பூச்சிகளைக் கொன்று உண்டு வாழும் தாவரமாகிய “வீனஸ் ஃபளைடிராப்” 10 நாட்களில் தான் பிடித்த பூச்சியைத் தின்று விடும். அதன் இலைகளில் ஊறும் மதுவில் உள்ள நறுமணம் என்ன நடக்கும் என்று அறியாத வண்டுகளை, பூச்சிகளைக் கவரும் ஓர் கண்ணியாக செயல்படுகிறது. இவ்வாறு கவரப்படும் பூச்சிகள் தாடைகள் போன்று அகன்று காணப்படும். இலையை நோக்கி ஊர்ந்து செல்கிறது, உடனே அரை நொடியில் இறுக மூடிக்கொண்டு, ஜீரண நீர்களைச் சுரந்து வண்டைக் கரைக்கிறது.

இந்த மாமிச பட்சணித் தாவரம் எவ்வாறு பாவம் நம்மைக் கவர்ந்து நம்மை அழித்துவிடவல்லது என்பதை எனக்கு நினைவூட்டியது. பாவம் நம்மீது பசிதாகமுடையது. நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும் என்று ஆதி 4:7 கூறுகிறது. காயின் தன் சகோதரனாகிய ஆபேலைக் கொல்வதற்கு சற்று நேரத்திற்கு முன்பு இந்த வார்த்தைகளைத் தேவன் காயீனிடம் கூறினார்.

பாவம் நமக்கு புதிய அனுபவத்தைக் காட்டி, நன்நடத்தையான வாழ்க்கை வாழ்வது என்பது ஒரு பொருட்டல்ல என்றும், நமது ஐம்புலன்களின் உணர்வுகளைப் பூர்த்தி செய்வது தவறு அல்ல என்றும் நம்மை நம்பச் செய்து சோதனைக்குள்ளாக்கி நம்மை வீழ்த்த முயற்சிக்கும். என்றாலும், பாவம் நம்மை பட்சிக்காதவாறு, பாவத்தை மேற்கொண்டு வாழ நமக்கு வழியுண்டு. “ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள் (கலா 5:16) என்று வேதம் கூறுகிறது. நாம் சோதனைகளைச் சந்திக்கும் பொழுது நாம் தனிமையாக அதை சந்திப்பதில்லை. நாம் அறியாத தெய்வீக உதவி நமக்கு இருக்கிறது. நாம் அவருக்காகவும், பிறருக்காகவும் வாழத் தேவையான பெலத்தை, நாம் தேவ ஆவியானவரைச் சார்ந்திருக்கும் பொழுது நமக்கு அளிக்கிறார்.