ரெஃப்யூஜ் ரபீந்தரநாத் இலங்கையிலுள்ள வாலிபர் ஊழியத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணிசெய்பவர். இரவு வெகு நேரம் வரை அவர்களோடு உரையாடுவார், விளையாடுவார், அவர்கள் சொல்வதைக் கேட்பார், ஆலோசனைகள் சொல்லி போதிப்பார். வாலிபர் மத்தியில் ஊழியம் செய்வதை அவர் அதிகம் விரும்பினார். ஆனாலும் கிறிஸ்துவுக்குள் வளர்ந்த வாலிபர்கள் விசுவாசத்தை விட்டு விலகும்போது சோர்ந்து போவார். சிலவேளைகளில் லூக்கா 5ல் உள்ள சீமோனைப்போல உணருவார்.

சீமோன் இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் ஒரு மீனும் பிடிக்கவில்லை (வச. 5) அவன் சோர்ந்து, களைத்துப்போயிருந்தான். இயேசு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வளைகளைப் போடுங்கள் என்றார். அதற்கு சீமோன் ஐயரே உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான் (வச. 5).

சீமோனின் கீழ்ப்படிதல் ஆச்சரியமானது அனுபவமிக்க மீனவனாகிய சீமோனுக்கு, வெயில் ஏறினவுடன் மீன்கள் கடலின் ஆழத்திற்குப்போய் விடுமென்றும், தங்கள் வலைகள் அவ்வளவு ஆழத்திற்கு எட்டாதென்றும் நன்கு தெரியும்.

அவன் இயேசுவனை நம்பினதற்கு நல்ல பலனைப் பெற்றுக்கொண்டான். அவன் திரளான மீன்களைப் பிடித்தது மட்டுமல்ல, இயேசு யாரென்றும் அழமாக அறிந்து கொண்டான். ஐயரே (வச. 5) என்று கூப்பிடுவதற்குப் பதிலாக ஆண்டவர் (வச.8) என்று அழைத்தான். மெய்யாகவே “கீழ்ப்படிதல்” நாம் தேவனுடைய செயல்களை நேரடியாகப் பார்த்து அவரை கிட்டிசேர வழி நடத்தும்.

ஒருவேளை தேவன் இன்று உங்கள் வலைகளை மறுபடியம் ஆழத்தில் போட அழைத்துக்கொண்டிருக்கலாம். நாமும் ஆண்டவர் சீமோன் சொனன்னதபோலவே, “உம்முடைய வார்த்தையின்படியே போடுகிறேன்” என்போமாக…