யார் அவர்களுக்கு கூறுவார்கள்?
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. சமாதானம் அறிவிக்கப்பட்டது. ஆனால் பிலிப்பைன்ஸில் ஒரு தீவிலிருந்த கிரு ஒனோடா என்ற ஜப்பானிய லெப்டினன்ட் யுத்தம் நின்றதை அறியவில்லை. அவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. யுத்தம் நின்றுவிட்டது என்று அச்சடிக்கப்பட்ட கைப்பிரதிகள் அவன் இருக்கும் பகுதியில் போடப்பட்டன. அவன் இருக்குமிடத்திலிருந்து எதிரிகளைத் தாக்க வேண்டும் என்ற கட்டளையை அவன் 1945ல் பெற்றான். ஆகவே ஒனோடோ, போடப்பட்ட கைப்பிரதிகள் எதிராளியின் தந்திரமான பொய்ப்பிரச்சாரம் என்று அந்தக் கைப்பிரதி கூறின செய்தியை நிராகரித்து விட்டான். யுத்தம் முடிந்து ஏறக்குறைய…
நான் அவரை நேசிப்பதால்
என் கணவர் அலுவல் நிமித்தமாக வெளியூருக்குச் சென்று திரும்புவதற்கு முந்தின நாள் என் மகன், “அம்மா, அப்பா வீட்டிற்கு வரவேண்டுமென்று ஆவலாக இருக்கிறேன்” என்று கூறினான். ஏன் என்று கேட்டேன். பொதுவாக அவனது தகப்பனார் வெளியூருக்குச் சென்று திரும்பும் பொழுது அவனுக்கு வாங்கி வரும் பரிசுப்பொருட்களை விரும்பியோ அல்லது அவனது தகப்பனார் வீட்டிலிருக்கும் பொழுது அவரோடு பந்து விளையாட இயலவில்லையே என்ற காரணங்களால் அவன் அப்படி கூறினான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவன் மிகவும் கருத்தோடே கூட “நான் எனது அப்பாவை மிகவும் நேசிப்பதினால்…
யாரைத் தற்காக்கிறீர்கள்?
இலக்கண ஆசிரியர் இலக்கண வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த பொழுது, வகுப்பிற்கு முன் வந்து நின்று, ஒரு வாக்கியத்தை இலக்கண ரீதியில் விளக்கும்படி கேத்தலீனிடம் கூறினார். அவள் மிகவும் பயந்து விட்டாள். அவள் சமீப காலத்தில் தான் அந்தப் பள்ளியில் வந்து சேர்ந்திருந்தாள். ஆகவே மேற்கூறப்பட்ட இலக்கணத்தை கற்றது கிடையாது. அந்த வகுப்பிலிருந்த மற்ற மாணவர்கள் அவளைப் பார்த்து நகைத்தார்கள்.
உடனே, அவளைத் தற்காக்க ஆசிரியர் முன் வந்தார். “விரைவில் எதிர்காலத்தில் அவள் உங்கள் எல்லாரையும்விட மிகவும் தலைசிறந்தவளாகி விடுவாள்” என்று விளக்கினார். அநேக ஆண்டுகளுக்குப்…
இடர்பாடுகள் மத்தியில் மகிழ்ச்சியாயிருங்கள்
எமில் ஒரு வீடற்ற மனிதன். அவன் ஒவ்வொரு நாளும் சாலையிலுள்ள நடைபாதையை குனிந்து பார்த்துக்கொண்டே நடந்து ஆண்டு முழுவதையும் கழித்தவன். யாராவது அவனை அடையாளம் கண்டு கொண்டால் அவர்களை நேருக்கு நேராக சந்திக்க வெட்கப்பட்டான். ஏனெனில் அவனது வாழ்க்கை எப்பொழுதும் இதுபோல நடைபாதையில் கழிக்கப்படவில்லை. அவன் சாலையில், கீழே விழுந்து கிடக்கும் காசு அல்லது பாதி புகைத்து வீசப்பட்ட சிகரெட் துண்டு கிடைக்குமாவென்று அவ்வாறு குனிந்தே நடந்தான். அவ்வாறு அவன் தொடர்ந்து குனிந்தே நடப்பது அவனுக்கு வழக்கமாகி விட்டதால், அவனுடைய முதுகெலும்புத் தண்டும் நிலையாக…
யார் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்?
2016ம் ஆண்டு ரியோ டி ஜெனரியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்கச் செல்லும் விளையாட்டு வீரர்கள் அந்த ஊரில் எங்கு இருந்தாலும் இயேசுவைக் காணலாம். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இந்த ஊரில் 2310 அடி உயரமுள்ள கார்க்வோடா என்ற மலையின் உச்சியில், 100 அடி உயரமுள்ள கிறிஸ்து எனும் மீட்பர் என்ற மிகப்பெரிய சிலை நிறுவப்பட்டுள்ளது. கைகள் இரண்டையும் விரித்தபடி நிற்கும் இந்த பெரிய இயேசுவின் சிலை விரிந்து பரவிக்கிடக்கும் அந்த ஊரின் எந்தப் பகுதியிலிருந்தும், இரவும் பகலும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
கான்கிரீட்டாலும், சோப்புக்கல்லாலும்…