எமில் ஒரு வீடற்ற மனிதன். அவன் ஒவ்வொரு நாளும் சாலையிலுள்ள நடைபாதையை குனிந்து பார்த்துக்கொண்டே நடந்து ஆண்டு முழுவதையும் கழித்தவன். யாராவது அவனை அடையாளம் கண்டு கொண்டால் அவர்களை நேருக்கு நேராக சந்திக்க வெட்கப்பட்டான். ஏனெனில் அவனது வாழ்க்கை எப்பொழுதும் இதுபோல நடைபாதையில் கழிக்கப்படவில்லை. அவன் சாலையில், கீழே விழுந்து கிடக்கும் காசு அல்லது பாதி புகைத்து வீசப்பட்ட சிகரெட் துண்டு கிடைக்குமாவென்று அவ்வாறு குனிந்தே நடந்தான். அவ்வாறு அவன் தொடர்ந்து குனிந்தே நடப்பது அவனுக்கு வழக்கமாகி விட்டதால், அவனுடைய முதுகெலும்புத் தண்டும் நிலையாக வளைந்துவிட்டது. அதனால் அவனுக்கு நிமிர்ந்து பார்ப்பது மிகவும் கடினமாக இருந்தது.

எலிசா தீர்க்கதரிசியின் வேலைக்காரன் தவறாகப் பார்த்ததால் அவனது எஜமானைப் பிடிக்க ஆராம் இராஜாவினால் அனுப்பப்பட்ட பெரிய இராணுவத்தைப் பார்த்து பயந்தான் (2 இரா. 6:15). அவன் காரியம் முழுவதையும் பார்க்கவில்லை என்றும், எதிராளியின் இராணுவத்தின் எண்ணிக்கையையும், அதனால் வர இருக்கும் ஆபத்தையும் மட்டும்தான் அவன் பார்த்தான் என்று எலிசா அறிந்திருந்தான். ஆராமினால் எலிசாவுக்கு விரோதமாக அனுப்பப்பட்ட இராணுவத்தின் எண்ணிக்கையை விட அவர்களைச் சுற்றிலும் மிகப்பெரிய அளவில் தேவனால் அனுப்பப்பட்ட அக்கினி மயமான குதிரைகளும், இரதங்களும் அந்த மலை முழுவதையும் நிறைந்திருந்ததைக் காண வேலைக்காரனின் கண்கள் திறக்கப்பட வேண்டியதிருந்தது (வச.17).

நமது வாழ்க்கை பல்வேறு பிரச்சனைகளால் அழுத்தப்பட்டு கஷ்டத்திலிருக்கும் பொழுது, நாம் நமது பிரச்சனைகளை மட்டும் பார்ப்பது மிகவும் எளிதான காரியமாக உள்ளது. ஆனால் எபிரெயர் நிரூபத்தை எழுதிய ஆக்கியோன் வேறு ஒரு சிறந்த வழியைப்பற்றி ஆலோசனை கூறியுள்ளான். நமக்காக, இயேசு நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு, துன்பங்களை சகித்தார் என்று நமக்கு நினைப்பூட்டுகிறார். நாம் இயேசுவையே நோக்கிப் பார்த்தோமென்றால் அவர் நிச்சயமாக நம்மை பெலப்படுத்துவார்.