எங்கள் கல்லூரி பத்திரிக்கைகள் சில தற்செயலாய் எனக்கு கிடைத்தது. அவற்றை மீண்டும் வாசிக்கும்படி உந்தப்பட்டேன், முழுவதையும் வாசித்து முடித்தபோது, நான், என்னைக் குறித்து அன்று நினைத்திருந்ததுப் போல நான் இன்று இல்லை என உணர்ந்தேன். என் தனிமையைக் குறித்த போராட்டங்கள், எனது நம்பிக்கையின்மை, யாவும் அப்பொழுது என்னை மேற்கொண்டிருந்தன. ஆனால், இன்று தேவன் என்னை ஒரு மேலான இடத்தில் நலமாகக் கொண்டு சேர்த்திருப்பதை உணர்ந்தேன். தேவன் என்னை சுகமாய் கொண்டு சேர்த்ததை நினைக்கும் போது, இன்றைய கஷ்டத்தின் பாதைகள், ஒரு நாள் அவருடைய சுகம் தரும் அன்பின் கதையின் ஒரு பகுதியாகும் என்பதை உணர்ந்தேன்.

சங்கீதம் 30, ஒரு ஆர்ப்பரிப்பின் சங்கீதம். நோயிலிருந்து சுகத்திற்கும், சாவின் எல்லையிலிருந்து ஜீவனுக்குள்ளும், அவருடைய நியாயத்தீர்ப்பிலிருந்து அவருடைய இரக்கத்திற்குள்ளும், கவலையிலிருந்து மகிழ்ச்சிக்குள்ளும் கொண்டு வந்ததையும், தேவனுடைய ஆச்சரியமான மீட்பினை நன்றியோடு நினைத்துப் பார்த்து பாடிய சங்கீதம் (வச. 3,11).

வேதத்திலுள்ள மிக துக்கம் நிறைந்த புலம்பல் தாவீதின் சங்கீதம். ஆனால், தாவீது நம்ப முடியாத மீட்பினை அனுபவித்தார். எனவே அவர் “சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும் (வச. 5) என வெளிப்படுத்துகிறார். தாவீது, தான் கடந்து வந்த வேதனைகளின் மத்தியில் அதனைவிட பெரிய தேவனுடைய வல்லமையான சுகம் தரும் கரத்தை கண்டு கொண்டார்

ஒருவேளை காயத்தோடு இருக்கிற உங்களுக்கு ஊக்கம் தேவையோ? உங்கள் கடந்த நாட்களில் தேவன் உங்களை நலமாய் சேர்த்த இடங்களை நினைத்துப் பாருங்கள். அவர் மீது நம்பிக்கையோடு ஜெபித்தால் அவர் மீண்டும் செயல்பட வல்லவராயிருக்கிறார்.