நான் என் வீட்டின் ஓர் நிகழ்ச்சிக்காக, என் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது, வரும் விருந்தினர் நான் சுத்தம் செய்தவற்றை பார்க்காமல், நான் சுத்தம் செய்யாதவற்றை மாத்திரம் பார்ப்பார்கள் என்று எண்ணி மனம் தளர்ந்து போனேன். இந்த எண்ணம் வேதாந்தரீதியாகவும், ஆத்தும ரீதியாகவும் ஓர் கேள்வியை எழுப்பியது. ஏன் மக்கள் சரியானதைப் பார்க்காதவாறு, சீக்கிரம் தவறான காரியங்களையே பார்க்கிறார்கள் என்பதே. நாம் அநேகமாக அன்பான காரியங்களை ஞாபகத்தில் வைக்காமல் கொடூரமான காரியங்களையே ஞாபகத்தில் வைக்கிறோம். குற்றங்களே நம் மனதை ஈர்க்கிறதேயன்றி தயாளமான செயல்களை அல்ல. பேரழிவுகள் நம் கவனத்தை ஈர்க்கிறதே தவிர நம்மைச் சுற்றி அபரிமிதமாய் காணப்படும் அழகை கவனிப்பது கிடையாது.

நான் தேவனிடமும் இவ்வாறு தான் நடந்து கொள்கிறேன் என்று உணர்ந்தேன். அவர் எனக்குச் செய்த நன்மைகளைவிட்டு விட்டு எனக்குச் செய்யாதவைகளையே நினைக்கத் தோன்றும். எனக்கு என்ன இருக்கிறது என்பதை விட எனக்கு இல்லாதவையே பெரிதாகத் தோன்றும். அநேக சூழ்நிலைகளில் அவர் என்னை விடுவித்து காத்ததைவிட சூழ்நிலைகளிலிருந்து விடுபடாதவைதான் எனக்கு பெரிதாகக் காணப்படும்.

நான் யோபுவின் புத்தகத்தை வாசித்த பொழுது, நான் நினைத்துப் பார்க்காத அளவிற்கு, அவற்றை தேவன் விரும்பவில்லை என்பதை நினைவு கூர்ந்தேன். பல ஆண்டுகள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தபின், யோபு அடுத்தடுத்து பல பேராபத்துகளைச் சந்தித்து வேதனையுற்றான். அதுவே அவன் வாழ்க்கையின் மையக்கருத்தாகவும், உரையாடலாகவும் இருந்தது. இறுதியாக தேவன் யோபுவுடன் இடைப்பட்டு பல கடினமான கேள்விகளைக் கேட்டு, இது வரை யோபு அறிந்திராததும், அவன் காணததுமான தேவனுடைய இராஜரீகத்தையும், மற்றும் பல காரியங்களையும் அவனுக்கு நினைப்பூட்டினார் (யோபு 38-40)

எதிர்மறையான காரியங்களையே நான் முக்கியப்படுத்த முயற்சிக்கும் பொழுது, என் எண்ணங்களுக்குக் கட்டுப்பாடுவிதித்து, யோபுவின் வாழ்க்கையை எண்ணிப்பார்த்து, தேவன் பாராட்டிய, இன்னும் தொடர்ந்து பாராட்ட இருக்கும் அனைத்து அற்புதமான செயல்களையும் மனதில் கொள்ள வேண்டும்.