Archives: ஏப்ரல் 2016

வலையில் சிக்காமல்

பூச்சிகளைக் கொன்று உண்டு வாழும் தாவரமாகிய “வீனஸ் ஃபளைடிராப்” 10 நாட்களில் தான் பிடித்த பூச்சியைத் தின்று விடும். அதன் இலைகளில் ஊறும் மதுவில் உள்ள நறுமணம் என்ன நடக்கும் என்று அறியாத வண்டுகளை, பூச்சிகளைக் கவரும் ஓர் கண்ணியாக செயல்படுகிறது. இவ்வாறு கவரப்படும் பூச்சிகள் தாடைகள் போன்று அகன்று காணப்படும். இலையை நோக்கி ஊர்ந்து செல்கிறது, உடனே அரை நொடியில் இறுக மூடிக்கொண்டு, ஜீரண நீர்களைச் சுரந்து வண்டைக் கரைக்கிறது.

இந்த மாமிச பட்சணித் தாவரம் எவ்வாறு பாவம் நம்மைக் கவர்ந்து நம்மை…

நான் யாருக்காக உழைக்கிறேன்?

ஹென்றி வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்கிறார். அவருடைய பணியை மனநிறைவுடன் செய்கிறார். தன் குடும்பத்திற்குத் தேவையான சிறந்த பொருட்களை வாங்கத் தேவையான பணத்தை தன் சம்பளமாகத் தன் வீட்டிற்குக் கொண்டு வருகிறார். தன் வேலைப் பளுவைக் குறைக்க வேண்டும் என்று பல முறை தீர்மானித்தும் அதை அவர் நடைமுறைப் படுத்தவில்லை. ஒரு நாள் மாலை தான் பணிபுரியும் நிறுவனத்தில் ஓர் உயர்ந்த நிலைக்கு தனக்கு பதவி உயர்வு கிடைத்த நற்செய்தியுடன் தன் வீட்டிற்கு வந்தார். ஆனால் வீட்டில் யாருமே இல்லை காலப்…

இனிய நினைப்பூட்டுதல்கள்

எகிப்திய அரசன் துத்தன்காமனின் கல்லறை 1922ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, அது மறுமை வாழ்க்கைக்கு தேவை என்று பண்டைய எகிப்தியர் கருதிய பொருட்களால் நிறைந்திருந்தது தங்கத்தாலான கோயில்கள், ஆபரணங்கள், தேன் நிறைந்த ஓர் பானை போன்ற பொருட்கள் காணப்பட்டன. 3200 ஆண்டுகளுக்குப்பின்னும் அத்தேன் சாப்பிடக்கூடிய நிலையில் இருந்தது.

இன்றைய காலத்தில் தேனை நாம் இனிப்புச் சுவையைக் கொடுக்கும் ஓர் பொருளாகவே கருதுகிறோம். ஆனால் பண்டைய காலத்தில் அது பலவிதங்களில் பயனளிப்பதாகக் காணப்பட்டது. மனிதன் உயிர்வாழத் தேவையான அனைத்து போஷாக்குகளும் நிறைந்த ஒரே உணவு இதுதான்…

திடன் கொள்ளுங்கள்!

பறவைகள் பறந்து விளையாடுவதைப் பார்த்து நான் ரசிப்பேன்; எனவே சில ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் வீட்டில் கொல்லைப்புறத்தில் அவைகளை ஈர்க்கும் வகையில் ஓர் சிறிய பாதுகாப்பான இடத்தை அமைத்தேன். சிறகடித்து பறக்கும் பறவை நண்பர்கள் உணவருந்துவதையும், அங்கும் இங்கும் பறப்பதையும் பல மாதங்களாகக் கண்டு ரசித்தேன். ஆனால் வெகு சீக்கிரத்தில் நான் அமைத்திருந்த பறவை கூட்டை ஒரு கூப்பர்ஸ் ஹாக் (ஒரு வகைப் பருந்து) தன் வேட்டையாடும் ஸ்தலமாக அமைத்துக் கொண்டது.

இதுதான் வாழ்க்கை! நாம் நம் வாழ்க்கையை எளிதாக மாற்றி அமைத்துக் கொண்டு…