சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த என் மாமனாருடைய உடலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது, அவருடைய மகன்களில் ஒருவன், அவர் உபயோகப்படுத்திய சுத்தியை கூப்பியிருந்த அவருடைய கைகளுக்குள் செருகிவிட்டார். வருடங்கள் கழித்து, என்னுடைய மாமியார் மரித்த பொழுது, அவருடைய ஒரு பிள்ளை இரு பின்னல் ஊசிகளை அவருடைய விரல்களுக்கடியில் செருகிவிட்டார். அவர்களுடைய வாழ்நாட்களில் எவ்வளவாய் அக்கருவிகளை அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பதை நினைக்கும் பொழுது, இச்செயல்கள் ஆறுதலைக் கொண்டுவந்தது.

நிச்சயமாக நித்தியத்தில் அவர்களுக்கு இக்கருவிகள் தேவைப்படாது தான். அடுத்த வாழ்விற்கு தங்களை தயார் செய்து கொள்ள உதவியாக பணத்தையோ, ஆயுதங்களையோ அல்லது வேறு கருவிகளையோ மரித்தோரோடு புதைக்கும் பழங்கால எகிப்தியரைப் போல எந்த மாய கற்பனைகளும் எங்களுக்கில்லை. ஏனெனில் அவற்றையெல்லாம் உங்களோடு எடுத்துச் செல்ல முடியாது (சங். 49:16-17; 1 தீமோ. 6:7).

ஆனால், என்னுடைய மாமனார், மாமியாருக்கு நித்தியத்திற்கென்று சில ஆயத்தங்கள் தேவைப்பட்டது. அது பல ஆண்டுகளுக்கு முன்பு இயேசுவை தன் இரட்சகராக ஏற்றுக் கொண்ட பொழுது நடந்த ஆயத்தம்.

இனி வரப்போகும் வாழ்விற்குரிய ஆயத்தமானது, நம்முடைய மரணத்தருவாயில் ஆரம்பிப்பதில்லை. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய இருதயங்களை பண்படுத்தி, இயேசுவினுடைய சிலுவை பலியினால் நமக்கு உண்டான இரட்சிப்பு என்னும் ஈவை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதே சமயம், தேவனும் நமக்காக ஆயத்தங்கள் செய்துள்ளார். “நான் போய்… சேர்த்துகொள்வேன்” (யோவா. 14:3). நித்தியத்திற்கும் அவரோடு நாம் இருக்கும்படியாக நமக்காக ஒரு இடத்தை ஆயத்தம் பண்ண வாக்களித்துள்ளார்.