இனிப்பும், புளிப்பும்
என் சிறு குழந்தை முதலாவது ஒரு எலுமிச்சைப் பழத்தின் துண்டினை கடிக்கும் போது அவன் மூக்கைக் சுழித்துக் கொண்டு நாக்கை nவிளே தள்ளி, கண்களை இறுக மூடிக் கொண்டு புளிக்குது என்றான்.
நான் இந்த பழத்தின் துண்டினைப் மனதிற்குள் சிரித்துக் கொண்டே குப்பையில் எறிந்து விட எண்ணி அதை எடுக்கப் போனேன். “வேண்டாம்” என சேவியர் வேகமாக சமையலறையிலிருந்து என்னை விட்டுச் சென்று வேண்டும் என்று சொல்லி அந்த புளிக்கும் சுவைத்தான். புளிப்பு அவனுக்குப் பிடித்தது. கடைசியில் பழத்தின் தோல் என்னிடம் கொடுத்துவிட்டு வெளியே போனான். ஏன் வாழ்வின் இனிமையான நொடிகளில் என் சுவை நரம்புகள் பராபட்சத்துடன் செயல்படுகின்றன. என் வாழ்வில் சுவையற்ற நொடிகளை நான் தவிர்ப்பது, கசப்பான சோதனைகளில் வெறுப்பை பகிர்ந்து கொண்ட யோபுவின் மனைவியை நினைவுபடுத்துகிறது.
யோபு கடினமான சுழல்களிலும் கஷ்டங்களிலும் நிச்சயமாக மகிழ்ந்திருக்கவில்லை. ஆனாலும், இருதயத்தைப் பிழிகின்ற சூழல்களிலும் தேவனை மகிமைப்படுத்த முடிந்தது (யோபு 1:1-22). வேதனை மிகுந்த பருக்களால் வாதிக்கப்பட்டபோது, யோபு அந்த வேதனையைச் சகித்தான் (2:7-8) அவனுடைய மனைவி தேவனை விட்டு விடும்படி சொன்ன போதும் (வச. 9) யோவு துன்பங்களிலும், அவமானங்களிலும் தேவன் மீது நம்பிக்கையாயிருந்தான் (வச. 10).
வாழ்வில் புளிப்பான சந்தர்பங்களைத் தவிர்த்துவிட எண்ணுவது இயல்புதான். நாம் காயப்படும் போது தேவனைக் குற்றப்படுத்த தூண்டப்படுகிறோம். ஆனால், தேவன் நம் சோதனைகளில் மூலம் அவர் பேரில் நம்பிக்கையாயிருக்கவும் அவரைச் சார்ந்து வாழவும் அவரிடம் யாவற்றையும் அர்ப்பணிக்கவும், துன்பங்கள் வழியே பாதுகாக்க வல்லவராயிருக்கிறார் என்பதையும் நமக்குக் கற்றுக் தருகிறார். யோபுவைப் போன்று கசப்பான சோதனை வேலைகளை இனிமையான அனுபவமாக எடுத்துக் கொள்ள முடியாவிட்டாலும், தேவன் மீதுள்ள நம்பிக்கையை அவை உறுதிப்படுத்த உதவுகின்றன என எடுத்துக் கொள்வோம்.
அனுதின ஜெபம்
பாடகரும், பாடலாசிரியருமான ராபர்ட் ஹேம்லெற் “எனக்காக ஜெபிக்கும் பெண்மணி” என்ற பாடலை தன் தாயாருக்கு அஞ்சலியாக எழுதினார். அவருடைய தாயார் ஒவ்வொரு நாள் காலையும் தன் மகன்களுக்காக, அவர்கள் பேருந்து நிற்குமிடத்திற்கு செல்லுமுன் ஜெபிப்பது வழக்கம். ஹேம்லெற்றின் இப்பாடலை பாடக் கேட்டதிலிருந்து ஒரு இளம் தாயார் தன் சிறு மகனோடு ஜெபிக்க ஆரம்பித்தாள். அதன் பலன் இதயத்திற்கு இதமாக இருந்தது. ஒரு நாள், அவளுடைய மகன் வெளியே புறப்பட்டு போகுமுன் அவன் தாயார் அவனுக்காக ஜெபித்தார். 5 நிமிடம் கழித்து அவன் பேருந்து நிற்குமிடத்திலிருந்து மேலும் சில சிறுவர்களோடு திரும்பி வந்தான். “இவர்களுடைய தாய்மார் இவர்களோடு ஜெபிக்கவில்லை” என்று சொன்னான்.
எபேசியர் புத்தகத்தில் பவுல் நம்மை ஜெபிக்கும்படி கட்டாயப்படுத்துகிறார். “எல்லா சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடு” (6:18) என குறிப்பிடுகிறார். நம் குடும்பங்களில், அனுதின வாழ்வு தேவனையே சார்ந்திருக்கிறது என்பதை செயலில் காட்டும் போது நம் குழந்தைகள் அவர்களோடிருக்கும் மக்களின் உண்மையான விசுவாசத்தைக் கண்டு, தேவன் மீது தங்கள் நம்பிக்கையை வைக்கக் கற்று கொள்கிறார்கள் (2 தீமோ. 1:5). குழந்தைகளுக்காக, குழந்தைகளோடு ஜெபிப்பதன் மூலமே ஜெப வாழ்வின் முக்கியத்துவத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க முடியும். இதுவே அவர்கள் தேவன் மீதுள்ள நம்பிக்கையோடு இருப்பதன் அவசியத்தைத் தெரிந்து கொள்ள வழிவகுக்கும்.
நம் குழந்தைகளுக்கு தேவன் மீதுள்ள உண்மையான நம்பிக்கையை வளர்த்து விடுவோமாகில் தேவன் நம் வாழ்வில் எப்போதும் நம்மோடிருந்து, நம் வாழ்வின் ஒரு பகுதியாகவே அமைந்து தொடர்ந்து நம்மீது அன்பு கூர்ந்து, நம்மை வழிநடத்தி பாதுகாக்கிறார் என்ற உறுதியைக் கொடுக்கிறோம். இதுவே நாம் அவர்களுக்குக் கொடுக்கும் சிறந்த வெகுமதியாகும் (நீதி. 22:6, 2 தீமோ. 1:5).
நம்முடைய ஓட்டத்தை முடிப்போம்
2016 ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில், 5000 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டு இரு தடகள வீராங்கனைகள், உலகளவில் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தனர். நியூஸிலாந்தைச் சேர்ந்த நிக்கி ஹம்பிளினும், அமெரிக்கரான அபி டி அகஸ்டினோவும் ஒருவரோடொருவர் மோதி கீழே விழுந்தனர். அபி வேகமாக எழுந்து நின்று நிக்கிக்கு உதவினாள். சில நொடிகளில் இரு தடகள விராங்கனைகளும் ஓட ஆரம்பித்தனர். அபியினுடைய வலது காலில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக அவளுடைய ஓட்டம் தடுமாற ஆரம்பித்தது. அப்பொழுது நிக்கி தன் சக வீராங்கனையை ஓட்டத்தை முடிக்குமாறு ஊக்குவிக்கின்றாள். அபி முடிவு கோட்டின் அருகே தடுமாறி தாண்டிய போது நிக்கி காத்திருந்து அவளை அனைத்துக் கொண்டாள். ஒருவரையொருவர் ஊக்குவித்த அந்தக் காட்சி எத்தனை அழகாயிருந்தது.
இந்த நிகழ்வு வேதத்திலுள்ள ஒரு பகுதியை எனக்கு நினைப்பூட்டுகிறது. “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்… ஒருவன் விழுந்தாலும் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான். ஓண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே” (பிர. 4:9-10). ஆவிக்குரிய ஓட்டத்திலிருக்கும் நமக்கும் மற்றவரின் துணை வேண்டும். நாம் ஒருவரோடொருவர் பந்தயத்திற்காக ஓடவில்லை. மாறாக ஒரே குழுவின் உறுப்பினர்களாக ஓடுகிறோம். நாம் தடுமாறும் வேளைகளில் நம்மைத் தூக்கிவிட நமக்கு பிறரின் உதவி தேவை சில வேளைகளில் நாம் பிறரை ஊக்கப்படுத்துவதற்கு நம்முடைய ஜெபமும் பிரசன்னமும் தேவைப்படுகிறது.
இந்த ஆவிக்குரிய ஓட்டம் ஒரு தனிமையான ஓட்டமல்ல. ஒருவேலை தேவன் உன்னை நிக்கியைப் போலோ அல்லது அபியைப் போலவோ பிறர் வாழ்வில் செயல்பட்ட உன்னை வழிநடத்துகின்றாரா? அவருடைய வழி நடத்தலுக்கு இன்றே செவி சாய்த்து, நம்முடைய ஓட்டத்தை முடிப்போம்.
எல்லாவற்றிலும் மிகச் சிறந்த பகுதி
“அவனுடைய துண்டு என்னுடையதைக் காட்டிலும் பெரியது!”
நான் சிறுவனாக இருந்தபோது, நானும் என் சகோதரர்களும் என் தாயார் வீட்டில் தயாரித்த பையை (Pie) பங்கிடும் போது சண்டையிடுவதுண்டு. ஒரு நாள் என் தந்தை எங்களின் இந்த வேடிக்கை நிகழ்வுகளைப் பார்த்துவிட்டு, தன் உயர்த்தப்பட்ட கண் புருவங்களோடு அம்மாவைப் பார்த்து சிரித்துக் கொண்டே தன் தட்டினை உயர்த்தி பிடித்து “தயவு கூர்ந்து உன் உள்ளம் போன்ற பெரியதொரு துண்டினை எனக்குத் தா” என்றார். என் தாயார் சிரித்துக் கொண்டே மிகப் பெரிய பகுதியை அவருக்குக் கொடுத்த போது, நானும் என் சகோதரர்களும் அதிர்ந்து அமைதியாக கவனித்தோம்.
நாம் பிறருடைய உடைமைகள் மீது கண்வைக்கும் போது பொறாமை வந்து விடுகிறது. ஆனாலும் தேவனுடைய வார்த்தைகள் நம் கண்களை இந்த உலக பொருட்களைவிட விலையேறப் பெற்ற ஒன்றின் மீது பதிக்கச் செய்கின்றன. “கர்த்தாவே, நீரே என் பங்கு நான் உமது வசனங்களைக் கைக் கொள்ளுவேன் என்றேன். முழு இருதயத்தோடும் உமது தயவுக்காகக் கெஞ்சுகிறேன்” (சங். 119:57-58). தேவனுக்கு மிக அருகில் இருப்பதைவிட சிறந்தது வேறெதுவுமில்லை என்ற உண்மையை பரிசுத்த ஆவியானவரால் ஏவவ்பட்டு எழுதியவர் நமக்குத் தெரிவிக்கின்றார்.
அன்பு நிறைந்த, முடிவு இல்லாதவராகிய நம்முடைய படைப்பின் கர்த்தாவைவிட மேலான பங்கு நமக்கு என்ன இருக்க முடியும்? அவருக்கு இணையானது இப்புவியில் வேறொன்றும் இல்லை. எதுவும் நம்மை அவரிடமிருந்து பிரிக்க முடியாது. மனிதனின் ஏக்கமெல்லாம் ஒரு அகன்ற வெற்றிடம் போல இருக்கிறது. ஒருவன் இவ்வுலகில் அனைத்தையும் அடைந்தாலும் அவனுடைய வாழ்வு பரிதாபத்திற்குரியதாகவே இருக்கிறது. ஆனால், தேவன் நம்முடைய மகிழ்ச்சியின் ஊற்றாக மாறும் போது நாம் உண்மையான நிறைவைப் பெற்றுக் கொள்வோம். நமக்குள்ளேயுள்ள வெற்றிடத்தை தேவனாலே மட்டும்தான் நிரப்ப முடியும.; அவராலேயே நமது இதயத்திற்கேற்ற அமைதியைத் தர முடியும்.
நடத்துபவரைக் கவனி
உலக புகழ்பெற்ற வயலின் மேதை ஜோசுவா பெல், செயின்ட் மார்டின் உயர்கல்வி கூடத்தின் 44 உறுப்பினர்களைக் கொண்ட இசைக் குழுவினை நடத்தும் போது, அவர் எல்லா நடத்துனர்களும் பயன்படுத்தும் ஒரு சிறிய கோலை பயன்படுத்தாமல், அவர் தன்னுடைய உயர்தர வயலினை மற்றவர்களோடு சேர்ந்து இசைப்பதன் மூலம் நடத்தினார். பெல் ஒரு முறை கொலொரடா ஷேயோவிற்கு பேட்டியளித்தபோது “நான் என் இசைக்கருவியை வாசிக்கும் போது என்னால், நான் நினைக்கின்ற எல்லாவித வழிநடத்தலையும், குறியீடுகளையும் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்க முடிகிறது. என்னுடைய வயலினில் உள்ள ஒரு சிறிய இறக்கம் அல்லது என் கண்புருவத்தின் ஏற்றம் அல்லது நான் என் இசைமீட்டியை (bow) இழுக்கின்ற விதத்திலிருந்து அந்த முழு இசைக் குழுவினரும் நான் எத்தகைய ஒலியை எதிர்பார்க்கிறேன் என்பதைப் புரிந்து கொள்வார்கள் எனக் கூறினார்.
இந்த இசைக் குழுவின் உறுப்பினர்கள் ஜோசுவா பெல்லை உற்று கவனிப்பது போல வேதாகமும் நம்முடைய கண்களை இயேசு கிறிஸ்துவின் மீது வைக்குமாறு நமக்கு அறிவுறுத்துகிறது. எபிரெயர் 11ல் விசுவாச வீரர்களைப் பட்டியலிட்டப்பின் அதன் ஆக்கியோன் சொல்லுகிறார். “ஆகையால் மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க, பாரமான யாவற்றையும் நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபி. 12:1).
“இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” (மத். 28:20) என இயேசு வாக்களித்துள்ளார். அவர் என்றென்றும் நம்முடனே இருக்கிறபடியால், நம் வாழ்க்கையென்னும் இசையை அவர் மீட்டும் போது நம்முடைய கண்களை அவர் மீது நிறுத்தக் கூடிய மிக வியப்பூட்டும் பாக்கியத்தைப் பெற்றுள்ளோம்.