எழுத்தரும் போதகருமான எர்வின் வற்சர் ஒரு டெவிஷன் நிகழ்ச்சியின் தொகுப்பாளர். ஆர்ட் லிங்ஸ் லெட்டர் மற்றும் கடவுளின் படத்தை வரைய முன்வந்த ஒரு சிறுவனின் கதையை நினைவுபடுத்துகின்றார். வியப்புற்றவராய் லிங்ஸ்லெட்டர், “நீ இதனைச் செய்ய முடியாது ஏனெனில் தேவன் எவ்வாறிருப்பார் என்பதை ஒருவரும் அறியார்” எனக் கூறினார்.

“நான் இதனை முடிக்கும் போது அவர்கள் தெரிந்து கொள்வார்கள்” என அச்சிறுவன் பதிலளித்தான்.

நாமும் அதிசயிக்கலாம் தேவன் எவ்வாறிருப்பார்? அவர் நல்லவரா? அவர் இரக்கமுள்ளவரா? அவர் தம்மீது அக்கறையுள்ளவரா? இத்தனை கேள்விகளுக்கும்முள்ள ஒரே எளிய பதிலை இயேசு தருகிறார். பிலிப்பு இயேசுவிடம், “ஆண்டவரே பிதாவை எங்களுக்குக் காட்டும்” என்று கேட்டபோது, “என்னைத் தெரியாதா பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” (யோவா. 14:8-9) என்றார்.

நீயும் பிதாவைக் காணவேண்டும் என்ற ஆவலில் இருந்தால் இயேசுவை நோக்கிப் பார். “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமாய் இருக்கிறார்” என பவுல் (கொலோ. 1:15) கூறுகின்றார். பதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷங்கள் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியவற்றை வாசித்துப்பார். இயேசு என்னென்ன செய்தார், சொன்னார் என்பதை ஆழ்ந்து யோசித்துப் பார், வாசிக்கும் போது உன் மனதில் தோன்றிய பிதாவின் கற்பனை படத்தை வரை. உனக்கு அவர் எவ்வாறிருப்பார் என்பதனை இன்னும் அதிகமாக வெளிப்படுத்துவாய்.

என்னால் நம்ப முடிந்த ஒரே தெய்வத்தை நான் இயேசுவில் கண்டேன் என என் நண்பன் ஒருமுறை கூறினான். இதனை சற்று உற்று நோக்கும் போது இதனை நீயும் ஒத்துக் கொள்வாய். அவரைக் குறித்து வாசிக்கும் போதும உன் வாழ்நாளெல்லாம் நீ தேடிக் கொண்டிருந்திருக்கிறாய்.