Archives: செப்டம்பர் 2016

ஆயத்தமாகுதல்

சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த என் மாமனாருடைய உடலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது, அவருடைய மகன்களில் ஒருவன், அவர் உபயோகப்படுத்திய சுத்தியை கூப்பியிருந்த அவருடைய கைகளுக்குள் செருகிவிட்டார். வருடங்கள் கழித்து, என்னுடைய மாமியார் மரித்த பொழுது, அவருடைய ஒரு பிள்ளை இரு பின்னல் ஊசிகளை அவருடைய விரல்களுக்கடியில் செருகிவிட்டார். அவர்களுடைய வாழ்நாட்களில் எவ்வளவாய் அக்கருவிகளை அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பதை நினைக்கும் பொழுது, இச்செயல்கள் ஆறுதலைக் கொண்டுவந்தது.

நிச்சயமாக நித்தியத்தில் அவர்களுக்கு இக்கருவிகள் தேவைப்படாது தான். அடுத்த வாழ்விற்கு தங்களை தயார் செய்து கொள்ள உதவியாக பணத்தையோ, ஆயுதங்களையோ அல்லது…

உயிர் காக்கும் மிதவை

எனக்கு முன்பாக இருந்த நீச்சல் குளத்தில் சூரிய ஒளி மின்னியது. தற்செயலாக, அதிக நேரம் தண்ணீரிலிருந்த மாணவனைப் பார்த்து, “நீ சோர்வடைவது போலத் தெரிகிறது, ஆழத்திலிருக்கும் பொழுது சோர்வடைந்தால், உயிர் காக்கும் மிதவையை உபயோகி” என்று பயிற்சியாளர் கூறுவதைக் கேட்டேன்.

சில சூழ்நிலைகள், நாம் நம் மனதாலோ, சரீர பெலத்தினாலோ, நம்முடைய உணர்ச்சிகளினாலோ தாங்கிக்கொள்ள முடியாதபடி இருக்கக் கூடும். தாவீது ஒருமுறை எதிரிகளின் பயமுறுத்துதலையும், அவர்களுடைய கோபத்தின் ஆழத்தையும் எதிர்கொண்டது குறித்து விவரிக்கிறான். அவன் எதிர்கொண்ட துயர நிலையிலிருந்து தப்பிப்பது அவசியமாயிருந்தது.

இவ்வாறு அவன்…

ஒரு சுகந்த வாசனை

நியூயார்க் (New York) நகரில், வாசனை திரவியப் பொருட்கள் செய்யும் ஒரு பெண்,  சில வாசனை திரவியங்களின் கலவைகளை அடையாளம் கண்டு, அந்நறுமணத்தின் தயாரிப்பாளரை தன்னால் யூகிக்க முடியும் எனக் கூறினார். ஒரே ஒரு தரம் வாசனையை முகர்ந்து பார்த்தே அவளால், “இது ஜென்னியின் கைவண்ணம்” என்று கூற முடியும்.

அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து பட்டணத்திலுள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதும் பொழுது, ஒரு முறை தாங்கள் கைப்பற்றிய பட்டணத்தில், தூபம் காட்டும் வெற்றிச்சிறந்த ரோமப் படையை உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார் (2 கொரி. 2:14). படைத் தலைவர்…

ஒருவருக்கொருவர் உதவுதல்

புதிய ஏற்பாட்டில் 30 முறைக்கும் மேலாக பயன்படுத்தப்படும் “கிறிஸ்துவின் சரீரம்” என்னும் சொற்றொடர் ஒரு புதிர். அப்போஸ்தலனாகிய பவுல் அச்சொற்றொடரை சபையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார். இயேசு பரமேறிய பின்பு, அவருடைய பணியை தொடரும்படி குறைவுள்ள,  திறமையில்லாத ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஒப்புக்கொடுக்கிறார். அவர் சபைக்கு தலையாக தலைமை ஏற்றுக்கொண்டு, அவருடைய கைகளாக, கால்களாக,  காதுகளாக, கண்களாக, மற்றும் குரலாக ஒழுங்கற்ற சீஷர்களை, அதாவது உன்னையும், என்னையும் விட்டுச் சென்றுள்ளார்.

அநேக அவயங்கள் உள்ள ஒரு பெரிய சரீரத்திற்கு காணக்கூடாத தலையாக இருக்க தீர்மானித்த இயேசு, …

காலத்திற்கு அப்பாற்பட்டு

ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.
நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். யோவான் 6:68-69

2016 ஆண்டு, வில்லியம் ஷேக்ஸ்பியருடைய (William Shakespeare) நானூறாவது நினைவு ஆண்டினை கூறும் வண்ணம் பிரிட்டனிலும் (Britain) மற்றும் உலகெங்கிலும் உள்ள நாடகக் கம்பெனிகள் பல சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தின. காலத்தால் அழிக்க முடியாத நாடகத் தொகுப்புகளை இயற்றிய அதிசிறந்த ஆங்கில நாடக ஆசிரியராக அவரைக் கருதிய மக்கள் அனைவரும் கச்சேரிகள், விரிவுரைகள் மற்றும் கொண்டாட்டங்களில்…