ஹென்றி வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்கிறார். அவருடைய பணியை மனநிறைவுடன் செய்கிறார். தன் குடும்பத்திற்குத் தேவையான சிறந்த பொருட்களை வாங்கத் தேவையான பணத்தை தன் சம்பளமாகத் தன் வீட்டிற்குக் கொண்டு வருகிறார். தன் வேலைப் பளுவைக் குறைக்க வேண்டும் என்று பல முறை தீர்மானித்தும் அதை அவர் நடைமுறைப் படுத்தவில்லை. ஒரு நாள் மாலை தான் பணிபுரியும் நிறுவனத்தில் ஓர் உயர்ந்த நிலைக்கு தனக்கு பதவி உயர்வு கிடைத்த நற்செய்தியுடன் தன் வீட்டிற்கு வந்தார். ஆனால் வீட்டில் யாருமே இல்லை காலப் போக்கில் பிள்ளைகள் பெரியவர்களாகி வெளியேறிவிட்டனர். மனைவிக்கும் ஒரு வேலை கிடைத்ததால் அவரும் வீட்டில் இல்லை. இப்பொழுது வீடு வெறுமையாக இருக்கிறது. அந்த நல்ல செய்தியை பகிர்ந்து கொள்ள வீட்டில் யாருமில்லை.

நம் பணியில் ஓர் நடுநிலை வகிக்க வேண்டிய அவசியத்தைப்பற்றி சாலமோன் கூறுகிறார். “மூடன் தன் கைகளைக் கட்டிக் கொண்டு தன் சதையையே தின்கிறான்” (பிர 4:5). வேலையே செய்யாத சோம்பேறியாகவும் இருக்க வேண்டாம். வேலை செய்வதையே பைத்தியமாகக் கொள்ளும் வகையில் விழவும் வேண்டாம். நடுநிலையில் இருக்க வேண்டும். “வருத்தத்தோடும் மனசஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும், அமைச்சலோடு ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம் (வச.6). வேறு விதத்தில் கூறப் போனால் கொஞ்சத்தில் மகிழ்ச்சியாயிருப்பதே நலம். வெற்றி என்னும் பலிபீடத்தில் உறவுகளை பலி செலுத்துவது ஞானமற்ற செயல். சாதனைகள் மிகத் துரிதமாக நம்மை விட்டுக் கடந்து போய்விடும். ஆனால் உறவுகளைப் பலப்படுத்துவது தான் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தையும், பலனையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும் (வச.7-12).

வேலை செய்வதற்காக வாழாமல், வாழ்வதற்காக வேலை செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்காகக் காலத்தை ஞானமாய்ப் பயன்படுத்த வேண்டும். தேவன் நம் தேவைகளைச் சந்திப்பவராகையால் அவரையே சார்ந்திருக்கவும், அவரையே நாடவும் தேவையான ஞானத்தை தேவன் கொடுக்க வல்லவர்.