தலின் மத்தியிலும் “தேவ பக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம் பண்ண அவனுக்காக மிகவும் துக்கங் கொண்டாடினார்கள்” (8:2). இந்த உண்மையுள்ள மனிதர் இரு காரியங்களை இணைந்து செய்தனர். அவர்கள் ஸ்தேவானை அடக்கம் பண்ணினார்கள். அதாவது ஒரு இழப்பின் முடிவு காரியங்களைச் செய்தார்கள். மேலும் அவர்கள் அவனுக்காக துக்கம் கொண்டாடினார்கள். இது தங்கள் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு செயல்.

இயேசுவைப் பின் பற்றுகின்றவர்களாகிய நாம் நம் இழப்புகளைக் குறித்து தனியே துக்கிக்கத் தேவையில்லை. நம்மைக் காயப்படுத்தியவர்களையும் உண்மையோடும் அன்போடும் அணுக வேண்டும். நம் மீதுள்ள கரிசனையோடு நம்மோடு நிற்பவர்களையும் அவர்களது ஆறுதலையும் மனத்தாழ்மையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாம்  இணைந்து துக்கிக்கும் போது நம் உள்ளங்களின் ஆழத்திலுள்ள துயரங்களையும் தெரிந்து வைத்திருக்கிற இயேசு கிறிஸ்து தருகின்ற சமாதானத்தை நாம் பெற்றுக்கொள்வதோடு ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதலிலும் வளருவோம்.

தேவனிடம் கொடுத்துவிடு

ஒரு வாலிபனாக அநேக சவால்களைச் சந்திக்கும் போதும், விளைவு அல்லது உயர் விளைவு தீர்மானங்களை எடுக்கும் போதும், என் தாயார் எனக்குக் கற்றுக் கொடுத்த ஒரு நண்மையான காரியம் என்னவெனில், எல்லாவற்றையும் ஒரு தாளில் எழுதினால் சரியான கோணத்தில்  பிரச்சனையை பார்க்க முடியும் என்பதே. சரியான பாடங்களை தேர்ந்தெடுத்தலின் தெளிவற்ற நிலையோ அல்லது எந்த வேலையை தேர்ந்தெடுப்பதென்பதோ, வயது வந்தோரினை பயமுறுத்தும் சூழல்களை எவ்வாறு சமாளிப்பது போன்ற தெளிவற்ற நிலையின் போது, நான் என் தாயாரின் எழுதும் வழக்கத்தின்படி செய்வேன். அடிப்படை உண்மைகள், அதன் தீர்வுக்கான வழிமுறைகள் அதன் பின் விளைவுகள் என எழுத ஆரம்பித்தேன். என் இருதயத்தை அந்த பக்கங்களில் கொட்டியபின் பிரச்சனையிலிருந்து எளிதாக வெளிவரமுடிந்தது. என் உணர்வு சார்ந்த நோக்கங்களை விட அப்பிரச்சனைகளின்  நிலையைத் தெளிவாகக் காண முடிந்தது.

என் எண்ணங்களை ஒரு தாளிள் பதித்ததின் மூலம் புதிய கோணத்தில் அணுக முடிந்தது போல என் இருதயத்தை தேவனிடம் ஜெபத்தின் மூலம் ஊற்றும் போது அவருடைய கண்ணோட்டம், அவருடைய வல்லமையை நான் புரிந்து கொள்ள முடிந்தது. எசேக்கியா ராஜா தன்னை அச்சுறுத்தும் சத்துருவிடமிருந்து ஒரு வருத்தமான கடிதத்தைப் பெற்ற போது இதனையே செய்கிறான். ஆசீரியர் பல தேசங்களை அழித்தது போல எருசலேமையும் அழித்து விடுவோம் என பயமுறுத்தியபோது எசேக்கிய அக்கடிதத்தை தேவனுக்கு முன்பாக விரித்தான். விண்ணப்பத்தோடு அவரை நோக்கிக் கூப்பிட்டான். இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜயங்கள் எல்லாம் அறியும்படிக்கு எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம் பண்ணினான் (2 இரா. 19:19).

நாம் நம்மை பதட்டத்துக்குள்ளாக்கும் பயத்தைக் கொண்டுவரும். அதனால் நம்மீடத்திலுள்ளது போதாது என்ற விழிப்புணர்வு ஏற்படும்பொழுது, எசேக்கியாவின் அடிச் சுவடுகளைப் பின்பற்றி கர்த்தரை நோக்கி ஓடுவோம். நம் பிரச்சனைகளை அவருக்கு முன்பாக சமர்ப்பிப்போம். அவர் நம் நடைகளை நல் வழிப்படுத்துவார். அமைதியற்ற இருதயத்தை அமைதிப்படுத்துவார் என அவர் மீது நம்பிக்கை வைப்போம்.

பரலோகத்தின் ஒரு சிறிய அனுபவம்

நான்  எனது அறையின் திறந்த ஜன்னல் வழியாகப் பார்த்த போது, பறவைகள் கீச்சிடுவதைக் கேட்கவும், மெல்லிய தென்றல் மரங்களின் மீது வீசுவதைக் கேட்கவும், காணவும் முடிந்தது. என் அருகில் வசிப்பவர் புதியதாக உழுதிருந்த வயல்வெளியில், வைக்கோல் கட்டுகள், புள்ளிகளாகக் காட்சியளித்தன. மின்னும் நீல வானத்தில் பெரிய வெண்ணிற மேகக்கூட்டம் தனித்து நின்றது.

எங்களுடைய நிலங்களை வேகமாகக் கடந்து செல்கின்ற வாகனங்களின் தொடர் ஓசையையும் எனது முதுகு பகுதியில் ஏற்பட்ட சிறிய வலியையும் தவிர நான் கொஞ்சம் பரலோகத்தை அனுபவித்தேன். நாம் வாழும் இப்பூமி முன்னொரு காலத்தில் முற்றிலும் நலமானதாக இருந்தது. ஆனால், இப்பொழுது இல்லை. எனவே நான் பரலோகம் என்ற வார்த்தையை சிறிதளவே பயன்படுத்த முடிகிறது. மனித குலம் பாவத்திற்குள்ளான போது ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. பூமி சாபத்திற்குள்ளானது (ஆதி. 3). அதிலிருந்து பூமியும் அதிலுள்ளவைகளும் அழிவுக்குள்ளாக நிர்ணயிக்கப்பட்டன. வேதனைகள், நோய்கள், இறப்புக்கள் யாவும் பாவத்தில் வீழ்ந்ததின் விளைவுகளே (ரோம. 8:18-23).

ஆனாலும், தேவன் சகலத்தையும் புதிதாக்குகின்றார். ஒருநாள் அவர் வாழுமிடம் அவருடைய பிள்ளைகளோடும், புதிதாக்கப்பட்ட, மீட்டெடுக்கப்பட்ட படைப்புகளோடும், புதிய வானத்திலும் புதிய பூமியிலுமிருக்கும். அங்கே மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, ஏனெனில் முந்தினவைகள் ஒழிந்து போயின (வெளி. 21:1-4). அந்த நாள் வரும் வரை, நாம் பிரகாசமான ஒளியையோ, சில வேளைகளில் விரிந்து நம்மைக் கவரும் அழகினையோ இவ்வுலகில் நாம் காணும் போது, நாம் அனுபவிக்கப்போகின்ற பரலோகத்தின் ஒரு சிறிய முன் அனுபவமாகக் அதைக் கருதுவோம்.