என்னுடைய தாயாரும் அவருடைய சகோதரிகளும், இப்பொழுது அதிகமாக அழிந்து போன கலையாகிய கடிதம் எழுதுவதில் முனைந்திருந்தனர். இவர்களுடைய கடிதங்களைக் கொண்டு வரும் தபால்காரர் கொடுப்பதற்கு கடிதமில்லையெனில் வருத்தப்படக் கூடிய அளவிற்கு, ஒவ்வொரு வாரமும் தங்கள் சொந்த காரியங்களை எழுத்தின் மூலம் தெரிவிப்பதை தவறாமல் செய்து வந்தனர். இவர்களுடைய கடிதங்களில் வாழ்க்கையின் காரியங்கள், மகிழ்ச்சி, இருதய வேதனைகள், நண்பர்கள், உறவினரின் அன்றாட நிகழ்வுகளால் நிரம்பி வழியும்.

எங்கள் குடும்பத்திலுள்ள இந்தப் பெண்களின் வாரா, வார பயிற்சியினைக் குறித்து தியானிக்க விரும்புகிறேன். இயேசுவைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் “கிறிஸ்துவின் நிருபமாய் இருக்கிறீர்கள்” அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலே எழுதப்பட்டிருக்கிறது” (2 கொரி. 3:3) என்று பவுல் எழுதியுள்ளான். தவறான போதனைகளால் பவுலை இழிவுபடுத்த நினைப்பவர்களுக்கும் (2 கொரி. 11) கொரிந்து சபையினரை ஊக்குவிப்பதற்கும் நான் உங்களுக்கு முன்பு கற்றுக் கொடுத்தது போல, உண்மையும், உயிரோடு இருக்கிறவருமான இயேசு கிறிஸ்துவை பின் தொடருங்கள் என எழுதுகிறார். அப்படிக் செய்யும் போது அங்குள்ள விசுவாசிகளை அவர்களுடைய மாற்றப்பட்ட வாழ்வோடும் ஆவியானவருக்கு மிக வல்லமையான சாட்சிகளாகவும் பவுலின் ஊழியத்தினால் உண்டான கிறிஸ்துவின் நிரூபமுமாயிருக்கிறீர்கள் என்று பவுல் உற்சாகப்படுத்தினான்.

நமக்குள்ளேயிருக்கும் ஆவியானவர் அவருடைய கிருபை, மீட்பு பற்றிய ஒரு கதையை எழுதுகிறார். இது எத்தனை ஆச்சரியம். எழுதப்பட்ட வார்த்தைகள் எத்தனை அர்த்தமுள்ளவையோ அதைப் போன்று நம் வாழ்வும் சுவிசேஷத்தின் உண்மைக்கு ஒரு முக்கிய சாட்சியாகும். நம் இரக்கம், மனதுருக்கம் சேவை, நன்றியுணர்வு மகிழ்ச்சியின் மூலம் அவை பேசுகின்றன. நம்முடைய வார்த்தை, செயலினால் தேவன் அவருடைய வாழ்வையே தந்த அன்பினை பறைசாற்றுகின்றார். இன்று நீ என்ன செய்தியை அனுப்ப போகின்றாய்?