கடத்தப்பட்டு 13 நாட்கள் பிணைக் கைதியாக வைக்கப்பட்டு, பின் விடுதலையாக்கப்பட்ட ஓலாவ் விக்கு என்ற நியூஸிலாந்தைச் சேர்ந்த ஒளிப்படத் தொகுப்பாளர் மலர்ந்த முகத்துடனும், சிரிப்புடனும் “எனது கடந்த வாழ்நாள் முழுவதிலும் நான் உணர்ந்ததைவிட இப்பொழுது உண்மையிலேயே உயிருள்ளவனாக உணர்கிறேன்” என்று கூறினார்.

சுதந்திரமாக இருப்பதைவிட ஒரு பிடியிலிருந்து சுதந்திரம் பெறுவது, நம்மால் புரிந்துகொள்ள இயலாத இன்பக்களிப்பை நமக்கு கொடுக்கிறது.

அனுதினமும் சுதந்தரமான வாழ்க்கையை அனுபவிக்கும் நமக்கு ஓலாவ் விக்குவின் மகிழ்ச்சி, நாம் அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதை எளிதாக மறந்து விடுகிறோம் என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. ஆவிக்கேற்ற வாழ்க்கையிலும் இது உண்மையானது. அநேக காலமாக கிறிஸ்தவர்களாக வாழ்பவர்கள், அவர்கள் ஒரு காலத்தில் பாவத்திற்கு அடிமையாக இருந்ததை மறந்து விடுகிறார்கள். நாம் நமது வாழ்க்கை முறையில் அதிக மன நிறைவு கொள்வதோடு நன்றி இல்லாதவர்களாகவும் இருந்துவிடக்கூடும். அப்படிப்பட்ட சமயங்களில் புதிதாக விசுவாசத்திற்குள் வந்த ஒருவர், அவருடைய வாழ்க்கையில் தேவன் அருளிய இரட்சிப்பின் மகிழ்ச்சியை உற்சாகத்துடன் நம்மிடம் பகிர்ந்து கொள்ளும்போது, நாமும் இப்படியாக ஒரு காலத்தில் பாவப் பிரமாணத்தினின்றும், மரணத்தினின்றும் விடுதலையாக்கப்பட்டபோது (ரோம. 8:2) நாம் பெற்ற மகிழ்ச்சியை தேவன் நமக்கு நினைப்பூட்டுவார்.

விடுதலை வாழ்க்கை உங்களை சோர்வடையச் செய்வதாக இருந்தால் அல்லது உங்களால் செய்ய இயலாத காரியத்தில் உங்கள் மனதை செலுத்துபவர்களாக இருந்தால், கீழ்க்கண்ட காரியங்களை சிந்தியுங்கள்: நீங்கள் இனி ஒரு பொழுதும் பாவத்திற்கு அடிமைகள் இல்லை, பரிசுத்த வாழ்க்கை வாழ விடுதலையாக்கப்பட்டு கிறிஸ்து இயேசுவோடு கூட நித்திய ஜீவனை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க உள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் (6:22).

கிறிஸ்துவுக்குள் நீங்கள் பெற்றுள்ள சுதந்திரத்தின்மூலமாக தேவனுக்கு அடிமையாக நீங்கள் செய்யக் கூடிய செயலுக்கு நன்றி கூறி, கிறிஸ்துவுக்குள் நீங்கள் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.