பறவைகள் பறந்து விளையாடுவதைப் பார்த்து நான் ரசிப்பேன்; எனவே சில ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் வீட்டில் கொல்லைப்புறத்தில் அவைகளை ஈர்க்கும் வகையில் ஓர் சிறிய பாதுகாப்பான இடத்தை அமைத்தேன். சிறகடித்து பறக்கும் பறவை நண்பர்கள் உணவருந்துவதையும், அங்கும் இங்கும் பறப்பதையும் பல மாதங்களாகக் கண்டு ரசித்தேன். ஆனால் வெகு சீக்கிரத்தில் நான் அமைத்திருந்த பறவை கூட்டை ஒரு கூப்பர்ஸ் ஹாக் (ஒரு வகைப் பருந்து) தன் வேட்டையாடும் ஸ்தலமாக அமைத்துக் கொண்டது.

இதுதான் வாழ்க்கை! நாம் நம் வாழ்க்கையை எளிதாக மாற்றி அமைத்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் தருணத்தில் நமது அமைதலான சூழ்நிலையை சீர்குலைக்க ஏதேனும் ஓர் காரியமோ அல்லது யாராவது ஒருவரோ இடைப்படுவார்கள். ஏன், என் வாழ்க்கையின் பெரும் பகுதி கண்ணீரின் பள்ளத்தாக்காகத் தான் இருக்க வேண்டுமா? என்று நாம் கேட்கலாம்.

இந்த பண்டைய, பழக்கப்பட்ட கேள்விக்கு பலவிதமான பதில்களை கேட்டிருக்கிறேன். “இவ்வுலகத்தில் கடந்து செல்லும் சிட்சைகள் அனைத்தும், (நம்மை) தேவன் தம் பிள்ளைகளாக (நமக்கு) நம்மை மாற்றவே” (ஜார்ஜ் மக் டொனால்ட், வாழ்க்கைக்கு அத்தியாவசியம் என்ற நூலில்) நாம் சிறு பிள்ளைகளைப் போலாகும் பொழுது நாம் நம் பரம பிதாவின் அன்பிலே திளைத்து, அவற்றை மாத்திரம் சார்ந்து வாழ்ந்து, அவரை அறிந்து கொள்ளவும், அவரைப் போல் மாறவும் வாஞ்சிக்கிறோம்.

கஷ்டங்களும், கவலைகளும் நம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வரலாம். “ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை… அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில் காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்” (2 கொரி 4:16-18).

எனவே இப்படிப்பட்ட முடிவுகளை நம் மனதில் கொண்டுவந்து நாம் மகிழ்வுடன் இருக்கலாம் அல்லவா?