என் கணவர் அலுவல் நிமித்தமாக வெளியூருக்குச் சென்று திரும்புவதற்கு முந்தின நாள் என் மகன், “அம்மா, அப்பா வீட்டிற்கு வரவேண்டுமென்று ஆவலாக இருக்கிறேன்” என்று கூறினான். ஏன் என்று கேட்டேன். பொதுவாக அவனது தகப்பனார் வெளியூருக்குச் சென்று திரும்பும் பொழுது அவனுக்கு வாங்கி வரும் பரிசுப்பொருட்களை விரும்பியோ அல்லது அவனது தகப்பனார் வீட்டிலிருக்கும் பொழுது அவரோடு பந்து விளையாட இயலவில்லையே என்ற காரணங்களால் அவன் அப்படி கூறினான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவன் மிகவும் கருத்தோடே கூட “நான் எனது அப்பாவை மிகவும் நேசிப்பதினால் அவர் வீட்டிற்கு வரவேண்டுமென்று விரும்புகிறேன்” என்று பதில் கூறினான்.

அவனுடைய பதில் கர்த்தரைப் பற்றியும், திரும்ப வருவேன் என்று அவர் கூறிய வாக்குத்தத்ததைப் பற்றியும் என்னை சிந்திக்க வைத்தது. “இதோ, நான் சீக்கிரமாய் வருகிறேன்” (வெளி. 22:20) என்று இயேசு கூறுகிறார். இயேசுவின் வருகையை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். ஆனால் அவர் வரவேண்டுமென்று நான் ஏன் விரும்புகிறேன்? அவர் வரும்பொழுது வியாதி, மரணம் ஏதும் இல்லாமல் அவரது பிரசன்னத்தில் நான் இருப்பேன் என்பதற்காகவா? துன்பங்கள் நிறைந்த இந்த உலக வாழ்க்கையில் நான் களைப்படைந்து விட்டேனா? அல்லது உங்களது மகிழ்ச்சி, துக்கம் இவற்றில் அவர் பங்கெடுத்து, மற்ற மனிதர்கள் எல்லாரையும் விட அவர் உண்மையாக இருப்பதினால் அவரை நீங்கள் மிகவும் நேசிப்பதினால், என்றென்றும் அவரோட கூட நீங்கள் இருக்க விரும்புவதால் அவரது வருகையை நீங்கள் விரும்புகிறீர்களா?

என் மகன், அவனது தகப்பனார் வெளியூரிலிருந்த பொழுது, அவரை மிகவும் தேடினதைக் குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் வீடு திரும்புவதைக் குறித்து அவன் எந்தக்கவலையும் படாவிட்டால் அல்லது அவர் வீட்டில் இருந்தால் அவனது சொந்தத் திட்டங்களில் அவர் தலையிடுவார் என்று எண்ணியோ அவரது வருகையைக் குறித்து கவலைப்படாமல் இருந்திருந்தால் அது மிக மோசமான செயலாகும். நமது கர்த்தரின் வருகையைக் குறித்து நாம் எப்படி உணருகிறோம்? அவருடைய வருகையின் நாளுக்காக உண்மையாகவே பேரார்வத்துடன் காத்திருந்து, “கர்த்தாவே திரும்ப வாரும், நாங்கள் உம்மை நேசிக்கிறோம்” என்று கூறுவோம்.